ப்ரியா ஸ்வீடி கணக்கை முடக்கியது பேஸ்புக்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புத்தகத்தையே திறக்காத பலருக்குத் தற்போது பேஸ்புக் கணக்குகள் உள்ளது. பொழுதுபோக்கிற்காகத் துவங்கப்பட்ட பேஸ்புக் கணக்குகள், தற்போது மக்களின் விருப்பங்களை ஆய்வு செய்து அமெரிக்கத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கேபம்பிரிட்ஜ் அனலிட்டிகா பேஸ்புக் மோசடிகள் தற்போது மக்கள் மத்தியில் பெரிய அளவிலான அதிர்ச்சியை அளித்துள்ளது.

 

இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்த பின்பு பேஸ்புக் பல மாற்றங்களைச் செய்து வருகிறது. இதில் ப்ரியா ஸ்வீடி கணக்கும் அடக்கம்.

போலி கணக்குகள்

போலி கணக்குகள்

பேஸ்புக்கில் இருக்கும் போலி கணக்குகளுக்கு இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் பெயர் ப்ரியா ஸ்வீடி தான். இதற்கு முக்கியக் காரணம் பேஸ்புக் துவங்கப்படும் பெரும்பாலான போலி கணக்குகளுக்கு வைக்கப்படும் பெயர் ப்ரியா அல்லது பெயருக்குப் பின்னால் ஸ்வீடி என்பது இருக்கும்.

மாற்றங்கள்

மாற்றங்கள்

கேபம்பிரிட்ஜ் அனலிட்டிகா பிரச்சனைக்குப் பின்பு பேஸ்புக் மிகவும் கவனமான முறையில் இயங்கி வருகிறது. தற்போது கம்யூனல் ஸ்டான்டர்ஸ் அடிப்படையில் பாலியல் அல்லது வன்முறை படங்கள், பயங்கரவாத பிரச்சாரம் அல்லது வெறுப்பு பேச்சு ஆகியவற்றில் இருந்து மக்களைக் காப்பதற்றாகப் பேஸ்புக் நிர்வாகம் 2018இல் முதல் 3 மாதத்தில் மட்டும் சுமார் 58.3 கோடி போலி கணக்குகளை முடக்கியுள்ளது.

 புதிய கணக்குகள்
 

புதிய கணக்குகள்

அதேபோல் இக்காலகட்டத்தில் போலி கணக்குகளை உருவாக்க திட்டமிடுவோரின் 100 கோடிக்கும் அதிகமான கோரிக்கையைப் பேஸ்புக் நிராகரித்துள்ளது.

பேஸ்புக் கணக்குகள்

பேஸ்புக் கணக்குகள்

தற்போது பேஸ்புக் நிறுவனத்தில் இருக்கும் கணக்குகளில் 3-4 சதவீதம் போலி கணக்குகள் தான் பேஸ்புக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பதிவுகள்

பதிவுகள்

இதுமட்டும் அல்லாமல் மார்ச் வரையிலான காலத்தில் 100 சதவீத SPAM பதிவுகளையும் பேஸ்புக் கண்டறிந்துள்ளது. இதில் 83.7 கோடி பதிவுகளைப் பேஸ்புக் நிரந்தரமாக நீங்கியுள்ளது.

இதுமட்டும் அல்லாமல் பாலியல் அல்லது வன்முறை படங்கள், பயங்கரவாத பிரச்சாரம் அல்லது வெறுப்புப் பேச்சுகளில் ஈடுபட்டுள்ள சுமார் 3 கோடி பேஸ்புக் வாடிக்கையாளர்களுக்கு (Users) எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு

பேஸ்புக் தளத்தில் போலி கணக்குகள், தவறான செய்திகளைக் கண்டறியச் செயற்கை நுண்ணறிவு மேம்படுத்தட்டப்பட்ட காரணத்தால் 2017ஆம் நிதியாண்டின் கடைசிக் காலாண்டை விடவும் அதிகமான செய்திகளையும், போலி கணக்குகளையும் கண்டறிந்துள்ளது.

செயலிகள்

செயலிகள்

அதேபோல் வாடிக்கையாளர்களின் தகவல்களைத் தவறாகப் பயன்படுத்தும் 200க்கும் மேற்பட்ட செயலிகளைப் பேஸ்புக் முடக்கியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Facebook shut 583 million fake accounts

Facebook shut 583 million fake accounts
Story first published: Wednesday, May 16, 2018, 16:49 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X