மும்பை வருமான வரி அலுவலகத்தில் தீ விபத்து.. நீரவ் மோடி, மெஹூல் சோக்ஸி ஆவணங்கள் என்ன ஆனது?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: சிந்தியா இல்லத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் கிட்டத்தட்ட 13,000 கோடி ரூபாய் மோசடி செய்த நீரவ் மோடி மற்றும் அவரது மாமா மெஹூல் சோக்ஸி நிறுவனங்களில் நடத்தப்பட்ட புலனாய்வு தொடர்பான ஆவணங்கள் அழிக்கப்பட்டு விட்டதாக, சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

 
மும்பை வருமான வரி அலுவலகத்தில் தீ விபத்து.. நீரவ் மோடி, மெஹூல் சோக்ஸி ஆவணங்கள் என்ன ஆனது?

ஆனால், இதுபோன்ற தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு மாறானவை என்பதோடு, தவறாகப் பரப்பப்பட்ட தகவல்கள் என்றும், இதன்மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது.

 

மேலும், நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோரின் நிறுவனங்களில் நடத்தப்பட்ட புலனாய்வு தொடர்பான ஆவணங்கள், பல்வேறு கட்டடங்களில் செயல்படும் சம்பந்தப்பட்ட வரி மதிப்பீட்டு அலுவலகங்களுக்கு, வரி மதிப்பீடு பணிகளுக்காக ஏற்கனவே அனுப்பப்பட்டு விட்டது என்றும் இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, மும்பை வருமான வரி அலுவலகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் நீரவ் மோடி மற்றும் மெஹூல் சோக்ஸி விசாரணை தொடர்பான ஆவணங்கள் எரிந்துபோனதாகவோ, சேதமடைந்ததாகவோ வெளியாகும் தகவல்கள் அனைத்தும் தவறாகச் சித்தரிக்கப்பட்டவையாகும் என்று பத்திரிக்கை தகவல் அலுவலகம் மூலம் தெரிவித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Fire Accident in Mumbai Income Tax Office. What happened to Nirav Modi and Mehul Chokse documents?

Fire Accident in Mumbai Income Tax Office. What happened to Nirav Modi and Mehul Chokse documents?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X