ஜூன்3 இந்தியா முழுவதும் இ-வே பில் அறிமுகம்.. இனி எல்லையில்லா வளர்ச்சி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த ஏப்ரல் 1, 2018 முதல் மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்துக்கான இ-வே பில்லிங் முறை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.

அதனுடன் மாநிலத்திற்குள்ளே பயன்படுத்தப்படும் இ-வே பில்லிங் முறையை, அனைத்துக் கட்டமைப்புகளும் உருவாக்கிய பின்னர்ப் படிப்படியாக ஏப்ரல் 15 அமல்படுத்தத் திட்டமிடப்பட்டது. இதன் வாயிலாக ஒவ்வொரு வாரமும் நான்கு முதல் ஐந்து மாநிலங்களில் அமல்படுத்தப்படுகிறது.

22 மாநிலங்கள்

22 மாநிலங்கள்

முதன் முதலாக மாநிலத்திற்குள்ளான இ-வே பில்லங் முறையை ஏப்ரல்1 ம் தேதியே துவங்கி கணக்கை ஆரம்பித்து வைத்தது கர்நாடகா. இதன் பின் ஆந்திரா,அருணாச்சல், பிகார், குஜராத், ஹர்யாணா, ஹிமாச்சல், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து, சிக்கிம், தெலங்கானா, திரிபுரா, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், புதுச்சேரி, அசாம் மற்றும் ராஜஸ்தான் என 22 மாநிலங்களில் இத்திட்டம் பயன்பாட்டில் உள்ளது.

ஜூன்1

ஜூன்1

சமீபத்தில் மே25 அன்று லட்சத்தீவு மற்றும் சண்டிகரில் துவங்கப்பட்டது. வெகு விரைவில் மே31 அன்று மகாராஷ்டிராவில் துவங்கவுள்ள இது, பஞ்சாப் மற்றும் கோவாவில் ஜூன் 1முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

 4.15 கோடி இ-வே பில்

4.15 கோடி இ-வே பில்

அரசு ஆவணங்களின் படி இ-வே பில் அமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்தி, இ-வே பில்கள் நாடு முழுவதும் வெற்றிகரமாகத் தரப்படுகின்றன. மே13வரை, 45 நாட்கள் கால அளவில் கிட்டத்தட்ட 4.15 கோடிக்கும் அதிகமான இ-வே பில்கள் தரப்பட்டுள்ளது. அதில் மாநிலங்களுக்கிடையேயான சரக்கு பரிமாற்றங்களின் 1கோடி இ-வே பில்களும் அடக்கம்.

மாநிலங்களுக்கிடையேயான மற்றும் மாநிலத்திற்குள்ளான சரக்கு போக்குவரத்து ஜூன்3 முதல் கட்டாயமாக்கப்படுகிறது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள தொழில்கள் ஒருங்கிணைக்கப்படும்.

 

7 முக்கிய விசயங்கள்

7 முக்கிய விசயங்கள்

தொழில் செய்பவர்கள் இதற்குத் தயாராக, கவனத்தில் கொள்ளவேண்டிய 7 முக்கிய விசயங்களை இங்கே காணலாம்.

1) http://ewaybillgst.gov.in இணையதளத்திற்குச் சென்று ஜி.எஸ்.டி அடையாள எண்ணை (GSTIN) பயன்படுத்தி இ-வே பில்லை பெறலாம்.

2) வரிவிதிக்கக்கூடிய பொருட்களின் மதிப்பு வரியுடன் சேர்த்து ரூ50,000 க்கு அதிகமாக இருக்கும் போது ,இ-வே பில் கட்டாயம் பெற வேண்டும்.

3) நீங்கள் ஒரு தொழிலுக்குத் தேவையான மூலப்பொருளை அனுப்பினால், நீங்களோ அல்லது அதைப் பெறுபவரோ இ-வே பில்லை பெற வேண்டும்.

4) விநியோகஸ்தராக, நீங்கள் சரக்கு பரிமாற்றுபவர், இணைய வர்த்தகச் செயல்பாட்டாளர் அல்லது கொரியர் நிறுவனத்தின் இ-வே பில்களின் பகுதி அ வை அங்கீகரிக்கலாம்.

5) நீங்கள் தொழில் செய்யும் முக்கிய இடத்திற்கும், சரக்கு கையாள்பவர்களின் இடத்திற்கும் உள்ள தூரம் 50 கிலோ மீட்டருக்குக் குறைவு எனில், இ-வே பில்லின் பகுதி அ மட்டுமே போதுமானது. பகுதி ஆ தேவையில்லை.

6) இ-வே பில்லை பெற்றவுடன், சரக்குகளைப் பெறுகின்றவர் குறித்த நேரம் அல்லது 72 மணி நேரத்தில் எது குறைவோ அதற்குள் உறுதி செய்யலாம் அல்லது மறுக்கலாம்.

7) ஒருவேளை சரக்குகள் ரெயில், கப்பல் அல்லது விமானம் மூலம் அனுப்பப்படுவதாக இருந்தால், அதை அனுப்புபவரோ அல்லது பெறுபவரோ தான் இ-வே பில்லை பெற முடியும். பரிமாற்றம் செய்பவர் பெறமுடியாது. அது போன்ற சூழ்நிலைகளில் ,பொருட்களை அனுப்பிய பின்னர்க் கூட இ-வே பில்லை பெறலாம்.

 

வருமான வரித்துறை

வருமான வரித்துறை

தற்போதைய நிலவரப்படி, தொழில்கள் இ-வே பில் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலமும், வரிவிதிப்பு ஆணையம் அதைச் சரியாக நடைமுறைப்படுத்துவதன் மூலமும் நாடு முழுவதுமான ஒரு இ-வே பில் வெற்றிகரமாகச் சாத்தியமாகும் எனக் கூறப்படுகிறது.

எல்லையில்லா வளர்ச்சி

எல்லையில்லா வளர்ச்சி

தொழில் நிறுவனங்கள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இணைவதன் மூலம், மாநில எல்லைகளில் வர்த்தகம் எல்லையில்லா வளர்ச்சியடையும்.இதன் மூலம் தொழில் நிறுவனங்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் நிம்மதி அடையும் நேரமாகவும் அமையும்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Intra state Eway Bill: 7 things to keep in mind from June 3

Intra state Eway Bill: 7 things to keep in mind from June 3
Story first published: Thursday, May 31, 2018, 17:19 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X