ரூ. 1000 கோடி முதலீட்டில் புதிதாக 11 ரயில் நீர் ஆலைகள் .. இந்தியன் ரயில்வேஸ் அதிரடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியன் ரயில்வேஸ் நிர்வாகம் ரயில் பயணிகளுக்காகச் சுத்திகரிப்புச் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்களைக் குறைந்து விலையில் விற்று வரும் நிலையில் அதற்கு மிகப் பெரிய தட்டுப்பாடுகள் உள்ளது. எனவே ரயில் நீர் பாட்டில்களுக்கு உள்ள தட்டுப்பாட்டினை குறைக்க இந்திய ரயில்வே நிர்வாக 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் புதிதாக 11 ஆலைகளைத் துவங்க முடிவு செய்துள்ளது.

தற்போது ரயில் நீர் பாட்டில்களுக்கு ஒரு நாளைக்கு 16 லட்சம் லிட்டர்கள் வரை தட்டுப்பாடு உள்ளதாகவும் புதிய ஆலைகளைத் துவங்கவதுன் மூலம் அதில் 85 சதவீத தட்டுப்பாட்டைக் குறைக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

புதிய ரயில் நீர் ஆலைகள் அமைய உள்ள இடங்கள்

புதிய ரயில் நீர் ஆலைகள் அமைய உள்ள இடங்கள்

தமிழகத்தில் செங்கல்பட்டில் ரயில் நீர் ஆலை உள்ள நிலையில் கோட்டா, விசாகப்பட்டினம், புவனேஸ்வர், ராஞ்சி, நங்கல், விஜயவாடா, குவஹாத்தி, போபால், அகமதாபாத், ஜபல்பூர் மற்றும் புசாவல் ஆகிய இடங்களில் நீர் சுத்திகரிப்பு மையங்களை அமைக்க டெண்டர்களும் கோரியுள்ளது.

லாபம் அளிக்கும் பிரிவு

லாபம் அளிக்கும் பிரிவு

ரயில் நீர் திட்டத்தினை இந்திய ரயில்வேஸ் துவங்கியதில் இருந்தே லாபத்தில் தான் இயங்கி வருகிறது. இந்தத் திட்டத்தினைத் துவங்கிய பொது ஒரு லிட்டர் தண்ணீர் வாட்டில் 12 ரூபாய்க்கு விற்பானை செய்த நிலையில் தற்போது 15 ரூபாய் ஒரு லிட்டர் பாட்டில் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 ரயில் நீர் சேவை

ரயில் நீர் சேவை

ரயில் நீர் 7,000 ரயில் நிலையங்களிலும், 1,000-க்கும் மேற்பட்ட ரயில்களிலும் ஒரே விலை 15 ரூபாய் என விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

 வருவாய்

வருவாய்

2017-2018 நிதி ஆண்டில் ஐஆர்சிடிசி-ன் வருவாயில் 11 சதவீதம் அதாவது 170 கோடி ரூபாயினை ரயில் நீர் நிறுவனங்கள் அளித்துள்ளது. அதனை 500 கோடி ரூபாயாக அதிகரிக்கும் முடிவில் ரயில்வே நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Railways may put 11 new Rail Neer bottling units in cost of Rs 1k crore

Railways may put 11 new Rail Neer bottling units in cost of Rs 1k crore
Story first published: Wednesday, May 23, 2018, 16:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X