குர்கிராமில் பணிநீக்கம் செய்ததால் மனித வள அதிகாரியை துப்பாக்கியால் சுட்ட முன்னாள் ஊழியர்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குர்கிராம்: ஜப்பானிய மிட்சுபிஷி நிறுவனத்தில் பணிபுரிந்த வந்த ஒரு ஊழியரை பணிநீக்கம் செய்ததால் மனம் உடைந்த முன்னாள் ஊழியர் மனித வள அதிகாரியைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

நேற்று காலை 9 மணி அளவில் பினேஷ் சர்மா எனப்படும் மிட்சுபிஷி நிறுவனத்தின் மனித வள மேம்பட்டு அதிகாரி அலுவலகத்திற்குக் காரில் செல்லும் போது துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்.

 துப்பாக்கிச்சூடு

துப்பாக்கிச்சூடு

பினேஷ் சர்மா காரில் சென்று கொண்டு இருக்கும் போது இரண்டு நபர்கள் அவரது காரினை துப்பாக்கி முனையில் தடுத்து நிறுத்த முயல்வதைப் பார்த்து வேகமாகச் சென்றுள்ளார். உடனே அவரைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கு இருந்து அவர்கள் தப்பியோடியுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிருக்குப் பாதிப்பில்லை

உயிருக்குப் பாதிப்பில்லை

இரண்டு முறை பினேஷ் சர்மாவின் உடலில் குண்டடிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிருக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜோகிந்தர்
 

ஜோகிந்தர்

ஜோகிந்தர் என்ற ஊழியரின் நடவடிக்கை சரியில்லை என்ற காரணங்களுக்காகப் புதன் கிழமை பினேஷ் சர்மா பணி நீக்கம் செய்துள்ளார். பணிநீக்கம் செய்யும் போது பினேஷை ஜோகிந்தர் மிரட்டியும் உள்ளார். ஆனால் அதனை அவர் பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

 விசாரணை

விசாரணை

துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்களில் ஒருவர் ஜோகிந்தர் தான் என்று காவல் துறையினர் உறுதி செய்துள்ள நிலையில் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவரது உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sacked Mitsubishi employee fires HR head in Gurugram

Sacked Mitsubishi employee fires HR head in Gurugram
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X