இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் ரவி வெங்கடேஷன்.. யார் இவர்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய நிறுவனமாக உள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் ரவி வெங்கடேஷன் பல்வேறுபட்ட அனுபவத்துடன் வணிகத் தலைவராகவும் போர்டு உறுப்பினராக இருந்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை இராஜினாமா செய்துள்ளார்.

ஐஐடி பாம்பே, ஹார்வார்டு பல்கலைக்கழகம் போன்றவற்றில் படித்த ரவி வெங்கடேஷன் மைக்ரோசாப்ட் இந்தியாவின் தலைவராகவும் இருந்துள்ளார். பாங்க் ஆ பரோடா போன்ற வங்கிகளில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

திறன்

திறன்

கிளவுட் கம்ப்யூட்டிங், மேலாண்மை ஆலோசனை, மூலோபாயம் தயாரித்தல், மாற்றம் மேலாண்மை மற்றும் வணிக நுண்ணறிவு போன்ற நிபுணத்துவத் திறன்களை நிபுணரானவர் ரவி வெங்கடேஷன்.

மைக்ரோசாப்ட் இந்தியா

மைக்ரோசாப்ட் இந்தியா

கம்மின்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவராக 1996 முதல் 2003 வரை இருந்த இவர் 2001-2012 மைக்ரோசாப்ட் இந்தியாவின் தலைவராகப் பதவிஏற்றார்.அதன் பின் ரவி வெங்கடேஷன் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் போர்டு உறுப்பினர்களில் ஒருவராகவும் இருந்து வந்துள்ளார். 2007-2014 காலக் கட்டத்தில் ரவி வெங்கடேஷன் வோல்வோ நிறுவனத்தின் போர்டு உறுப்பினராக இருந்துள்ளார்.

புத்தகம்
 

புத்தகம்

ரவி வெங்கடேஷன் எழுதிய‘Conquering the Chaos: Win in India, Win Everywhere' என்ற புத்தகத்தினை 2013-ம் ஆண்டு ஹார்வர்ட் பிஸ்னஸ் ரிவ்யூவ் பிரஸ் வெளியிட்டது.

நந்தன் நீலகேனி

நந்தன் நீலகேனி

ரவி வெங்கடேஷன் வெளியேறுவது குறித்துக் கருத்து தெர்வித்த இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவரான நந்தன் நீலகேனி இவரது உணர்ச்சி, மூலோபாய நுண்ணறிவு மற்றும் தனிப்பட்ட அரவணைப்பை இழக்கிறோம் என்றும் நண்பராகத் தொடர்ந்து இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவராக நந்தன் நீலகேனி பொருப்பேற்ற பிறகு வெளியேறும் முதல் போர்டு குழு உறுப்பினர் ரவி வெங்கடேஷன் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Ravi Venkatesan quits Infosys board

Ravi Venkatesan quits Infosys board
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X