முதல்வரான 56 மணி நேரத்தில் ராஜினாமா செய்த எடியூரப்பாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு பெரும்பான்மை இல்லை என்றாலும் அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற பெயரில் ஆட்சி செய்ய ஆளுநரிடம் உரிமை கோரிய எடியூரப்பா 15 நாட்கள் அவகாசம் கேட்டார். இதற்குக்கிடையில் காங்கிரஸ் ஜேடிஎஸ் கூட்டணியும் ஆட்சி அமைக்க உரிமை கோர பரபரப்பாக உச்ச நீதிமன்றம் எடியூரப்பா முதல்வாராகவதில் சிக்கல் என்றில்லை எனக் கூற வியாழக்கிழமை கர்நாடக முதல்வராகப் பதவி ஏற்றார்.

 

ஆனால் அடுத்த நாளே உச்ச நீதிமன்றம் சனிக்கிழமை மாலை 4 மணிக்குப் பெரும்பான்மையினை நிரூபிக்க வேண்டும் என்று கூற கர்நாடக சட்ட சபை விதான் சவுதாவில் பரபரப்பாக எம்எல்ஏ-க்கள் பதவி ஏற்பு விழா காலை முதல் நடைபெற்று நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன் உருக்கமாக பேசிய எடியூரப்பா உயில் வாழும் வரை கர்நாடகாவிற்காக உழைப்பேன் என்று முதல்வர் பதவியை 56 மணி நேரத்தில் ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் எடியூரப்பாவின் சொத்து மதிப்பு என்ன முன்பு முதல்வராக இவர் இருந்த போது இவருக்கு இருந்த சொத்துக்கள் எவ்வளவு உள்ளிட்ட விவரங்களை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

2018 தேர்தலி போது குறிப்பிட்ட சொத்து மதிப்பு

2018 தேர்தலி போது குறிப்பிட்ட சொத்து மதிப்பு

தேர்தலின் போது தனது சொத்து விவரங்களைத் தாக்கல் செய்த எடியூரப்பா தனக்கு மொத்தமாக 4.09 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதுவே 2013-ம் ஆண்டு இவரது சொத்து மதிப்பு 5.8 கோடி ரூபாயாகவும், 2014-ம் ஆண்டு 6.9 கோடி ரூபாயும் இருந்ததாகத் தரவுகள் கூறுகின்றன.

சரிந்த சொத்து மதிப்பு

சரிந்த சொத்து மதிப்பு

கடந்த 4 ஆண்டுகளில் எடியூரப்பாவின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் குறைந்தது மட்டுமில்லாமல் கடனும் அதிகரித்துக் காணப்படுகிறது.

கல்வி தகுதியிலும் மாற்றம்
 

கல்வி தகுதியிலும் மாற்றம்

2013-ம் ஆண்டுப் பாஜக தலைவராகத் தேர்தலில் இவர் போட்டியிட்ட போது இளங்களைப் பட்டமான பிஏ படித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதுவே 2014-ம் ஆண்டுப் பியூசி அதாவது 12-ம் வகுப்பு முடித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 2018-ம் ஆண்டும் பியூசி முடித்துள்ளதாக மட்டும் குறிப்பிட்டுள்ளார்.

 வருவாய் சரிவு

வருவாய் சரிவு

2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது 15,26,828 கோடி ரூபாய் வருவாய் என்று குறிப்பிட்ட எடியூரப்பாவின் வருவாய் 2018-ம் ஆண்டு 12,33,313 ரூபாயாகக் குறைந்துள்ளது.

பணம்

பணம்

2014-ம் ஆண்டுத் தனது வசம் 7,71,000 ரூபாய் பணம் உள்ளதாகக் குறிப்பிட்டு இருந்த எடியூரப்பா 2018-ம் ஆண்டுத் தனது வசம் 1,01,145 ரூபாய் தான் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

வங்கி சேமிப்பு

வங்கி சேமிப்பு

வங்கியில் சேமிப்பாக 16,60,174 ரூபாய் வைத்துள்ளதாகவும், பிக்சட் டெபாசிட்டில் 18,08,321 ரூபாய் வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அசையும் மற்றும் அசையா சொத்து

அசையும் மற்றும் அசையா சொத்து

அசையும் சொத்து 71,300,40 ரூபாய் என்றும் அசையா சொத்தில் விவசாய நிலத்தின் மதிப்பு 53,74,875 ரூபாய் என்றும், வணிக வளாகத்தின் மதிப்பு 68,788,30 ரூபாய் என்றும், நகையாக 1.09 கோடி ரூபாயும் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

2014-ம் ஆண்டு இவர் தனக்கு 11,09,640 ரூபாய் மதிப்புள்ள விவசாய நிலம், வணிகக் கட்டடங்கள் ஏதுமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அதே நேரம் அசையும் சொத்துக்களில் 1,91,33,447 ரூபாயும், அசையா சொத்துக்களாக 4,90,12,820 ரூபாய் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடன்

கடன்

அவசரமாகப் பதவி ஏற்றுவிட்டுப் பெரும்பான்மையினை நிருப்பிக்கக் காத்திருக்கு எடியூரப்பாவிற்கு 2.53 லட்சம் கடன் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதைப் பார்க்கும் போது உங்களுக்கு எப்படி இவர் 100 கோடி கொடுத்து எம்எல்ஏ-க்களை வாங்குவார் என்று சந்தேகம் எழுந்தால் நாங்கள் பொறுப்பல்ல.

குமாரசாமி சொத்து மதிப்பு

குமாரசாமி சொத்து மதிப்பு

எடியூரப்பா ராஜினாமா, தொடர்ந்து கர்நாடக முதல்வராக பதவி ஏற்க இருக்கும் குமாரசாமி சொத்து மதிப்பு எவ்வளவ

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Karnataka current CM BS Yeddyurappa's Assets

Karnataka current CM BS Yeddyurappa's Assets
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X