$3.8 பில்லியனை உடனே செலுத்த வேண்டும்.. ரிலையன்ஸ், ஓஎன்ஜிசி, ஷெல் நிறுவனங்களுக்கு உத்தரவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பன்னா-முக்தா மற்றும் தபதி எண்ணெய் தளத்தில் அரசின் பங்கீடு குறித்துப் பிரிட்டன் நீதிமன்றத்தில் ரிலையன்ஸ், ஓஎன்ஜிசி, ஷெல் நிறுவனங்கள் தொடுத்த வழக்கில் இந்நிறுவனங்கள் தோற்றுப்போய் உள்ள நிலையில், தற்போது எண்ணெய் துறை அமைச்சகம் இந்த 3 நிறுவனங்களையும் அரசின் பங்கீடான 3.8 பில்லியன் டாலர் தொகையை உடனடியாகச் செலுத்த உத்தரவிட்டுள்ளது.

 

பங்கீடு

பங்கீடு

அரேபிய கடலில் இருக்கும் எண்ணெய் மற்றும் எரிவாயு தளங்களில் ஓஎன்ஜிசி 40 சதவீதமும், ரிலையன்ஸ் 30 சதவீதமும், ஷெல் 30 சதவீதமும் பங்கீடு செய்துள்ளது.

டிசம்பர் 2010

டிசம்பர் 2010

பன்னா-முக்தா மற்றும் தபதி எண்ணெய் தளத்தில் குத்தகைக்கு விடப்பட்ட பகுதிகளில் கிடைக்கும் லாப பங்கீடு மற்றும் ராயல்டி அளவுகளில் மாநில அரசுக்கும் ரிலையன்ஸ், பிஜி (தற்போது ஷெல் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிரச்சனை ஏற்பட்ட நிலையில், இரு நிறுவனங்களும் பிரிட்டன் நீதிமன்றத்தில் அரசுக்கு எதிராக டிசம்பர் 2010இல் வழக்குத் தொடுத்தது.

அரசு
 

அரசு

லாபத்தை நிறுவனத்தின் சந்தை அளவீட்டை வைத்து தான கணக்கிட முடியும், இதன் மூலமாகவே செலுத்த வேண்டிய சரியான வரியும் கணக்கிட முடியும். ஆகவே ஒப்பந்தத்தில் இருக்கும் விலையை வைத்து கணக்குச் செய்ய முடியாது என அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

ஓஎன்ஜிசி

ஓஎன்ஜிசி

இந்தப் பிரச்சனையில் ஓஎன்ஜிசி தலையிட வேண்டாம் என அரசு தரப்பு தெரிவித்துள்ளது, தற்போது வழக்கின் முடிவுகள் மூலம் நிறுவனங்களின் explorationக்கும் இதேபோலக் கணக்கிடப்படும் எனத் தெரிகிறது.

ஏப்ரல் 2018

ஏப்ரல் 2018

ரிலையன்ஸ் மற்றும் ஷெல் நிறுவனம் தொடுக்க வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள 9 கோண்டுகோளில் 8 நிராகரித்துள்ள பிரிட்டன் நீதிமன்றம். இதனை அடுத்த மே 2018இல் நீதிமன்றத்தின் தீர்ப்புகளின் படி 3 நிறுவனங்கள் செலுத்த வேண்டிய 3.8 பில்லியன் டாலர் தொகையை உடனடியாகச் செலுத்த உத்தரவிட்டுள்ளது.

வட்டி

வட்டி

மேலும் இத்தகையைக் குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தவில்லை எனில் நிலுவை தொகையான 3.8 பில்லியன் டாலர் மீது வட்டி விதிக்கப்படும் எனவும் எண்ணெய் வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Government’s share of $3.8 billion need to pay by RIL, Shell, ONGC

Government’s share of $3.8 billion need to pay by RIL, Shell, ONGC
Story first published: Thursday, May 24, 2018, 13:33 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X