தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு Modi செய்த ரகசிய உதவிகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தூத்துக்குடி வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி அளவுகளை இரண்டு மடங்கு அதிகரிக்க விரிவாக்கப் பணிகளை இந்நிறுவனம் துவங்கியதை அடுத்து, தூத்துக்குடி மக்கள் இதை எதிர்த்துப் போராடி வருகின்றனர். 100வது நாள் போராட்டத்தின் போது காவல் துறையினரின் முறையற்ற நடவடிக்கையின் காரணமாக இதுவரை சுமார் 11 பேர் உயர் இழந்துள்ளனர்.

 

இந்நிலையில் மே 23ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளுக்குத் தடை விதித்தது. இதுமட்டும் அல்லாமல் நீதிமன்றம் விரிவாக்க பணிகளைத் துவங்கும் முன் மக்களின் விருப்பத்தைக் கேட்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இதற்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் மக்களிடம் விருப்பம் கேட்க தேவையில்லை எனக் கூறியுள்ளது.

இங்குதான் தற்போது ஆட்சியில் இருக்கும் Modi-ன் பிஜேபி வேதாந்தா நிறுவனத்திற்கு மிகப்பெரிய அளவில் உதவி செய்துள்ளது.

வேதாந்தா நிர்வாகம்

வேதாந்தா நிர்வாகம்

சென்னை உயர் நீதிமன்றம் மக்களிடம் விருப்பத்தின் பெயரிலேயே விரிவாக்கம் பணிகள் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ள நிலையில், வேதாந்தா நிர்வாகம், நாங்கள் மத்திய சுற்றுச்சூழல் அமைப்பிடம் இருந்து தொழிற்சாலையின் உற்பத்தியை இரட்டிப்பாக ஒப்புதல் பெற்றுவிட்டோம். இந்நிலையில் மக்களிடம் தங்களின் விருப்பத்தைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 2014

டிசம்பர் 2014

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளைப் பார்க்கும் போது மோடி தலைமையிலான NDA அரசு டிசம்பர் 2014இல் பசுமை ஒழுங்குமுறை விதிகளில் சில முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது, இதனைப் பயன்படுத்தியே வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலை போல் பல ஆலைகள் மக்களின் விருப்பத்தைக் கேட்காமல் நிறுவன விரிவாக்கத்தில் இறங்கியுள்ளது.

 கோரிக்கை
 

கோரிக்கை

கார்பரேட் நிறுவனங்களுக்குக் கஷ்டம் என்றால் மோடி அரசால் பொறுத்துக்கொள்ள முடியுமா..?

பல நிறுவனங்களின் கோரிக்கைகளில் அடிப்படையில் மோடி தலைமையிலான அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளில் இந்த மாற்றத்தைக் கொண்டு வந்து மக்களை ஏமாற்றியுள்ளது.

சில மாதங்களில் அனுமதி

சில மாதங்களில் அனுமதி

இந்த மாற்றங்கள் சட்டமாக வந்த சில மாதங்களிலேயே வேதாந்தா நிறுவனத்திற்கு விரிவாக்கப் பணிகளுக்கான அனுமதியை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இருந்து பெற்றுள்ளது.

இதன் வாயிலாகவே மக்களிடம் விருப்பம் கேட்காமல் அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதை உணர்ந்தும் வேதாந்தா, மோடி அரசு இணைந்து இந்த விரிவாக்கப் பணிகளில் இறங்கியுள்ளது.

 மே 2014

மே 2014

காங்கிரஸ் ஆட்சியில் தூத்துக்குடி வேதாந்தா போன்ற தொழிற்சாலைக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றால் கண்டிப்பாக இப்பகுதியைச் சுற்றியுள்ள மக்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே அனுமதி அளிக்கப்படும் எனத் திட்டவட்டமாக மே 2014இல் தெரிவித்திருந்தது.

இதைதொடர்ந்து வந்த மோடி தலைமையிலான NDA அரசு அடிப்படையாக இருக்கும் விதிகளையே மாற்றி நிறுவனங்களுக்குச் சாதகமாக இருக்கும் வகையில் மாற்றி அமைத்துள்ளது.

2016இல் புதிய சட்டம்..

2016இல் புதிய சட்டம்..

டிசம்பர் 2014இல் NDA அரசு கொண்டு வந்த மாற்றங்கள் வேதாந்தா போன்ற நிறுவனங்களுக்குச் சாதகமாக அமைந்த நிலையில் 2016இல் தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைப்பு டிசம்பர் 2014இல் அறிவித்த விதிகள் ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவித்தது.

இது வேதாந்தா நிறுவனத்தை மட்டும் அல்லாமல் பல நிறுவனங்களின் விரிவாக்கப் பணிகளும், புதிய நிறுவனத்தைத் துவங்கும் முயற்சியும் தடைப்பட்டது.

அதிரடி நடவடிக்கை

அதிரடி நடவடிக்கை

டிசம்பர் 2014இல் அறிவிப்பட்ட மாற்றங்கள் அனைத்தும் தேசிய பசுமை தீர்ப்பாயம் ரத்து செய்தது. இதன் மூலம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் மூலம் சுற்றுச்சூழல் அமைச்சகம் புதிய சட்டத்தைக் கொண்டு வர வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது.

