ஒவ்வொரு நொடிக்கும் 1 லட்சம்.. ஐபிஎல் போட்டியால் கல்லாகட்டும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஐபிஎல் டி20 போட்டிகள் பொதுவாக 90 நிமிடங்கள் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும். அதற்கு ஸ்டார் இந்தியா நிறுவனமும் விதிவிலக்கல்ல. இதுவே போட்டி நேரம் அதிகமானால் அதிலும் விளம்பரம் மூலம் பணத்தினை டிவி நிறுவனங்கள் அல்லும்.

 

10 சேனல்

10 சேனல்

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியினை ஸ்டார் இந்தியா தனது 10 சேனல்களில் ஒளிபரப்புச் செய்து வருகிறது. அதில் ஒரு போட்டிக்கு 3000 நொடிகள் வரை விளம்பரம் பெறுகிறது என்றும் ஸ்டார் ஊழியர் ஒருவர் அளித்த தகவல் கூறுகின்றன.

விளம்பரம் இல்லா சேனல்கள்

விளம்பரம் இல்லா சேனல்கள்

ஸ்டார் இந்தியா நிறுவனம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலெக்ட் எச்டி சேனல்களில் விளம்பரம் இல்லாமல் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புச் செய்து வருகிறது. இந்தச் சேனல்களை டிடிஎச் மூலம் பெறும் போது கூடுதல் கட்டணம் வாடிக்கையாளர்கள் அல்லது டிடிஎச் நிறுவனங்கள் செலுத்த வேண்டும்.

கூடுதல் வருவாய்
 

கூடுதல் வருவாய்

ஸ்டார் நிறுவனம் ஒரு போட்டிக்குக் குறைந்தது 1 முதல் 3 கோடி ரூபாய் வரை ஒரு போட்டிக்கு எனக் கூடுதல் வருவாயினைப் பெறும் என்று ஊடக துறை சார்ந்த வல்லுனர்கள் கூறுகின்றனர்.

விளம்பர கட்டணம் எவ்வளவு?

விளம்பர கட்டணம் எவ்வளவு?

ஐபிஎல் போட்டி விளம்பரம் மூலமாக 2,000 கோடி ரூபாயினை வருவாயாகப் பெறுவது என்று இலக்கினை ஸ்டார் இந்தியா வைத்துள்ள நிலையில் 10 நொடி விளம்பரத்திற்கு 10 லட்சம் ரூபாய் என டிவி மற்றும் டிஜிட்டல் விளம்பரங்களுக்காகப் பெறுகிறது. இதுவே ஒரு போட்டிக்குக் கூடுதலாக 400 நொடிகள் விளம்பரம் கிடைத்தால் எவ்வளவு வருவாயினைப் பெரும் என்றும் கணக்கிட்டுக்கொள்ளுங்கள் என்கின்றனர்.

 மின்னஞ்சல்

மின்னஞ்சல்

இது குறித்து மின்னஞ்சல் மூலமாக ஸ்டார் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் சஞ்ய் குப்தா மற்றும் பிசிசிஐ முதன்மை இயக்குனரிடம் கேள்வி கேட்டதற்குப் பதில் ஏதும் அளிக்கவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IPL match boradcast adverisement charges in Star Sports

IPL match boradcast adverisement charges in Star Sports
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X