இரண்டு நாட்களுக்கு வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்.. இன்றே ஏடிஎம்-ல் பணத்தை எடுத்துக்கொள்ளுங்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வங்கி சங்கங்கள் வைத்த 2 சதவீத ஊதிய உயர்வு கோரிக்கைக்குச் சம்மதிக்காத நிலையில் தேசிய அளவில் 2 நாட்கள் வங்கிகள் வேலை நிறுத்தத்தினை அறிவித்துள்ளன.

வங்கி ஊழியர்களின் இந்த வேலை நிறுத்தம் மே 30 மற்றும் 31-ம் தேதிகளில் நடைபெறும் என்றும் ஏடிஎம் சேவைகளும் பாதிப்படையும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

கோரிக்கைகள்
 

கோரிக்கைகள்

வங்கி ஊழியர்கள் சங்கங்கள் 2 சதவீத ஊதிய உயர்வு மட்டும் இல்லாமல் பல்வேறு கோரிக்கைகளை வங்கி நிர்வாகங்களிடம் வைத்துள்ளனர்.

ஏடிஎம் பாதுகாப்பு ஊழியர்கள்

ஏடிஎம் பாதுகாப்பு ஊழியர்கள்

வேலை நிறுத்தத்தில் ஏடிஎம் பாதுகாப்பு ஊழியர்களும் பங்கேற்பார்கள் என்றும் அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் ராஜென் நாகார் தெரிவித்துள்ளார். இதனை வைத்துப் பார்க்கும் போது ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதிலும் வாடிக்கையாளர்களுக்குச் சிரமம் ஏற்பட உள்ளது.

எஸ்பிஐ

எஸ்பிஐ

இந்தியாவின் மிகப் பெரிய வங்கி நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கியும் அதன் சேவைகள் பாதிப்படைய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதே போன்று சென்ற வருடம் வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போது ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாமல் மக்கள் தவித்தனர், மேலும் செக் சேவைகள், பணப் பரிமாற்ற சேவைகள் எனப் பலவகையில் பொதுத் துறை வங்கிகளில் பாதிப்பு ஏற்பட்டது.

வாரா கடன்
 

வாரா கடன்

வங்கிகள் வாரா கடனால் சிக்கித் தவிப்பதால் ஏற்பட்ட நட்டம் காரணத்தினால் தான் ஊழியர்களின் கோரிக்கையான 2 சதவீத ஊதிய உயர்வுக்கு மறுப்புத் தெரிவிப்பதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது.

மக்கள் தவிப்பு

மக்கள் தவிப்பு

மக்கள் பணத்தினை ஒரு பக்கம் வங்கிகளில் டெபாசிட் செய்ய வைத்து விட்டு அவர்களின் அவசர தேவைக்கு எடுக்க முடியாமல் தவிக்க வேண்டிய நிலைக்கு வாடிக்கையாளர்கள் இது போன்று ஒவ்வொரு ஆண்டும் தள்ளப்படுகிறனர். இரண்டு நாட்களுக்குப் பணத்தினை ஏடிஎம் மையங்களில் அளிக்க முடியாத வங்கிகளுக்கு அபராதம் விதித்தால் தான் இது போன்ற சிக்கலில் இருந்து மக்கள் விடுபடுவார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bank Strike May 2018: Bank employees have called for a nationwide strike on Wednesday and Thursday

Bank Strike May 2018: Bank employees have called for a nationwide strike on Wednesday and Thursday
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X