யார் இந்த ‘அதிதி கமல்’ இவருக்கும் பதஞ்சலி கிம்போ செயலிக்கும் என்ன தொடர்பு?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாட்ஸ்ஆப்-க்கு போட்டியாகப் பதஞ்சலி நிறுவனம் உருவாக்கிய கிம்போ செயலி புதன்கிழமை முதல் இணையத்தில் டிரெண்ட் ஆகியுள்ளது. இந்தச் செயலியை பதஞ்சலி நிறுவனம் உருவாக்க துணையாக இருந்தவர் தான் அதிதி கமல்.

 

யார் இந்த அதிதி கமல்? பதஞ்சலி நிறுவனத்துடன் இணைந்து இவர் இந்தக் கிம்போ செயலியை உருவாக்கக் காரணம் என்ன என்று விளக்காக இங்குப் பார்க்கலாம்?

கூகுள்

கூகுள்

அதிதி கமல் கூகுள் நிறுவனத்தின் ஹாங்அவுட்ஸ் செயலி பிரிவில் குழு தலைவராகப் பணிபுரிந்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் யாகூ மெயில், ஆரக்கிள் நிறுவனங்களிலும் இவர் பணிபுரிந்துள்ளார்.

அதிதி

அதிதி

கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அதிதி கமல் தற்போது அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆப்டியோஸ் என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகச் செயல்பட்டு வருகிறார். இந்த நிறுவனம் 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கப்பட்டுள்ளது.

சுதேசி
 

சுதேசி

பதஞ்சலி நிறுவனம் சுதேசி, உள்நாட்டுத் தயாரிப்புகள், உள்நாட்டுச் சந்தையில் விற்பனை செய்வது. இது தான் எங்களது தாரக மந்திரம் என்று கூறி வரும் நிலையில் அப்படி அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஒரு நிறுவனத்தில் தனது செயலியை உருவாக்கியுள்ளார் என்று தெரியவில்லை.

படிப்பு

படிப்பு

தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான அதிதி கமல் கணினி அறிவியல் படிப்பில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

அதிதி - பதஞ்சலி

அதிதி - பதஞ்சலி

இந்தியர்களுக்கான ஒரு சாட்டிங் செயலியை உருவாக்க வேண்டும் என்ற கனவோடு பதஞ்சலி நிறுவனத்தினைத் தொடர்பு கொண்ட அதிதி கமல் அது குறித்துப் பாபா ராம்தேவ் உள்ளிட்டோருடன் விளக்க அவர்கள் இதற்குப் பதஞ்சலி நிறுவனம் சார்பில் நிதி அளித்துள்ளனர்.

தனிநபர் சுதந்திரம்

தனிநபர் சுதந்திரம்

கிம்போ செயலியை நிறுவும் போது இந்தச் செயலி போனின் கேமரா, தொடர்புகள், இருப்பிடம், மைக் போன்றவற்றை எல்லாம் அணுகுவதற்கான அனுமதிகளையும் பெறுகிறது. அமெரிக்க நிறுவனம் ஒன்று இதனை உருவாக்கி இருக்கும் போது தரவு பாதுகாப்பு எப்படி என்ற அச்சமும் மக்கள் மனதில் நிலவி வருகிறது.

சர்ச்சைகள்

சர்ச்சைகள்

போலே என்ற செயலியை தான் கிம்போ செயலியாக மாற்றியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் இந்தச் செயலி மூலமாகத் தங்களது நண்பர்களின் மொபைல் தகவல்களை எல்லாம் படிக்க முடிகிறது என்று ஒருவர் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் இன்னும் செயலியை நிறுவும் போது போலோ ஒரு முறை கடவுச்சொல் என்று தான் தகவல்கள் மொபைல் எண்ணிற்கு வருவதாகவும் கூறப்படுகிறது.

கூகுள் பிளே ஸ்டோர்

கூகுள் பிளே ஸ்டோர்

இது போன்று செயலியில் பல சர்ச்சைகள் உள்ள நிலையில் அதற்கான தீர்வுகளை எல்லாம் சரி செய்யத் தான் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து கிம்போ செயலி நீக்கப்பட்டுள்ளதகவும் தெரியவந்துள்ளது.

 கிம்போவில் உள்ள வசதிகள்

கிம்போவில் உள்ள வசதிகள்

கிம்போ செயலியில் பிரைவேட் சாட், குழு சாட், வீடியோ கால், வாய்ஸ் கால், ஆடியோ பகிர்வு, வீடியோ பகிர்வு, படங்கள் பகிர்வு, ஸ்டிக்கர்கள், ஜிஃ படங்கள், இருப்பிடம் மற்றும் பகிர்தல் பொன்ற வாட்ஸ்ஆப் செயலியில் உள்ளது போன்ற பல சேவைகளும் அளிக்கப்படுகிறது.

 போலி செயலிகள்

போலி செயலிகள்

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து கிம்போ செயலி நீக்கப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் போது எப்படி வண்டு முருகன், பட்டை முருகன், சேட்டை முருகன் என்று ஒரே பெயரில் பலர் போட்டியிடுவார்களோ அதே போன்று கிம்போ செயலி பெயரிலும் பல போலி செயலிகள் பிளே ஸ்ட்ரோல் வெளியாகியுள்ளன. இதில் எது அசல் என்று அறிந்து மக்கள் பயன்படுத்தினால் அவர்களது தனிநபர் விவரங்கள் பாதிக்காமல் இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Meet Aditi Kamal, the woman behind WhatsApp’s desi rival Kimbho

Meet Aditi Kamal, the woman behind WhatsApp’s desi rival Kimbho
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X