காங்கிரஸ் ஆட்சியில் ஏர் ஏசியா லஞ்சம் கொடுத்து சட்டத்தை மாற்றியது?.. சிபிஐ அதிரடி வழக்கு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெளிநாட்டு விமானச் சேவை உரிமம் பெற ஏர் ஏசியா சட்டதிட்டங்களை மாற்றி அமைக்கக் காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ அரசிடம் முயற்சி செய்ததாக ஏர் ஏசியா நிறவனம், அதன் தலைமை நிர்வாக அதிகாரி டோனி பெர்னாண்டஸ் மற்றும் இதர முக்கிய அதிகாரிகள் மீது சிபிஐ கிரிமினல் வழக்குப் பதிவு செய்துள்ளது.

 

2014 பொதுத் தேர்தல்

2014 பொதுத் தேர்தல்

2014 பொதுத் தேர்தலுக்கு முன்பாக ஏர் ஏசியா இந்த மோசடி வேலையில் ஈடுபட்டு உள்ளதாகவும், இதுகுறித்த மின்னஞ்சல்கள் ஏர் ஏசியா மற்றும் டாடா குரூப் தலைவர்கள் பகிர்ந்துள்ளதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.

முக்கிய மின்னஞ்சல்

முக்கிய மின்னஞ்சல்

இதில் டாடா குழுமத்தின் நிர்வாகி வெங்கட்ராமன் ராமசந்திரன் மற்றும் ஏர் ஏசியா நிர்வாகத் தலைவர் தருமலிங்கம் கனகலிங்கம் ஆகியோர் மத்தியில் பகிரப்பட்ட மின்னஞ்சலில், "பயணிகள் விமானத் துறை அமைச்சர் அஜித் சிங் இப்போது தான் சந்தித்தேன், இவர் ஒப்புதல் விரையில் கிடைத்து விடும் எனக் கூறியுள்ளார். ஆகவே நம்முடைய திட்டம் 5/20 விதிகள் நீக்கப்பட்ட பின் செயல்படுத்த கூடியவையாக இருக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 2013இல் வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், ஏர் ஏசியா முதலீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த FIPB அமைப்பிடம் இருந்து ஒப்புதல் கிடைக்கும் எனவும் இந்த மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார் வெங்கட்ராமன்.

லஞ்சம் குறித்த சந்தேகம்
 

லஞ்சம் குறித்த சந்தேகம்

வெங்கட்ராமனின் மற்றொரு மின்னஞ்சலில்,"FIPB அமைப்பின் தலைவரை சந்தித்தேன், அடுத்த வாரம் நடக்கும் நீதிமன்ற விசாரணையில் அவர் பாலிசியை உறுதியாக நின்று எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளார், மேலும் அதற்கான அறிக்கையும் சமர்பிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார், இதேபோல் காமர்ஸ் அமைச்சகமும் செய்ய உள்ளது." என அவர் கூறியுள்ளார்.

இங்குப் பேசப்படும் பாலிசி 5/20 விதிகளைத் தான்.

சிபிஐ

சிபிஐ

5/20 விதிகளை ரத்துச் செய்து விட்டு சர்வதேச விமானச் சேவை உரிமத்தைப் பெற லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது எனச் சிபிஐ, ஏர்ஏசியா மற்றும் முக்கிய அதிகாரிகள் மீது எப்ஐஆர்-இல் குறிப்பிட்டுள்ளது.

5/20 விதி

5/20 விதி

5/20 விதிகள் படி இந்தியாவில் இருக்கும் விமான நிறுவனம் உலக நாடுகளுக்குப் பயணிகள் போக்குவரத்து சேவை அளிக்க வேண்டும் என்றால், குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு இந்தியாவில் சேவை அளித்திருக்க வேண்டும், 20 விமானங்களை வைத்திருக்க வேண்டும். இவரை இரண்டும் இருந்தால் மட்டும் மத்திய அரசு சர்வதேச பயணிகள் விமானச் சேவை அளிக்க உரிமம் வழங்கும்.

