2017-2018 நிதி ஆண்டில் மத்திய அரசின் மொத்த வருவாய் மற்றும் செலவு எவ்வளவு தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய அரசு 2017-2018 நிதி ஆண்டிற்கான தணிக்கை செய்யப்படாத வருவாய் விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை தணிக்கை செய்யப்படாதது என்பதால் தற்காலிகமானதே ஆகும்.

எனவே 2017-2018 நிதி ஆண்டில் மத்திய அரசு பெற்றுள்ள தணிக்கை செய்யப்படாத வருவாயின் முழு அறிக்கையினை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

மொத்த வருவாய்

மொத்த வருவாய்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு 2017-2018 நிதி ஆண்டில் மொத்தமாக15,51,004 கோடி ரூபாய் தணிக்கை செய்யப்படாத வருவாயாகப் பெற்றுள்ளது.

 வரி வருவாய்

வரி வருவாய்

2017-18-ஆம் ஆண்டின் காலகட்டத்தில் ஜிஎஸ்டி, செஸ் என வரி வருவாயாக 2,42,662 கோடி ரூபாயினை மத்திய அரசு பெற்றுள்ளது.

வரியில்லா வருவாய்

வரியில்லா வருவாய்

மத்திய அரசின் கீழ் செயல்படும் நிறுவனங்களின் கீழ் வரியல்லாத வருவாய் 1,92,523 கோடி ரூபாயினை 2017-2018 நிதி ஆண்டில் வருவாயாகப் பெற்றுள்ளனர்.

பிற வருவாய்

பிற வருவாய்

கடனில்லாத மூலதன வரவுகள் ரூ.1,15,819 கோடி, கடனில்லாத மூலதன வரவுகளில் கடன் வசூல் (ரூ.15,624 கோடி) மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் (ரூ.1,00,195 கோடி) அடங்கும்.

மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தளித்தல்

மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தளித்தல்

வரி வருவாயை மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தளிக்கும் நடைமுறையின்படி மத்திய அரசு ரூ.6,73,005 கோடியை மாநில அரசுகளுக்கு மாற்றியுள்ளது. இது முந்தைய ஆண்டைக்காட்டிலும் ரூ.65,005 கோடி) அதிகமாகும்.

செலவு

செலவு

மத்திய அரசின் மொத்த செலவு ரூ.21,42,667 கோடியாகும் (2017-18-ஆம் ஆண்டின் மொத்த செலவின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் 96.61%). இதில், ரூ.18,78,963 கோடி வருவாய் கணக்கு, ரூ.2,63,704 மூலதனக் கணக்கில் சேரும். மொத்த வருவாய்ச் செலவில், ரூ.5,29,243 கோடி வட்டியாகச் செலுத்தப்படுகிறது. ரூ.1,91,110 கோடி முக்கிய மானியங்களாக வழங்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

FY 2018 UNAUDITED REVENUE Of UNION GOVERNMENT OF INDIA

FY 2018 UNAUDITED REVENUE Of UNION GOVERNMENT OF INDIA
Story first published: Monday, June 4, 2018, 17:42 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X