இதன் படி தொழிற்துறை பூங்காவில் இருக்கும் திட்டங்கள், மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் தான் சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கப்படும் எனத் தெரிவித்தது.

பிரச்சனை துவக்கம்...

பிரச்சனை துவக்கம்...

இந்த இடைப்பட்ட காலத்தில் வேதாந்தா விரிவாக்கத்திற்கான அனைத்து ஒப்புதல்களையும் பெற்றுவிட்டது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் கெடுபிடியால் சுற்றுச்சூழல் அமைச்சகம் கொண்டு வந்த புதிய விதிகள் வெளிச்சத்திற்கு வந்து இந்நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்தது.

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

இவ்வழக்கின் விசாரணையில் மே 23ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளுக்குத் தடை விதித்தது மட்டுமல்லாமல் நீதிமன்றம் விரிவாக்க பணிகளைத் துவங்கும் முன் மக்களின் விருப்பத்தைக் கேட்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி சிப்காட்

தூத்துக்குடி சிப்காட்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை 2006 சுற்றுச்சூழல் அனுமதி விதிகள் அமைக்கப்படும் முன்பாகவே தூத்துக்குடி சிப்காட் தொழிற்பேட்டையில் அமைக்கப்பட்டது.

 5 வருட அனுமதி

5 வருட அனுமதி

காங்கிரஸ் ஆட்சியில் இருந்து 2009இல் வேதாந்தா மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தூத்துக்குடி தொழிற்சாலையை மக்களின் அனுமதி இல்லாமல் விரிவாக்கம் செய்ய அனுமதி கோரியது நிலையில் 5 வருடத்திற்கான அனுமதியை வழங்கியது.

மறுப்பு..

மறுப்பு..

இந்த 5 வருட அனுமதி காலாவதியான நிலையில் 2013இல் மீண்டும் அனுமதிக்காகச் சென்ற போது மே 2014இல் அதே காங்கிரஸ் அரசு மக்களின் விருப்பத்தின் பெயரில் தான் அனுமதி வழங்கப்படும் எனத் திட்டவட்டமாகக் கூறியது.

மோடி அரசு

மோடி அரசு

டிசம்பர் 2014இல் மோடி அரசு சுற்றுச்சூழல் விதிகளை மாற்றி மார்ச் 2015இல் வேதாந்தா நிறுவனத்திற்கு டிசம்பர் 2018 வரையிலாகச் சுற்றுச்சூழல் அனுமதியை மார்ச் 2015இல் வழங்கியது. இக்காலகட்டத்தில் மக்களின் அனுமதி கேட்க வேண்டுமான என்ற பிரச்சனை இருந்த காரணத்தால் ஸ்டெர்லைட் தனது கட்டுமான பணிகளைத் துவங்கியது.

 போராட்டம்

போராட்டம்

கட்டுமான பணிகள் துவங்கிய உடனேயே மக்கள் போராட்டங்களை நடத்தத் துவங்கினர். கடந்த 3 மாதமாக மக்களின் உயிரைக் கொல்லும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் பெரியதா வெடித்தது.

இதில் 100வது நாள் போராட்டத்தில் காவல் துறையின் தூப்பாக்கி சுட்டில் 13 பேர் இதுவரை இப்போராட்டத்திற்காக உயிரை இழந்துள்ளனர்.

சுற்றுச்சூழல் அனுமதி

சுற்றுச்சூழல் அனுமதி

பொதுவாக அனைத்துப் பெரிய தொழிற்சாலைகளும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இருந்து சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பிறகு தான் துவங்க முடியும்.

இந்தத் திட்டத்தை உருவாக்குபவர்கள் இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்று சூழலுக்கு எவ்வாறு பாதிப்பு இருக்கும் என்று அறிக்கையினைத் தயாரித்துச் சமர்ப்பிக்க வேண்டும்.

பொது மக்களிடம் விளக்கம்

பொது மக்களிடம் விளக்கம்

அந்த அறிக்கையை மாநில அரசுகளின் கண்காணிப்பில் பொது மக்களிடம் விளக்க வேண்டும். பின்னர் மத்திய சுற்று சூழல் அமைச்சகம் அந்த அறிக்கையினைப் படித்துத் தொழிற்சாலைக்கான அனுமதியை அளிக்கலாமா வேண்டாமா என்று முடிவை எடுக்கும்.

மக்களுடன் கலந்துரையாடும் போது அவர்களால் இந்தத் திட்டத்தினைத் தடுக்க முடியாது ஆனால் இந்தத் திட்டத்தினைச் செயல்படுத்த இருக்கும் நிறுவனமானது மக்களின் கவலைகளை மத்திய அரசுக்குச் சமர்ப்பித்து அதற்கான தீர்வினை காணலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Modi govt decisions helped Vedanta bypass norms

Modi govt decisions helped Vedanta bypass norms
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X