உஷார்.. விரைவில் ரயில் டிக்கெட் புக் செய்ய ஆதார் கார்டு கட்டாயமாக்கப்படலாம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரயில் டிக்கெட் புக் செய்யும் போது ஏற்படும் மோசடிகளைத் தவிர்ப்பதற்காக விரைவில் ஆதார் எண் கடயமாக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன் தளத்திற்குக் கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.

உஷார்.. விரைவில் ரயில் டிக்கெட் புக் செய்ய ஆதார் கார்டு கட்டாயமாக்கப்படலாம்!

அன்மையில் சல்மான் கான் என்ற நபர் ஒருவர் மிகப் பெரிய அளவில் மோசடி செய்தது கண்டறியப்பட்டு மே 2-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். இவர் உருவாக்கிய மென்பொருள் பயன்படுத்தி மோசடி வழியில் அதிக ரயில் டிக்கெட்டினை ஒரே நேரத்தில் புக் செய்ய 5,400 முகவர்களைப் பெற்றுள்ளார். ஒவ்வொரு முகவர்களிடம் இருந்து மாத கட்டணமாக 700 ரூபாய் பெற்று வந்துள்ளார். சல்மான் கானை கைது செய்த போது 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான 6,000 இ-டிக்கெட்கள் இவர் வசம் இருந்தது என்றும் தெரிவித்துள்ளனர்.

ஐஆர்சிடிசி மற்றும் மத்திய ரயில்வே அதிகாரிகள் இடையில் திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இது போன்ற மோசடிகளை எப்படித் தவிர்ப்பது என்றும் விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது ஆதார் இணைப்பைச் செய்வதன் மூலம் இது போன்ற மோசடிகளைத் தவிர்த்துப் பாதுகாப்பை அதிகரிக்க முடியும் என்றும் ஆதார் ஒரு முறை கடவுச்சொல் தேவைப்படும் நிலை ஏற்படும் தெரிகிறது.

குற்றம்சாட்டப்பட்ட சல்மான கான் விற்ற மென்பொருள்களைப் பயன்படுத்தும் முகவர்களை என்ன செய்வது என்பதற்கு ஐபி முகவரிகளைக் கட்டுப்படுதலாம் என்று தெரிவித்த நிலையில் ரயில்வே அமைச்சகம் அதற்காக எந்த நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது. ஆனால் சல்மான் கான் கூறியுள்ள ஆலோசனைகளைப் பின்பற்றித் தான் இந்த மோசடி வழியை நிறுத்த இருக்கும் பணிகளை மேற்கொள்ள இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

AADHAAR MAY BECOME MANDATORY TO BOOK RAIL TICKETS

AADHAAR MAY BECOME MANDATORY TO BOOK RAIL TICKETS
Story first published: Tuesday, May 8, 2018, 16:58 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X