எதிர்ப்பு

எதிர்ப்பு

இந்த 5/20 விதியை நீக்குவதன் மூலம் இந்திய சந்தைக்குப் புதிதாக வந்த ஏர் ஏசியா, விஸ்தாரா போன்ற நிறுவனங்களுக்குப் பெரிய லாபமாக இருக்கும், ஆனால் ஏற்கனவே இருக்கும் ஏர் இந்தியா, இண்ட்கோ, ஸ்பைஸ்ஜெட், ஜெட் ஏர்வேஸ் இவர்களின் வருகையால் வர்த்தகம் பாதிக்கும் என்னும் காரணத்தால் இந்த விதியை நீக்க கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வந்தது.

நாடாளுமன்றம்

நாடாளுமன்றம்

மேலும் பிப்ரவரி 27, 2014இல் சர்வதேச விமான உரிமத்தை எளிமையாக்க 5/20 விதியை நீக்க வேண்டும் என நாடாளுமன்றத்திற்கு ரகசிய குறிப்பு வந்துள்ளது. இதற்குச் சிவில் ஏவியேஷன் அமைச்சகம் விளக்கத்தை மார்ச் 5, 2014இல் அளித்துள்ளது.

தேர்தல்

தேர்தல்

பொதுத்தேர்தல் நெருங்கிய நிலையில் 5/20 விதிகளை நீக்க தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்தாக நிலையில் இந்த விதி இப்போது நீக்கப்படவில்லை.

ஏர் ஏசியா

ஏர் ஏசியா

ஏர் ஏசியா இந்தியா லிமிடெட் எவ்விதமான முறைகேடான விஷங்களிலும் ஈடுபடவில்லை, அனைத்து விதிகளையும், தற்போதைய நடைமுறைகளையும் பின்பற்றித் தான் நிறுவனம் இயங்கி வருகிறது. மேலும் முன்னாள் சிஇஓ மீது பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு விரைவில் தீர்வு காணப்படும் என ஏர் ஏசியா இந்தியா சுவா மன்டல் தெரிவித்துள்ளார்.

வெங்கட்ராமன் ராமசந்திரன்

வெங்கட்ராமன் ராமசந்திரன்

சர் தோராப்ஜி டாடா டிரஸ்ட்-இன் நிர்வாகத் தலைவராகவும், அனைத்து டாடா டிரஸ்ட் அமைப்புகளின் நிர்வாகத்தைக் கவனிக்கும் பணியில் உள்ளார் வெங்கட்ராமன் ராமசந்திரன். இவர் தலைமையில் தான் இப்போது உரிமம் பெறவும், 5/20 விதியை நீக்குவதற்காகப் பணிகளையும் செய்யப்பட்டுள்ளது.

டாடா குழுமம்

டாடா குழுமம்

ஏர்ஏசியா இந்தியா நிறுவனத்தில் 49 சதவீத பங்குகளை டாடா சன்ஸ் நிறுவனமும், ஏர்ஏசியா பெர்ஹட் நிறுவனமும் வைத்துள்ளது. அதேபோல் வெங்கட்ராமன் ராமசந்திரன் 1.5 சதவீதமும், டிசிஎ் முன்னாள் சிஇஓ எஸ் ராமதுரை 0.5 சதவீத பங்குகளையும் ஏர்ஏசியா இந்தியா நிறுவனத்தில் வைத்துள்ளனர்.

9 பேர்

9 பேர்

UPA அரசின் 2வது ஆட்சி காலத்தில் நடந்துள்ள இந்த மோடிகளில் தொடர்புடைய 9 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இதில் கார்பரேட் இடைத்தரகரான தீபக் தல்வார்-ம் அடக்கம்.

மோடி அரசு FIPB அமைப்பை நீக்கிவிட்டாலும், இப்போதைய காலத்தில் இந்த அமைப்பில் பணியாற்றியவர்கள் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

CBI probes AirAsia chief Tony Fernandes for alleged corruption

CBI probes AirAsia chief Tony Fernandes for alleged corruption
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X