ஐம்பது வயதிற்குள் சொந்தக்காலில் பில்லியனர்கள் ஆன இந்தியர்கள்!!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பரம்பரை சொத்துக்கள் ஏதும் இல்லாமல் சொந்தக்காலில் பில்லியனர் ஆவது என்பது மிகப் பெரிய சாதனை. அதுவும் தங்களது குடும்பங்களிடம் இருந்து எந்த ஒரு சொத்துக்களைப் பெறாமல் இங்கு உள்ளவர்கள் பில்லியனர்கள் ஆகியுள்ளனர்.

 

சராசரியாகப் பில்லியனர்கள் ஆவதற்கான வயது 51 என்று இருக்கும் நிலையில் இங்குச் சொந்தமாகப் பில்லியனர்களில் சிலருக்கான வயது 50 கூட இல்லை என்பது ஆச்சர்யத்தினை அளிக்கிறது.

அப்படி 50 வயதிற்குள் பில்லியனர்கள் ஆகியுள்ள 6 இந்தியர்களைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

ஆச்சர்யா பாலகிருஷ்ணா

ஆச்சர்யா பாலகிருஷ்ணா

பதஞ்சலி நிறுவனத்தினை யோகா குரு பாபா ராம்தேவ் உடன் சேர்ந்து ஆச்சர்யா பாலகிருஷ்ணா 2006-ம் ஆண்டுத் துவங்கினார். 2018 ஏப்ரல் மாதம் வரையிலான தரவுகளின் படி இவரது சொத்து மதிப்பு 6.4 பில்லியன் டாலர்கள் ஆகும்.

பதஞ்சலி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் ஆச்சர்யா பாலகிருஷ்ணா வசம் தான் நிறுவனத்தின் 98.6 சதவீத பங்குகள் உள்ளன. இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் எப்எம்சிஜி நிறுவனமாகப் பதஞ்சலி உள்ளது.

 

விஜய் சேகர் ஷர்மா

விஜய் சேகர் ஷர்மா

பேடிஎம் நிறுவனரான விஜய் சேகர் ஷர்மா 40 வயதிற்குள் பில்லியனர்கள் ஆனவர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். 2011-ம் ஆண்டு ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் என்ற நிறுவனத்தினைத் துவங்கி அதன் கீழ் மொபைல் வாலெட், பேமெண்ட்ஸ் வங்கி போன்ற சேவைகளை வழங்கி வருகிறார்.

2018 ஏப்ரல் மாதம் வரை இவரது சொத்து மதிப்பு 1.73 பில்லியன் டாலர் மற்றும் இவரது வயது 39 ஆகும். பேடிஎம் நிறுவனத்தின் மதிப்பு 10 பில்லியன் டாலர் என்ற நிலையில் இதில் 16 சதவீத பங்குகளை விஜய் சேகர் ஷர்மா வைத்துள்ளார்.

 

சமீர் கெலட்
 

சமீர் கெலட்

ரியஸ் எஸ்டேட், வீட்டு கடன் மற்றும் பிற கடன் சேவைகளை வழங்கும் நிறுவனமாக 2000-ம் ஆண்டுத் துவங்கப்பட்ட இந்தியா புல்ஸ்-ன் நிறுவனர் மற்றும் தலைவர் ஆன சமீர் கெலட் வயது 44 ஆகும். ஐஐடி-ன் முன்னால் மாணவரான இவரது சொத்து மதிப்பு 3.7 பில்லியன் டாலர் ஆகும். இந்தியாவின் டாப் 50 பில்லியனர்களில் இவரும் ஒருவர் ஆவார்.

 ரிஷி ஷா & சாரதா அகர்வால்

ரிஷி ஷா & சாரதா அகர்வால்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி ஷா மற்றும் சாரதா இருவரும் இணைந்து துவங்கிய நிறுவனத்தின் மூலம் சென்ற ஆண்டு முதல் முறையாக பில்லியனர்கள் பட்டியலில் சேர்ந்துள்ளனர்.

ரிஷி ஷாவின் சொத்து மதிப்பு 3.9 பில்லியன் டாலர்கள் ஆகவும், சாரதாவின் சொத்து மதிப்பு 1.1 பில்லியன் டாலராகவும் உள்ளது. இருவரும் சேர்ந்து சிகாகோவில் ஒவுட்கம் ஹெல்த் என்ற நிறுவனத்தினை 2006-ம் ஆண்டுத் துவங்கினார்கள். இந்த நிறுவனத்தின் இன்றைய மதிப்பு 5 பில்லியன் டாலர்கள் ஆகும்.

 

திவ்யாங்க் துராகியா

திவ்யாங்க் துராகியா

டைரக்டி வெப் பிராடக்ட்ஸ் இணை நிறுவனரான திவ்யாங்க் துராகியா-ன் வயது 36 ஆகும். இவது சொத்து மதிப்பு 1.76 பில்லியன் டாலர்.

2017-ம் ஆண்டுக்கான ஹுருன் இந்தியா ரிச் பட்டியலில் 95 வது இடத்தினை இவர் பிடித்து இருந்தார். இவரது வயது 36 ஆகும்.

 

சச்சின் & பின்னி பன்சால்

சச்சின் & பின்னி பன்சால்

2007-ம் ஆண்டுப் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு சச்சின் பன்சால் & பின்னி பன்சால் இருவரும் துவங்கினர். 2018-ம் ஆண்டுப் பிளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை 16 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கிய பிறகு இருவரும் பல மடங்கு பயனை அடைந்துள்ளனர். அது மட்டும் இல்லாமல் பல சிறு ஸ்டார்ட்அப் நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளனர். இருவரின் இன்றைய தொத்து மதிப்பு 1.5 பில்லியன் டாலரினை விட அதிகம் என்று தரவுகள் கூறுகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian Youngest Self Made Billionaires Under 50

Indian Youngest Self Made Billionaires Under 50
Story first published: Monday, June 18, 2018, 12:58 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X