சீனாவின் திடீர் முடிவால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு மகிழ்ச்சி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்கா அரசு வழக்கம் போல், தான் செய்வது தான் சரி, எல்லா நாடுகளும் தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சீனாவை அடக்கியாளத் திட்டமிட்டு, இந்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரியை அதிகளவில் விதித்தது டொனால்டு டிரம்ப் அரசு.

 

இந்நிலையில் அமெரிக்கா சற்றும் எதிர்பார்க்காத வகையில் சீனா அமெரிக்கா உடன் போட்டி போட்டு வரியை விதித்து அதிரவைத்தது. இதில் பாதிப்பு இரு நாடுகளுக்கும் அதிகமாக இருக்கிறது எனத் தெரிந்தும் சீனா உறுதியாக நின்று வரியை விதித்து அமெரிக்காவிற்குத் தண்ணி காட்டியது.

இதனால் அமெரிக்கா சீனா இடையில் மிகப்பெரிய வர்த்தகப் போர் உருவாகும் சூழ்நிலை கூட உருவானது

பிரச்சனை முடிவு

பிரச்சனை முடிவு

வர்த்தக இழப்பைத் தாங்க முடியாது என்பதை உணர்ந்த அமெரிக்கப் பேச்சுவார்த்தைக்குச் சீனாவை அழைத்து இரு நாடுகள் மத்தியிலான வர்த்தகப் போர், வரி விதிப்பு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

 வரிக் குறைப்பு

வரிக் குறைப்பு

இந்நிலையில் சீனா தனது ஆட்டோமொபைல் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக இறக்குமதி செய்யப்படும் பயணிகள் கார்கள் மீதான வரியை 15 சதவீதமாகக் குறைத்தது.

இது பிஎம்டப்ள்யூ, போர்டு, டாடா மோட்டார்ஸ் ஆகிய முன்னணி நிறுவனங்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

25 சதவீத வரி

25 சதவீத வரி

10 வருடங்களுக்கும் அதிகமாக இறக்குமதி கார்கள் மீது விதிக்கப்பட்டு இருந்து 25 சதவீத வரி அளவீட்டை தற்போது அமெரிக்கா சீன வர்த்தகப் போர் பிரச்சனை பேச்சுவார்த்தை முடிவடைந்தன வாயிலாகச் சீனா இதன் அளவை 10 சதவீதம் குறைத்து 15 சதவீதமாக அறிவித்துள்ளது.

 பங்குகள்
 

பங்குகள்

சீனாவின் அறிவிப்பைத் தொடர்ந்து ஜாகுவார் லேன்ட் ரோவர் விற்பனை உரிமையைப் பெற்றிருக்கும் டாடா மோட்டார்ஸ், பிஎம்டபள்யூ, டையாம்ளர் ஆகிய நிறுவனப் பங்குகள் உயர்வடைந்தது.

 டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ்

சீனாவில் டாடா மோட்டார்ஸ் தயாரிப்புக்கு பெரிய அளவிலான வர்த்தகம் இல்லையென்றாலும், இந்நிறுவன கட்டுப்பாட்டில் இருக்கும் ஜாகுவார் லேன்ட் ரோவர் நிறுவனத்தில் பெரிய அளவிலான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

இதன் அடிப்படையில் சீனாவின் அறிவிப்பைத் தொடர்ந்து மும்பை பங்குச்சந்தையில் இருக்கம் டாடா மோட்டார்ஸ் நிறுவனப் பங்குகள் 4.7 சதவீதம் வரையில் உயர்ந்தது.

பிற நிறுவனங்கள்

பிற நிறுவனங்கள்

அதேபோல் பிராங்க்ப்ரூட் சந்தையில் இருக்கும் பிஎம்டபள்யூ 1.5 சதவீதமும், டயாம்ளர் 1.3 சதவீதமும் உயர்வடைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China Cut Car Import Duty: Good sign to tata motors

China Cut Car Import Duty: Good sign to tata motors
Story first published: Tuesday, May 22, 2018, 14:41 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X