ரஜினியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.. வைரலான நான்தான்பாரஜினிகாந்த்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அனில் அகர்வால் தலைமையிலான வேதாந்தா குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்திற்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் உயிர் இழந்தது மட்டும் அல்லாமல் பலர் படுகாயம் அடைந்து தற்போது தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி அளித்துள்ளனர். தூத்துக்குடி மக்களின் போராட்டம் காவல் துறையின் தவறான நடவடிக்கையால் வன்முறையாக மாறியது. இதனால் ஆண், பெண், சிறுவனர்கள் என வயது வித்தியாசமின்றிப் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்

 

பாதிக்கப்பட்டுள்ள மக்களைத் தற்போது பல தலைவர்கள் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வரும் நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க வந்தார்.

சந்தோஷ்

சந்தோஷ்

இந்தச் சந்திப்பில் சந்தோஷ் என்பவர், நடிகர் ரஜினிகாந்த் அவர்களைச் சரமாரியாகக் கேள்வி கேட்டார். இந்த வீடியோவில்

``யார் நீங்க?" என்று அந்த வீடியோவில் கேட்கிறார். அதற்கு ரஜினியோ ``நான் ரஜினிகாந்த்" என்று சொல்கிறார். ``ரஜினிகாந்த் என்பது தெரிகிறது, எங்கேயிருந்து வருகிறீர்கள்?" என அந்த இளைஞர் மீண்டும் கேட்கிறார். அதற்கு நடிகர் ரஜினிகாந்த், ``நான் சென்னையிலிருந்து வருகிறேன்" என்று சொன்னதும், ``சென்னையிலிருந்து வருவதற்கு நூறு நாள் ஆகுமா?" என அந்த இளைஞர் கேட்க, ரஜினி மிகவும் இறுக்கமான முகத்துடன் சிரித்தபடியே அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்கிறார்.

சந்தோஷ், `அனைத்துக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பின் தூத்துக்குடி ஒருங்கிணைப்பாளர்' என்பதும் தெரியவந்தது. போலீஸாரின் தாக்குதலில் பலத்தக் காயமடைந்து தலையில் பத்துத் தையல்கள் போடப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேப்போன்று போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க வந்த தலைவர்களை மக்கள் பல கேள்விகளைக் கேட்டு திக்குமுக்காட வைத்த நிலையில் ரஜினியிடம் கேட்ட கேள்வி, அவரின் பதிலும் தற்போது டிவிட்டரில் டிரென்டாகியுள்ளது.

பேட்டி

இதுமட்டும் அல்லாமல் அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குக் கொடுத்த பேட்டியில் அவர் பேசியது தற்போது மக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

மேலும் #நான்தான்பாரஜினிகாந்த் என்ற ஹேஷ் டாக்கில் தற்போது டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் டிரென்டாகி வருகிறது. இதில் சில உங்கள் பார்வைக்கு.

 

எதிர்ப்பார்க்கலைலே.

எதிர்ப்பார்க்கலைலே தமிழன் எதிர்த்துநின்று கேள்வி கேட்பான்னு எதிர்ப்பார்க்கலைலே.

சூப்பர் ஸ்டார்

ஒரு சூப்பர் ஸ்டார் என்றும் பாராமல்

நல்ல கொள்கை

அனைத்திற்கும் போராட்டம் போராட்டம் என இருந்தால் தமிழ்நாடு சுடுகாடாக மாறும்: நடிகர் ரஜினிகாந்த்

சுதந்திரம் கேட்டு தினந்தோறும் போராட்டம் நடத்தாம இருந்திருந்தா நாடு சுதந்திரம் அடைஞ்சுருக்குமா? @rajinikanth 😼

awesome கொள்கை!!!

அதுவேற இதுவேற

பழசையெல்லாம் தோண்டுறானுங்களே....

நீ திரும்ப அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜி

கலவரத்திற்கு காரணம் சமூக விரோதிகள் தான் என்று காரணம் என்று சொன்ன ரஜினியிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் 'உங்களுக்கு எப்படி தெரியும்' என கேட்டதும் ரஜினிக்கு வியர்த்துவிட்டது 'எல்லாம் எனக்கு தெரியும் தெரியும்' என பயத்தில் உளறுகிறார். இதற்கு மேல் இருந்தால் உண்மையை உளறிவிடுவோம் என்ற பயத்தில் 'வேற கேள்வி கேளுங்க' என்று ஆவேசமாக கூறி அடுத்த கேள்வகக்கு பதிலளித்து விட்டு அங்கிருந்து நழுவுகிறார்.

# நீ திரும்ப அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜி

தலையே சுத்திரிச்சு

இந்த டேக்கை பார்த்த உடன் ரஜினிகாந்தின் மைண்ட் வாய்ஸ் 2 நிமிஷம் தலை சுத்திரிச்சு😂😂😂 #நான்தான்பாரஜினிகாந்த்

ரஜியினி தூத்துக்குடி எண்ட்ரி

ரஜினியின் இன்றைய தூத்துக்குடி எண்ட்ரி எப்படி இருந்தது.

யார் நீங்க?

தூத்துக்குடி பயனனின் செருப்படி கேள்வி..!

முடியல

ரஜினியின் மைண்ட் வாய்ஸ்..

இவனுங்க கிட்ட நா படுற பாடு இருக்கே முடியலடா

நா இமயமலைக்கே போரேன்டா

#நான்தான்பாரஜினிகாந்த் டிரெண்டிங்

ரஜினி " நா இமயமலைக்கே போரேன்டா "

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Actor rajinikanth faced soild question from protesters

Actor rajinikanth faced soild question from protesters
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X