வால்மார்ட்டுக்கு தெரிந்தது அம்பனிக்கும், டாடாக்கும் தெரியாம போச்சே..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரண்டு இளைஞர்கள் சேர்ந்து ஆன்லைன் புக் ஸ்டோராகத் துவங்கிய பிளிப்கார்ட் நிறுவனத்தினை 10 வருட வளர்ச்சி பயணத்திற்குப் பின் அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் 16 பில்லியன் டாலர் கொடுத்து 77 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது.

வால்மார்ட் நிறுவனம் பிளிப்கார்ட் நிறுவனத்தினை வாங்கியிருப்பது உலகின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவன கையகப்படுத்தல் ஆகப் பார்க்கப்படுகிறது. இதனை வைத்துப் பார்க்கும் போது இந்தியர்களின் நிறுவனங்களை விற்கும் போது முதலீட்டாளர்களுக்குப் பல மடங்குகள் லாபம் கிடைப்பது என்பதும் நிச்சயம்.

இந்திய நிறுவனத்தின் மதிப்பை அறிந்த வெளிநாட்டு நிறுவனம்

இந்திய நிறுவனத்தின் மதிப்பை அறிந்த வெளிநாட்டு நிறுவனம்

இந்தியாவில் உள்ள மிகப் பெரிய நிறுவனங்கள் எல்லாம் பிளிப்கார்ட் நிறுவனத்தினை வாங்க முயற்சிகள் எடுக்காத நிலையில் அமெரிக்க நிறுவனங்களான வால்மார்ட் மற்றும் அமேசான் உள்ளிட்டவை போட்டி போட்டன. ஏன் பிளிப்கார்ட்டின் வளர்ச்சி மற்றும் சந்தை மதிப்பு குறித்து இந்திய பிஸ்னஸ் ஜாம்பவான்களுக்கு எட்டவில்லை என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று எப்போதும் போல வெளிநாட்டு காரனுக்கு இந்தியர்களின் அருமை புரிந்துள்ளது.

வானத்தில் பறக்கும் முதலீட்டாளர்கள்

வானத்தில் பறக்கும் முதலீட்டாளர்கள்

பிளிப்கார்ட் நிறுவனத்தில் முதலீடு செய்து இருந்த சாப்ட்பாங்க், தென் ஆப்ரிக்க ஊடக குழுமம் நாஸ்பர்ஸ், சீன தகவல் பரிமாற்ற செயலியான வீசாட், அமெரிக்க நிறுவனமான மைக்ரோசாப்ட் உள்ளிட்டவர்கள் தங்களது முதலீட்டின் மீது இவ்வளவு லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் தற்போது இவர்களுக்குக் கிடைத்துள்ள மதிப்பைப் பார்த்து வானத்தில் பறக்குகிறார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

 உள்ளூர் கார்ப்ரேட் நிறுவனங்கள்
 

உள்ளூர் கார்ப்ரேட் நிறுவனங்கள்

இந்திய நிறுவனங்களில் பிள்ப்கார்ட் மிகப் பெரிய அளவில் வளர்ந்துள்ள நிலையில் உள்ளூர் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு வரும் நாட்களில் இ-காமர்ஸ் உலகில் மிகப் பெரிய வாய்ப்புகள் எல்லாம் காத்திருக்கின்றன என்று முதலீட்டாளர்கள் கூறுகின்றனர்.

முன்னால் ஊழியர்கள் என்ன செய்கிறார்கள்?

முன்னால் ஊழியர்கள் என்ன செய்கிறார்கள்?

பிளிப்கார்ட் மற்றும் மிந்த்ரா நிறுவனத்தில் இருந்து வெளியேறிய முன்னால் ஊழியர்கள் மட்டும் 53 ஸ்டார்ட்அப் நிறுவனங்களைத் துவங்கியுள்ளனர் என்ற விவரம் ஆச்சர்யத்தினை அளிக்கின்றன. அதில் முக்கியமானவை ஸ்விகி, உதான், ஜெஃபோ, ரெண்ட்மோஜோ, க்யூர்ஃபிட் போன்ற நிறுவனங்கள் ஆகும்.

பிளிப்கார்ட் நிறுவனர்கள்

பிளிப்கார்ட் நிறுவனர்கள்

பிளிப்கார்ட் நிறுவனர்களான சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் இருவரும் பல வெளி நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளனர். சச்சின் பன்சால் 23 நிறுவனங்களிலும், பின்னி பன்சால் 20 நிறுவனங்களிலும் என முதலீடு செய்துள்ளனர். அதில் 11 நிறுவனங்களில் இருவரும் பொதுவாக முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்

இந்தியாவில் 2015-ம் ஆண்டு 13,685 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் துவங்கப்பட்டதாகவும் அதில் 20 சதவீதம் இ-காமர்ஸ் நிறுவனங்கள் என்றும் தரவுகள் கூறுகின்றன. இதுவே 2017-ம் ஆண்டு நிறுவனங்களின் தரம் மற்றும் முதலீடுகள் போன்றவற்றால் 2,671 ஆகச் சரிந்துள்ளது.

ஐபிஓ

ஐபிஓ

பிளிப்கார்ட் நிறுவனம் ஐபிஓ-ல் இறங்கி சந்தையில் உள்ள சறுக்கல்களில் சிக்காமல் முதலீடுகளைப் பெற்று இன்று கிட்டத்தட்ட 21 பில்லியன் டாலர் மதிப்பினை பெற்றுள்ளது ஆச்சர்யத்தினை ஏற்படுத்துகிறது. லாபம் அளிக்கும் நிறுவனம் என்றால் ஐபிஓ எல்லாம் தேவையில்லை என்பதற்குப் பிளிப்கார்ட் ஒரு மிகப் பெரிய உதாரணம் ஆகும்.

இந்திய இ-காமர்ஸ் நிறுவனங்கள்

இந்திய இ-காமர்ஸ் நிறுவனங்கள்

பிளிப்கார்ட்-வால்மார்ட் நிறுவனம் டீல் முடிவைப் பார்த்த இந்திய இ-காமர்ஸ் நிறுவனங்கள் இன்னும் வேகமாகத் தங்களது நிறுவனத்தினை வளர்ச்சி பாதைக்குக் கொண்டு செல்ல முயல்வார்கள். அதற்கு இவர்களுக்குத் தேவையான நிதி தொழில்நுட்பங்கள், மருத்துவத் தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு வணிகங்கள் அனைத்தும் இந்தியாவில் உள்ளது.

ஏஞ்சல் முதலீடு

ஏஞ்சல் முதலீடு

பிளிப்கார்ட்டின் விற்பனை ஏஞ்சல் முதலீட்டாளர்கள் மத்தியில் இந்திய நிறுவனங்கள் மீது பெறும் மதிப்பை அளித்துள்ளது என்றும் கூறலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Flipkart Sale: Walmart got to know that Ambani did not know

Flipkart Sale: Walmart got to know that Ambani did not know
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X