ஐசிஐசிஐ வங்கியின் புதிய தலைவர் யார்..? தேடல் துவக்கம்.. சந்தா கோச்சரின் நிலை என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தனியார் துறை வங்கி நிறுவனமான ஐசிஐசிஐ-ன் நான் - எக்சிகியூடிவ் தலைவராக உள்ள எம் கே ஷர்மாவின் பதவிக் காலம் வருகின்ற ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் புதிய தலைவருக்கான ஆட்களைத் தேடும் பணிகளைத் துவங்கியுள்ளது.

 

புதிய தலைவர் தேடும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஐசிஐசிஐ வங்கி போர்டு உறுப்பினர்கள் ஏற்கனவே உள்ள தனிப்பட்ட அதிராங்கள் கொண்ட இயக்குநர்களைத் தேர்வு செய்வதா அல்லதா வெளியில் இருந்து ஒருவரைத் தேர்வு செய்வதா என்பதைக் கூற வேண்டும் என இது குறித்த விவரம் அறிந்தவர்கள் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்துடன் பகிர்ந்துகொண்டனர்.

எம் டி மல்லையா

எம் டி மல்லையா

பல சுய அதிகாரங்கள் கொண்ட இயக்குநர்களில் பாங்க் ஆ பரோடா வங்கியின் முன்னால் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான எம் டி மல்லையா-க்கு ஐசிஐசிஐ வங்கியின் அடுத்தத் தலைவராக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

எம் டி மல்லையா ஐசிஐசிஐ வங்கியின் சுய அதிகாரங்கள் படைத்த இயக்குநர்களுள் ஒருவாராக மே 29-ம் தேதி தான் சேர்ந்துள்ளார்.

பிற இயக்குநர்கள்

பிற இயக்குநர்கள்

ஐசிஐசிஐ வங்கியில் பிற சுய அதிகாரங்கள் கொண்ட இயக்குநர்கள் என்றால் உதய் சித்தலே, திலீப் சோக்ஸி, நீலம் தவான், ராதாகிருஷ்ணன் நாயர், வி.கே. ஷாமா, மற்றும் லோக் ரஞ்சன் உள்ளிட்டோர் ஆவார்கள்.

விடியோகான்
 

விடியோகான்

விடியோகான் நிறுவனத்திற்குத் தற்போது ஐசிஐசிஐ வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ள சந்தா கோச்சர் கடன் அளிக்கக் கைமாறு பெற்று உதவியதாகக் கடந்த சில மாதங்களாகச் சர்ச்சைகளும் நிலவி வருகிறது.

உத்தரவு

உத்தரவு

இந்நிலையில் கடந்த வாரம் ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம் சந்தா கோச்சர் வீடியோகான் நிறுவனத்திற்கு அளித்த கடனில் கைமாறாகப் பயனடைந்துள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.

 தீபக் கோச்சர்

தீபக் கோச்சர்

வீடியோகான் நிறுவனத்திற்குக் கடன் அளித்து உதவுவதன் மூலம் சந்தா கோச்சரின் கனவர் தீபக் கோச்சர் நிறுவனமான நூபவர் ரெனிவபல்ஸ் நிறுவனத்திற்குப் பணம் அளித்து இருப்பதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மே மாதம் சந்தா கோச்சருக்கு பங்கு சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி வீடியோகான் மற்றும் நூபவர் நிறுவனத்துடன் தொடர்புள்ளதாகச் சந்தேகிப்பதாகவும் விசாரணைக்கு வருமாறும் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

 நோட்டிஸ்

நோட்டிஸ்

விசாரணையின் நோக்கம் விரிவானது மற்றும் உண்மைகளை ஆய்வு செய்வது மற்றும் எப்போது வேண்டுமானாலும் விசாரணை வர வேண்டும், தடயவியல் / மின்னஞ்சல் விமர்சனங்களைப் பயன்படுத்துதல் மற்றும் பொருத்தமான நபரின் அறிக்கையின் பதிவு ஆகியவற்றைப் பற்றிய அனைத்துச் சம்பந்தப்பட்ட விஷயங்களையும் உள்ளடக்கியது என்று சந்தா கோச்சருக்கு அனுப்பப்பட்ட நோட்டிஸ்ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தா கோச்சர்

சந்தா கோச்சர்

வங்கி நிர்வாகம் செய்த விசாரணையில் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக இயக்குநராக இருந்த சந்தா கோச்சர் முறையான விதிகளைப் பின்பற்றாமல் கைமாறாக உதவிகளைப் பெற்றுக்கொண்டு கடன் அளித்திருப்பது தெரியவந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதம் ஐசிஐசிஐ வங்கி போர்டு உறுப்பினர்கள் சந்தா கோச்சர் மீது முழு நம்பிக்கையுடன் கைமாறாக உதவிகள் பெற்று அவர் கடன் அளித்திருக்க வாய்ப்புகளே இல்லை என்றும் தெரிவித்து இருந்தது.

பங்கு சந்தை

பங்கு சந்தை

திங்கட்கிழமை பங்கு சந்தை முடிந்த பிறகு செய்யப்பட்ட அறிக்கை தாக்கலின் போது சந்தா கோச்சருக்கும் மோசடியில் தொடர்புடையது விசாரணையில் தெரியவந்துள்ளது என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Who is the new Chairman of ICICI Bank? Search Started. What's the status of Chanda Kochhar allegations?

Who is the new Chairman of ICICI Bank? Search Started. What's the status of Chanda Kochhar allegations?
Story first published: Tuesday, June 5, 2018, 15:18 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X