இளைஞர்கள் ஆபத்தை கண்டு அஞ்சாமல் முதலீடு செய்வது எப்படி..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதலீடு செய்ய வழிகள் இருக்கிறதோ இல்லையோ, முதலீடு செய்வதற்கு வயது ஒரு தடையாக இருக்காது என்பதை உறுதியாக இருங்கள்.

 

முதலீடு செய்வது என்பது தொடக்கத்தில் சிறிது அச்சுறுத்தலாக இருந்தாலும், ஒரு அன்னியமான மொழியைப் புதிதாகக் கற்பது எப்படிக் கடினமாக இருக்குமோ அப்படித்தான் இருக்கும். ஆனால் இந்த யோசனைகள் உங்களின் முதலீட்டு முறைகளைச் சீர்குலைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதனை நம்பி மட்டுமே உங்களின் வாழ்க்கை இருந்நுவிடப்போவதில்லை. ஆனாலும் பணி ஓய்விற்குப் பிறகு ஒரு சேமிப்பாகவும் அல்லது எதிர்காலத் தேவைக்கான அல்லது பாதுகாப்பிற்கான பணமாகவும் இந்த முதலீடு இருக்கும்.

25 வயதிற்குள் இருக்கும் இளைஞர்கள் முதலீடு செய்வதில் உள்ள அடிப்படை விசயங்களைத் தெரிந்துகொள்ளவும், முதலீடு செய்வதற்குப் பின்பு அனைத்து சிறந்த முதலீட்டுத் திட்டங்களை அறிவது பற்றியும் இங்கே காணலாம்.

முதலீட்டை நிர்ணயிக்கும் காரணிகள்

முதலீட்டை நிர்ணயிக்கும் காரணிகள்

உங்களின் தற்போதைய நிதி நிலைமை, எதிர்காலப் பொருளாதாரக் குறிக்கோள்கள், ஆபத்தை எதிர்கொள்ளும் திறன், உங்களின் வயது போன்ற பல்வேறு காரணிகளைச் சார்ந்துள்ளன முதலீடுகள். அதிக லாபம் பெறுவது தான் உங்கள் குறிக்கோள் என்றால், அதற்குச் சிறந்த வழியான பங்குச்சந்தையின் பங்குகளில் நீங்கள் முதலீடு செய்வதற்குத் தொழில்முறை வல்லுநர்கள் மற்றும் நிதி மேலாளர்கள் ஆலோசனையைப் பெறலாம்.

SIP முறை சிறந்தது...

SIP முறை சிறந்தது...

நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யவேண்டுமென்றால், முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டங்களை ( systematic investment plan) தேர்வு செய்வதன் மூலம் தொடர்ந்து சீராகப் பணத்தை முதலீடு செய்து வரலாம்.இதில் உள்ள சராசரி பணமதிப்பு வசதி உங்களுக்கு மிகவும் சாதகமான ஒன்றாக இருக்கும்.

முதலீடு செய்யும் முன் கவனத்தில் கொள்ளவேண்டியவை
 

முதலீடு செய்யும் முன் கவனத்தில் கொள்ளவேண்டியவை

முதலீடுகளில் உள்ள சிறப்பான விசயம் என்னவென்றால், பணவீக்கத்தின் போது தற்காத்துக்கொள்ள உள்ள வெகுசில வழிகளில் இதுவும் ஒன்று. பணவீக்கத்தில் இருந்து தப்பிப்பது மட்டுமின்றி, உங்கள் முதலீட்டு பணமும் வேகமாக வளரும் என்பதால் இந்த முதலீடுகள் கண்டிப்பாக உங்களுக்கு உதவியாக இருக்கும்.

ஆபத்து

ஆபத்து

முதலீடுகளில் எப்போதும் ஆபத்து இருக்கும் எனக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒன்றை மட்டும் நினைவிற்கொள்ளுங்கள். லாபம் பெறவேண்டும் என்றால் சிறிது ஆபத்தை எதிர்கொள்வது கடினமில்லையே. உங்களில் முதலீடுகளில் லாபமோ நஷ்டமோ, அதில் ஆபத்து உள்ளது என்பதற்காக அதை முயற்சி செய்யக்கூடாது என்பது இல்லையே. ஏனெனில் எப்போதும் பாதுகாப்பாகவே இருக்க வேண்டும் என நினைப்பது ஒன்றுக்கும் உதவாது. பிறகென்ன உங்கள் பணக்கார கனவு கனவே தான். முதலீடுகள் பற்றிய சில விளக்கங்கள் கீழே

பத்திரங்கள் (Securities):

பத்திரங்கள் (Securities):

யாராவது பத்திரங்கள் பற்றிப் பேசும் போது ஒன்றும் புரியவில்லையா? கவலை வேண்டாம். ஒப்பந்த பத்திரம் மற்றும் பங்குகள் போல முதலீட்டுப் பத்திரங்களும் ஒரு நிதி உபகரணம் தான்.

பங்குகள் (Stocks):

பங்குகள் (Stocks):

பங்குகள் என்பது ஒரு நிறுவனத்தின் சிறு பகுதி என்று கூறலாம். எனவே நீங்கள் ஒரு பங்கை வாங்கினால், அந்த நிறுவனத்தை ஒரு பகுதி உரிமையைப் பெறுவீர்கள். பெரிய அளவிலான உரிமை இல்லாவிட்டாலும் கண்டிப்பாகச் சிறு முக்கியத்துவம் இருக்கும். அதன் மூலம் லாபமோ நஷ்டமோ பெரிய அளவில் கிடைக்கும்.

