அடேங்ப்பா... அவெஞ்சர்ஸ் படத்தில் நடிக்க ஸ்கார்லெட் ஜான்சன் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?

By Valliappan N
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

    அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் திரைப்படம் வெளியாகி 2 வாரம் தான் ஆகிறது, ஆனால் அதற்குள் 1 பில்லியின் டாலர்களைச் சம்பாதித்து விட்டது. இப்போதுவரை அதிகம் சம்பாதித்த படத்தின் பட்டியலில் டாப் 5 இடத்தில் இடம்பிடித்துள்ளது. ஆனால் இந்த பணம் அனைத்தும் தயாரிப்பு நிறுவனத்தின் கைகளுக்கு தான் சென்று இருக்கும், ஏன் என்றால் மார்வல் ஸ்டுடியோஸ் இடம் பணம் சம்பாதிக்கும் திறம் மிகவும் அதிகம்.

    உலகின் மிகப் பெரிய நட்சத்திரங்களை வைத்து எடுக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. ஆகையால் இதன் பட்ஜெட்டும் மிகப் பெரியது. இந்தப் படத்தின் இயக்குநர் கூறுகையில் படத்தின் மொத்த செலவில் 300-400 மில்லியன் டாலரைச் சம்பளமாக இதில் நடித்தவர்களுக்கு அளித்தோம் என கூறியுள்ளார்.

    அப்படி அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படத்தில் நடித்த முன்னணி நடிகர்கள் வாங்கிய சம்பள விபரம் பற்றிய முழு விபரத்தை பார்ப்போம்.

    கேப்டன் அமெரிக்கா - கிரிஸ் எவன்ஸ்

    இவர் தான் அவெஞ்சர்ஸ்-இன் தலைவர் ஆனால் சம்பளம் என்று வரும்போது இவர் தொண்டன் இடத்தில் தான் இருக்கிறார். இந்தப் படத்தில் நடித்த கிரிஸ் எவன்ஸ்-க்கு 8 மில்லியன் டாலர் சம்பளம் அளிக்கப்பட்டது, இது இவரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கேப்டன் அமெரிக்கா திரைப்படத்திற்கு அழிக்கப்பட்ட சம்பளத்தை விட மிகவும் அதிகம்.

    தோர் - கிரிஸ் ஹெம்ஸ்ஒர்த்

    கிரிஸ் ஹெம்ஸ்ஒர்த் சில மாதங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் தோர்- ராக்நரோக், இது ஒரு வெற்றிப் படம். தோர் படத்துக்கு இவருக்கு 31 மில்லியன் டாலர் சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால் அவெஞ்சர்ஸ் படத்துக்கு 12 மில்லியன் டாலர் பெற்றுள்ளார்.

    பிளாக் பாந்தர்- சாட்விக் போஸ்மேன்

    இவரின் முதல் அவெஞ்சர்ஸ் திரைப்படமான பிளாக் பாந்தர் மிகப்பெரிய வெற்றி, ஏறத்தாழ 1 மில்லியன் டாலரைத் தொட்டது இப்படத்தின் வசூல். பிளாக் பாந்தர், சாட்விக் போஸ்மேன்-க்கு முதல் அவெஞ்சர்ஸ் படம் என்பதால் மில்லியனிக்கும் குறைவான சம்பளம் தான் தரப்பட்டது ஆனால் பிளாக் பாந்தர் வெற்றியைத் தொடர்ந்து அவெஞ்சர்ஸ்-இல் நடித்த இவருக்கு 2-3 மில்லியன் டாலர் சம்பளம் தரப்பட்டதாகத் தகவல் தெரிவிக்கிறது.

    தி ஹல்க் - மார்க் ரஃப்லோ

    அவெஞ்சர்ஸ் படத்தில் இவர் தான் அனைத்தையும் அடித்து உடைப்பவர் அதனாலேயே என்னமோ இவர்க்குக் குறைந்த சம்பளம் தான். மற்றொரு முக்கிய அவெஞ்சர்ஸ்-இல் ஹல்க் கேரக்டர் உருவாக்கத் தான் அதிக செலவு செய்யப்பட்டுள்ளது ஆனால் அவரின் சம்பளமோ அந்த அளவுக்கு இல்லை. மார்க் ரஃப்லோவின் ஹல்க் வேடத்திற்குப் பெற்ற சம்பளம் 5-6 மில்லியன் டாலர்.

    பிளாக் விடுவ்- ஸ்கார்லெட் ஜான்சன்

    அதிக சம்பளம் வாங்கும் பெண் அவெஞ்சர் இவர் தான். மற்ற இரு பெண் அவெஞ்சர்கள் உடன் ஒப்பிடும்போது ஸ்கார்லெட் ஜான்சனின் சக்தி இந்தப் படத்தில் மிக அதிகம். சக ஆண் அவெஞ்சர்களுடன் இணையாக போட்டிபோட்டு நடிக்கும் திறனை கொண்டதனால் இவர்க்கு 20 மில்லியன் டாலர் அளவுக்குச் சம்பளம் வழங்கப்படுகிறது.

    டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் - பெனெடிக் கும்பர்பேட்ச்

    இவரின் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படம் மிகப் பெரிய வெற்றிப் படம் தான், அதற்கு மிகப் பெரிய அளவில் சம்பளம் பெற்றார். அவெஞ்சர்ஸ் படத்தில் நடிப்பதற்கு முன்பே இவருக்கு நிறையப் புகழ் கிடைத்தது. ஆனால் அதன் தாக்கம் இந்தப் படத்தில் எதிரொலிக்கவில்லை அதனால் இவர்க்கு 5 மில்லியன் டாலர் மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டது.

