அடுத்த விராட் கோஹ்லி இவர்தான்.. அனுஷ்கா யாருன்னு கேட்காதீங்க..!

By Valliappan N
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தற்போது நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் 20 வயதே ஆன ரிஷாப் பன்ட் டெல்லி அணி சார்பில் அதிரடியாக விளையாடி வருகிறார். டெல்லி அணி முற்றிலும் இளைஞர்களை நம்பி தான் இந்த வருடம் களமிறங்கியுள்ளது.

 

அதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் என்று பார்த்தால் ஷ்ரேயஸ் ஐயர், பிரித்வி ஷா மற்றும் ரிஷாப் பன்ட் ஆகியோர் தான். இந்த வருடம் என்ன தான் டெல்லி அணி தோல்வியைத் தழுவி இந்த வருட ஐபிஎல்-இல் இருந்து வெளியேறினாலும் ரிஷாப் பன்ட் மட்டும் கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார்.

விராட் கோஹ்லி

விராட் கோஹ்லி

விராட் கோஹ்லி 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தையை இழந்தார். இதில் மிகவும் சவாலான விஷயம் என்னவென்றால் அவர் தந்தையைப் பறிகொடுத்த அதே நாளில் தான் தனது முதல் ரஞ்சி ட்ரோபி போட்டியை விளையாடவேண்டிய கட்டாயத்தில் இருந்தார் விராட். ஆனால் கோஹ்லி தனது துக்கத்தை எல்லாம் மனதில் அடக்கிக்கொண்டு அந்தப் போட்டியில் களமிறங்கினர்.

ரிஷாப் பன்ட்

ரிஷாப் பன்ட்

அதேபோல ரிஷாப் பன்ட் தந்தை கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி காலமானார். அடுத்த இரண்டு நாளில் டெல்லி அணிக்காக விளையாடி அவர் தனது கனவுகளை நினைவாக வந்துவிட்டார், அந்த ஆட்டத்தில் அவர் அடித்தது 57 ரன்கள்.

இருவரும் முக்கியமான போட்டியை விளையாடிய போது தந்தை இழந்தது மட்டுமல்லாமல் இருவருக்கும் கிட்டத்தட்ட ஓரே வயதுதான்.

அறுவை சிகிச்சை
 

அறுவை சிகிச்சை

அதேபோல் அடுத்தச் சில நாட்களில் ரிஷாப்-இன் அம்மாவிற்கு ஒரு அறுவை சிகிச்சை நடந்தது, பன்ட் மிகவும் கஷ்டமான மனநிலையில் இருந்தார் தனது தாயை பார்த்துக்கொள்வதா அல்லது டெல்லி அணிக்காக விளையாடுவதா என்று. ஆனால் மிகவும் மன தைரியதோடு டெல்லி அணிக்கு விளையாட பெங்களூரு புறப்பட்டார்.

பயிற்சியாளர்

பயிற்சியாளர்

அவருக்குப் பயிற்சி அளித்தவர்கள் அவரை விளையாட முனைத்தனர், நடந்தது நடந்து விட்டது ஆனால் நீ உன் விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்று பன்ட்க்கு அறிவுரை கூறினர்.

மேலும் பன்ட்-இன் பயிற்சியாளர் கூறுகையில் பன்ட்-இன் தந்தை அவர் கிரிக்கெட் விளையாடுவதைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சிகொண்டார் எனத் தெரிவித்தார்.

எந்த நிபந்தனையும் இல்லை

எந்த நிபந்தனையும் இல்லை

டெல்லி அணியைப் பொறுத்தவரை ரிஷாப் பன்ட்-க்கு 2017 ஐபிஎல்-இல் எந்த நிபந்தனைக்கும் உட்படுத்தவில்லை அவருக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்யட்டும் என இருந்து விட்டனர். ஏன் என்றால் ஒருவர் வாழ்க்கையில் இது ஒரு மிகப்பெரிய இழப்புமாகும்.

16வது இடம்..

16வது இடம்..

இத்தகைய கடுமையான சூழ்நிலையிலும் ரிஷாப் பன்ட் 2017 ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடி அதிக ரன்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் 16வது இடத்தைப் பிடித்தார்.

டெல்லி கிரிக்கெட் அகாடமி

டெல்லி கிரிக்கெட் அகாடமி

பன்ட்-இன் சிறுவயதில் இவரின் பெற்றோர் மிகவும் சிரமப்பட்டு டெல்லி உள்ள கிரிக்கெட் அகாடமியில் உள்ள இவரைச் சேர்த்துவிட்டனர் ஏன் என்றால் இவர்கள் குடும்பம் வாசித்த உத்தரகண்டில் உள்ள கிராமத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்கான சாத்தியக்கூறு மிகவும் குறைவு.

 முதல் சென்சூரி

முதல் சென்சூரி

டெல்லியில் ரிஷாப் பன்ட்-இன் தாய் அவருடன் இருந்து அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்தார், அதன் பலனாக அவர் விளையாடிய 12 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆட்டத்தில் ரிஷாப் பன்ட் முதல் சதம் அடித்துச் சாதித்துக் காட்டினார்.

ஏர்போர்ஸ் பள்ளி

ஏர்போர்ஸ் பள்ளி

விரைவில் இவருக்குப் பயிற்சி அளித்தவர்களின் மூலம் இவருக்கு டெல்லி உள்ள ஏர்போர்ஸ் பள்ளியில் இடம் கிடைத்தது, அதன் பின் இவர் இந்திய அண்டர் 19 அணியில் இடம்பிடித்தார் அது மட்டும் இல்லாமல் டெல்லி ரஞ்சி அணிக்கு கேப்டன் பொறுப்பேற்றார்.

அஷிஷ் நெஹ்ரா

அஷிஷ் நெஹ்ரா

இந்திய அணியின் முத்த வீரரான அஷிஷ் நெஹ்ரா இவரின் மேல் பெரும் நம்பிக்கை வைத்துள்ளார் என இவருக்குப் பள்ளிப்பருவத்தில் பயிற்சி அள்ளித்தவர் குறிப்பிட்டார்.

ஐபிஎல் 2018

ஐபிஎல் 2018

ரிஷாப் பன்ட்-இன் மன உறுதி மற்றும் அவரின் குடும்பம், பயிற்சியாளர்கள் வைத்த நம்பிக்கைக்குச் சிறப்பான பரிசை ஐபிஎல் 2018 போட்டியில் கொடுத்துள்ளார்.

நம்பிக்கை

நம்பிக்கை

2018 ஐபிஎல் போட்டியிலும் டெல்லி அணி ரிஷாப் பன்ட் மீது நம்பிக்கை வைத்து 15 கோடி ரூபாய் கொடுத்து, அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரராக ரிஷாப் பன்ட் திகழ்ந்தார்.

பரிசு

பரிசு

அதற்கு ஏற்றவாறு இவர் 2018 சீசன் மூலம் 12 ஆட்டங்களில் ஒரு சதம், 4 பிப்டி, 61 போர், 31 சிக்ஸ் என 582 ரன்களைக் குவித்துள்ளார். இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டியில் அதிக ரன் அடித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார் ரிஷாப் பன்ட்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Next Virat kohli, 15 crore auction player Rishabh pant

Next Virat kohli, 15 crore auction player Rishabh pant
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X