முந்திக்கொண்ட ஏர்டெல்.. ஜியோவிற்குக் கொடுத்த அதிர்ச்சி செய்தி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோவிற்கும் ஏர்டெல் நிறுவனங்கள் நாள்தோறும் வர்த்தகத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும், அதிகரிக்கவும் போட்டிபோட்டு வருகின்றனர்.

இதனால் இரு நிறுவனங்களும் நேருக்குநேராகப் பல இடங்களில் மோதிக்கொண்ட நிலையில், பைபர் ஆப்டிக் சேவையில் ஜியோவை ஓரம்கட்டி ஏர்டெல் முந்திக்கொண்டது.

ஜியோ திட்டம்..

ஜியோ திட்டம்..

வீடுகளுக்குப் பைபர் ஆப்டிக் வையர் மூலம் அளிக்கப்படும் பிராண்ட்பேன்ட் இணைப்பு சேவையை ஜியோ 2018இல் அறிமுகம் செய்ய அனைத்து விதமான பணிகளையும் செய்து வரும் நிலையில், இப்பிரிவு வர்த்தகத்தைக் கைவிட்டுவிடக் கூடாது என்பதற்காக ஏர்டெல் சரியான திட்டமிடல் உடன் முந்திக்கொண்டது.

அதிரடி முதலீடு

அதிரடி முதலீடு

2017 வரையிலான காலத்தில் ஏர்டெல் இந்தியா முழுவதும் 20 லட்சம் வீடுகளுக்குப் பைபர் ஆப்டிக் பிராண்ட்பேன்ட் இணைப்பைக் கொடுத்துள்ளது.
இந்த வருடம் ஜியோவும் இப்பிரிவு இறங்கத் திட்டமிட்டுள்ள நிலையில், இப்பிரிவு வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் சுமார் 4 பில்லியன் டாலர் வரையில் புதிதாக முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது ஏர்டெல்.

இலக்கு

இலக்கு

2018-19ஆம் நிதியாண்டில் மட்டும் 2-4 மில்லியன் பிராண்ட்பேன்ட் வாடிக்கையாளர்களைப் புதிதாக ஏர்டெல் நிறுவனத்தில் சேர்க்க திட்டமிட்டு 4 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது.

முதல்கட்டமாக ஏர்டெல் தற்போது டெல்லி, பெங்களுரூ, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய பகுதிகளை மட்டும் மையமாகக் கொண்டு இயங்க திட்டமிட்டுள்ளது.

 

மாற்றங்கள்

மாற்றங்கள்

மேலும் ஜியோ இப்பிரிவில் இறங்க ஏற்கனவே திட்டமிட்டுள்ள நிலையில் இப்பிரிவு சேவையில் கட்டணம் அதிகளவில் குறைவது மட்டும் அல்லாமல் டெலிகாம் நிறுவனங்களின் வாடிக்கையாளரின் சராசரி வருமானம் அதிகளவில் குறையும்.

ஜியோ சோதனை

ஜியோ சோதனை

ஏற்கனவே ஜியோ சோதனை திட்டமாக டெல்லி மற்றும் மும்பையில் 100 MBPS வேகத்தில் அன்லிமிடெட் இண்டர்நெட் சேவை வெறும் 4,500 ரூபாய் டெப்பாசிட் தொகைக்குக் கொடுத்து தனது சோதனை திட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது.

தொடர் சரிவு

தொடர் சரிவு

இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் 89 நகரத்தில் சுமாக் 21 லட்ச வீடுகளுக்கு 100 MBPS வேகத்தில் இண்டர்நெட் சேவை வழங்கி வருகிறது. தற்போது இந்நிறுவனத்தின் சராசரி வாடிக்கையாளர் வருமானத்தின் அளவு 929 ரூபாயாக உள்ளது, ஆனால் ஒவ்வொரு வருடமும் இதன் அளவீடு 12.6 சதவீதம் குறைந்து வருவதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது.

பயம்

பயம்

இந்நிலையில் ஜியோ இப்பிரிவில் களமிறங்கினால் இருக்கும் வாடிக்கையாளர் வருமானத்தையும் இழக்க நேரிடும் பயத்தில் தற்போது 4 பில்லியன் டாலர் முதலீடு செய்து சேவை வரிவாக்கம் செய்துள்ளது ஏர்டெல்.

ஆகவே ஜியோ ஏர்டெல் உடன் போட்டி போட தனது கட்டணத்தைக் குறைக்கும் பணியைத் துவங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

 

நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்!

நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்!

<strong>மாதம் ஒரு முறை இதை ட்ரை பண்ணுங்க.. நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்! </strong>மாதம் ஒரு முறை இதை ட்ரை பண்ணுங்க.. நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்!

டாடா ஸ்டீல்

டாடா ஸ்டீல்

<strong>5000 ஊழியர்களுக்கும் வேலைவாய்ப்பு உத்தரவாதம்... டாடா ஸ்டீல் அறிவிப்பு..! </strong>5000 ஊழியர்களுக்கும் வேலைவாய்ப்பு உத்தரவாதம்... டாடா ஸ்டீல் அறிவிப்பு..!

ரகுராம் ராஜன்

ரகுராம் ராஜன்

<strong>பாங்க் ஆப் இங்கிலாந்து கவர்னர் பதவிக்கு விண்ணப்பிக்கிறாரா ரகுராம் ராஜன்? </strong>பாங்க் ஆப் இங்கிலாந்து கவர்னர் பதவிக்கு விண்ணப்பிக்கிறாரா ரகுராம் ராஜன்?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Airtel steps before Reliance Jio on broadband business

Airtel steps before Reliance Jio on broadband business
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X