    தனோஸ் - ஜோஷ் ப்ரோலின்

    ஜோஷ் ப்ரோலின் இதற்கு முந்தைய அவெஞ்சர்ஸ் படங்களில் ஒரு சில முடிவுரை காட்சிகளில் இடம்பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து இன்பினிட்டி வாரில் முழுமையான கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்து இருக்கிறார். ஆனால் அதற்காக மிகப்பெரிய தொகையைக் கொடுப்பார்களா என்ன? படத்தில் அதிக நேரம் தோன்றிய இவருக்கும் குறைந்த சம்பளம் என்றே கூறலாம். இவர்க்கு 5 மில்லியன் டாலர் அளித்தனர்.

    லோகி - டாம் ஹிடில்ஸ்டன்

    தனோஸ் வருவதற்கு முன்பு வரை இவர் தான் மிக அதிகமாகப் பேசப்பட்ட வில்லன் கதாப்பாத்திரம். அவெஞ்சர்ஸ் (இன்பினிட்டி வார்) படத்திற்கு இவர்க்கு 8 மில்லியன் டாலர் சம்பளம் தரப்பட்டுள்ளது. சிறிய நேரம் திரையில் தோன்றியவர்க்கு அதிக சம்பளம் என்றால் அது இவர்க்குத் தான்.

    ஸ்டார் லார்ட் - கிறிஸ் பிரட்ட

    கிறிஸ் பிரட்ட வெளியுலகத்திற்குத் தெரிய ஆரம்பித்ததே கார்டியன்ஸ் ஆப் தி கேலக்சி படத்திற்குப் பின் தான். இவர் நடித்த ஜுராசிக் பார்க் படம் கூட வெற்றி தேடித்தந்தது. ஆனால் அவெஞ்சர்ஸ்யில் நடித்த பிறகு தான் புகழின் உச்சிக்கே சென்றார். கார்டியன்ஸ் ஆப் தி கேலக்சி படத்திற்கு 1.5 மில்லியன் டாலர் சம்பளம் பெற்றுள்ளார் அதற்குப் பிறகு நான்கு வருடம் கழித்து வெளிவந்திருக்கும் இந்த அவெஞ்சர்ஸ் படத்திற்கு 5 மில்லியன் டாலர் வாங்கியுள்ளார்.

    ஸ்பைடர் மேன் - டாம் ஹொலாந்து

    இவர் அவெஞ்சர்ஸ் படத்தின் மிக இளமையான சூப்பர் ஹீரோ. இவரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட வெற்றி படமும் உண்டு. ஸ்பைடர் மேன் கதாப்பாத்திரம் மிகப் பிரபலம் என்பதால் இவருக்கு அதிக சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர்கள் தள்ளப்பட்டனர். இவரின் முதல் படமே ஒரு மிக பெரிய வெற்றி. அது மட்டும் உலக பிரபலமான ஸ்பைடர் மேன் வேடம் வேறு. இதனால் இவர்க்கு அவெஞ்சர்ஸ் படத்தில் 3 மில்லியன் டாலர் சம்பளம் தரப்பட்டது.

    ஐயன் மேன் - ராபர்ட் டவ்னி ஜூனியர்

    அவெஞ்சர்ஸில் மிக முக்கியமான நபர் ஐயன் மேன். இவரின் சம்பளம் துள்ளியமாக வெளிவரவில்லை, ஏறத்தாழ இவருக்கு 50 மில்லியன் டாலர் தரப்பட்டிருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.

    இவர் நடித்த ஐயன் மேன் பட வரிசையில், படத்திற்கு படம் இவர் சம்பளம் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. மார்வெல் கதாபாத்திரங்களிலேயே இவர் தான் அதிகம் சம்பளம் பெறுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன் போட்டிபோட ஒரேஒருவர் தான் உள்ளார் அவர் யார் என்று தெரிந்தால் மிகவும் ஆச்சர்யபடுவீர்கள்.

     

    குரூட் - வின் டீசல்

    கார்டியன் ஆஃப் கேலக்சி போன்ற படங்களில் எல்லாம் ஐயம் குரூட், ஐயம் குரூட் என்று வசனம் பேசி காமெடி செய்து கடைசி நேரத்தில் அதிரடி காட்டும் குரூட் கதாபாத்திரத்திற்குத்தான் அவெஞ்சர்ஸ் உலகில் அதிக சம்பளம் .

    இந்த கதாபாத்திரத்தை பின்னில் இருந்து நடித்துக் கொடுப்பது வின் டீசல். சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான வின் டீசல், இந்த படத்திற்கு 54 மில்லியன் டாலருக்கும் அதிகமாக வாங்கியுள்ளார். இவர் கடந்த கார்டியன்ஸ் ஆஃப் கேலக்சி படத்திலேயே 52 மில்லியன் சம்பளம் வாங்கினார்.

     

    தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

    English summary

    salary of superheros acted in avengers infinity war movie

    salary of superheros acted in avengers infinity war movie
    Company Search
    Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
    இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?
    Thousands of Goodreturn readers receive our evening newsletter.
    Have you subscribed?

    Find IFSC

    Get Latest News alerts from Tamil Goodreturns

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more