ரயில் பயணிகள் அதிக விலையில் உணவு பொருட்களை வாங்கி ஏமாராமல் இருக்கப் புதிய செயலி அறிமுகம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இனி ரயில் பயணங்களில் உணவு ஆர்டர் செய்து பெறும் முன்பு அதன் விலை என்ன என்று சரிபார்க்க கூடிய 'மெனு ஆன் ரயில்' செயலி ஒன்றை ஐஆர்சிடிசி அறிமுகம் செய்துள்ளது.

'மெனு ஆன் ரயில்' என்ற இந்தச் செயலியினைத் திங்கட்கிழமை ரயில் அமைச்சரான பியூஷ் கோயல் அறிமுகம் செய்துள்ளார்.

ஐஆர்சிடிசி அறிமுகம் செய்துள்ள இந்தத் திட்டத்தின் கீழ் ரயில்வே கேட்டரிங் ஊழியர்களால் அதிக விலைக்கு உணவு பொருட்களை விற்க முடியாது என்று கூறப்படுகிறது.

மென் ஆன் ரயில் செயலியில் மெயில்/எக்ஸ்பிரஸ் உட்பட ஹம்சஃபர் ரயில்கள், ராஜ்தானி ரயில்கள், சதாப்தி ரயில்கள், துரந்தோ ரயில்கள், கட்டிமேன் ரயில்கள் மற்றும் தேதாஸ் ரயில்களின் உணவு விலை அட்டியல்கள் இருக்கும் என்று கூறுகின்றனர்.

எனவே மெனு ஆன் ரயில் செயலியின் 10 சுவாரஸ்யமான தகவல்களை இங்குப் பார்க்கலாம்.

உணவுகளின் விலை

உணவுகளின் விலை

மென் ஆன் ரயில் செயலியில் ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் டீ, காபி, தண்ணீர் பாட்டில், ஜனதா உணவு, ஸ்டாண்டர்டு சைவ தட்டு, ஸ்டாண்டர்டு அசைவ தட்டு விலை போன்றவை எல்லாம் குறிப்பிடப்பட்டு இருக்கும்.

ஏ-லா-கார்டே-பிரிவு

ஏ-லா-கார்டே-பிரிவு

ஏ-லா-கார்டே-பிரிவில் 96 உணவுகளின் விலையினைக் காலை சிற்றுண்டி, லைட் சாப்பாடு, கோம்போ சாப்பாடு, அசைவ சாப்பாடு, நீரிழிவு உணவுகள், ஜெயின் உணவு, இனிப்புகள் போன்ற வகைகளாகப் பிரித்து அளித்துள்ளனர்.

4 முக்கிய வகைகள்

4 முக்கிய வகைகள்

மெயில் ரயில் மட்டும் இல்லாமல் எக்ஸ்பிரஸ் ரயிகளிலும் பானங்கள், காலை உணவு, சாப்பாடு மற்றும் ஏ-லா-கார்டே என்று 4 வகையாக உணவு வகைகளைப் பிரித்துள்ளனர்.

தமாதமாகச் செல்லும் ரயில்கள்

தமாதமாகச் செல்லும் ரயில்கள்

துரந்தோ ரயில்கள் ஸ்லீப்பர் கிளாஸ், கட்டிமேன் ரயில்களில் முன்பே புக் செய்த உணவு மற்றும் தேஜஸ் ரயில் உனவுகளின் விலை பட்டியல் போன்றவையும் மேன் ஆன் ரயில் செயலியில் கிடைக்கும். ரயில்கள் தாமதமாகச் செல்லும் போது அப்போது என்ன உணவுகள் கிடைக்கும் என்பதையும் செயலிகள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

வரி

வரி

ரயில் உணவு வாங்கும் போது வரி மூலம் குழப்பம் ஏதும் ஏற்படக் கூடாது என்பதால் செயலில் அனைத்து விலைகளும் வரி உட்பட்டு இருக்கும் என்பதையும் தெரிவித்துள்ளனர்.

இயங்குதளங்கள்

இயங்குதளங்கள்

மெனு ஆன் ரயில் செயலி கூகுள் பிளே ஸ்டோர் மூலம் ஆண்டிராய்டு போன்களுக்கும், ஐஓஎஸ் இயங்கு தளத்திற்கு ஏற்றவாறு அப்பிள் ஸ்டோரிலும், கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

மெனு ஆன் ரயில் சேவை

மெனு ஆன் ரயில் சேவை

மேன் ஆன் ரயில் சேவையினை ஸ்மார்ட்போன் என்று இல்லாமல் லேப்டாப், கணினிகள் மட்டும் இல்லாமல் இணையப் பக்கத்திலும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர்.

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

ரயில் பயணம் செய்யும் போது என்ன உணவு கிடைக்கும் மற்றும் டிக்கட்டுடன் உணவு புக் செய்யும் எவ்வளவு உணவு கிடைக்கும் என்ற விழிப்புணர்வை மென் ஆன் ரயில் செயலி அளிக்கும்.

இந்தியன் ரயில்வேஸ்

இந்தியன் ரயில்வேஸ்

ரயில்களில் அதிக விலைக்கு உணவுகளை விற்பதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில் இந்தியன் ரயில்வே பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் பில் இல்லாமல் உணவுக்கான கட்டணத்தினைச் செலுத்த வேண்டாம், உணவுக்கான கட்டணத்தினைச் செலுத்த பிஓஎஸ் இயந்திரங்கள் சேவை போன்றவற்றையும் ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Menu on Rail: IRCTC launches new app for passengers To Avoid overcharging on trains & stations

Menu on Rail: IRCTC launches new app for passengers To Avoid overcharging on trains & stations
Story first published: Tuesday, June 12, 2018, 15:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X