ஒப்பந்த பத்திரங்கள் (Bonds):

ஒப்பந்த பத்திரங்கள் (Bonds):

இந்தப் பத்திரங்களை வாங்குவதன் மூலம் நீங்கள் அந்த நிறுவனத்திற்குக் கடன் வழங்குகிறீர்கள். நீங்கள் அந்தப் பத்திரத்தின் மீது கடன் வழங்குவதால், வட்டியுடன் சேர்த்து குறிப்பிட்ட கால அளவிற்குள் அந்நிறுவனம் உங்களுக்குத் திருப்பிசெலுத்த வேண்டும்.

முதலீட்டின் மீதான வருமானம் (Return on investment):

முதலீட்டின் மீதான வருமானம் (Return on investment):

இதன் மூலம் உங்கள் முதலீடு எவ்வாறு செயல்படுகிறது என அறியலாம். ஆதாயமடையும் வருமானத்தை அதன் விலையுடன் வகுத்து முதலீட்டின் மீதான வருமானத்தைக் கணக்கிட்டால், எவ்வளவு பணம் கிடைக்கும் என்பதை அறியலாம். ஒவ்வொரு முதலீட்டுக்கு அடிப்படை முதலீட்டு வழிமுறைகள் உள்ளது. அதைப்பற்றி விரிவாகப் பார்ப்போம்.

கட்டணம்:

கட்டணம்:

முதலீடு செய்வது என்பது இலவச சேவை அல்ல. முதலீட்டு கருவிகளை வாங்கும் போதும் விற்கும் போதும் தரகர்கள் கட்டணங்களை வசூலிப்பர். இந்தக் கட்டணங்களை நீங்கள் முதலீடு செய்யும் வகை மற்றும் சேவை வழங்குவோரின் கட்டண அட்டவணையைப் பொறுத்து வேறுபடும்.

உதவி:

உதவி:

தொழில்முறை நிதி மேலாளர்கள் தொகுத்துள்ள பத்திரங்களின் குழுவே பரஸ்பர நிதி. எனவே உங்களுக்காக முதலீடுகளை அவர்கள் கவனித்துக் கொள்வார்கள் என்பதால் பணத்தை இழந்துவிடவோம் என்ற கவலை வேண்டாம்.

வரிகள்:

வரிகள்:

உங்கள் முதலீடுகளின் மூலம் கிடைக்கும் வருவாயின் அடிப்படையில் வரி செலுத்தவேண்டும். வரிவிகிதங்கள் நீங்கள் முதலீடு செய்யும் வகையைப் பொறுத்தது. குறுகிய கால மூலதன வருமானம் என அழைக்கப்படும் பங்கு முதலீடுகளுக்கு 15% வரிவிதிக்கப்படும். நீண்ட கால முதலீட்டு வருமானங்களைப் பொறுத்தவரை ரூ1 லட்சம் வரை வரிவிலக்கு கிடைக்கும். அதற்கு மேல் 10% வரி விதிக்கப்படும். எனவே முதலீடு செய்யும் முன்னர் வரிவிதிப்புகளை நன்கு அறிந்து முதலீடு செய்யவேண்டும்.

முதலீட்டுத் தந்திரங்கள்

முதலீட்டுத் தந்திரங்கள்

வெகுவிரைவாகத் துவங்குவது என்பது உங்களை நிரூபிக்க மிகப்பெரிய அனுகூலமாக இருக்கும். 20 வயதுகளில் இருக்கும் நீங்கள், லாபமோ நஷ்டமோ எது வந்தாலும் அதைச் சரிசெய்து கொள்ளவும், உங்கள் பணத்தைத் திரும்ப எடுக்கவும் நிறைய நேரம் கிடைக்கும். எனவே சொத்துக்களை சேர்ப்பதில் கவனம் செலுத்துங்கள்.

நீண்டகால முதலீடு

நீண்டகால முதலீடு

நீங்கள் நீண்டகால முதலீடுகளுக்குத் திட்டமிட வேண்டும். பொறுமையாக அதிக நேரம் எடுத்துக்கொண்டு சந்தை நிலவரத்தை நன்கு கணித்து முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம். முதலீடு செய்யும் போது நன்கு திட்டமிட்டு, குறிக்கோள்களை வகுத்து, வல்லுநர் ஆலோசனை பெற்று பாதுகாப்பாகப் பங்குச்சந்தையுடன் விளையாடுங்கள்.

சிறந்த முதலீடுகள் எப்படி?

சிறந்த முதலீடுகள் எப்படி?

1) ஈ.எல்.எஸ்.எஸ், பங்குகளுடன் இணைந்த பரஸ்பர நிதி, முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டம்(SIP) போன்ற முதலீடுகள் மூலம் வரியைச் சேமிக்கலாம்.

2) உங்களுக்குத் தகுந்த மற்றும் நன்கு ஆராய்ந்த பங்குகளில் முதலீடு செய்யலாம்

3) பொதுவான எல்.ஐ.சி காப்பீடு திட்டத்தைக் காட்டிலும் யூலிப் உடன் இணைந்த காப்பீட்டு (ULIP link insurance ) திட்டத்தில் முதலீடு செய்யுங்கள்.

4) உங்கள் ஆறு மாத சம்பளத்திற்கு ஈடான ஆபத்துக் காலங்களில் பயன்படுத்தும் பணத்தை உருவாக்க முதலீடு செய்யுங்கள். இதன் மூலம் வேலை இழப்பு அல்லது அது போன்ற சோதனையான காலத்தில் உதவியாக இருக்கும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Investment Guide for a 25 Year Old

Investment Guide for a 25 Year Old - Tamil Goodreturns | 25 வயது இளைஞர்கள் ஆபத்துகளை கண்டு அஞ்சாமல் முதலீடு செய்வது எப்படி..? - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X