தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் திடீர் ராஜினாமா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் ராஜினாமா செய்துள்ளார் என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி பேஸ்புக் மூலமாகத் தெரிவித்துள்ளார்.

 

அரவிந்த் சுப்பிரமணியத்தின் ராஜினாமா குறித்துப் பேஸ்புக்கில் பதிவிட்டு இருந்த அருண் ஜேட்லி "அவரது ராஜிநாமாவிற்கான அவரின் தனிப்பட்ட விருப்பம், அது அவருக்கு முக்கியமானது" என்றும் ஆனால் எனக்கு அவரது ராஜினாமாவை ஏற்பது தவிர வேறு எந்த வழியை அவர் எனக்கு அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

16வது பொருளாதார ஆலோசகர்

16வது பொருளாதார ஆலோசகர்

இந்தியாவின் தலைமை 16வது பொருளாதார ஆலோசகராக அரவிந்த் சுப்பிரமணியன் 2014 அக்டோபர் மாதம் முதல் மூன்று ஆண்டுகளுக்கு வகித்து வந்தார். இவரது பதவி காலம் முடிவடைந்து அதனைத் தொடர் அருண் ஜேட்லி வலியுறுத்தி வந்துள்ளார்.

அரவிந்த் சுப்பிரமணியன்

அரவிந்த் சுப்பிரமணியன்

அருண் ஜேட்லியின் கோரிக்கையினை ஏற்காத அரவிந்த் சுப்பிரமணியம் தனக்குச் சில முக்கியக் குடும்பப் பொறுப்புகள் உள்ளதாகவும் தனது வாழ்நாளில் இதுவே பணி, மன நிறைவாக இருந்ததது என்றும் அருண் ஜேட்லியிடம் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் பதிவு

அரவிந்த் சுப்பிரமணியன் திடீர் ராஜினாமா குறித்த அருண் ஜேட்லியின் பேஸ்புக் பதிவு.

படிப்பு
 

படிப்பு

அரவிந்த் சுப்பிரமணியன் டெல்லி ஸ்டீபன்ஸ் கல்லுரியில் பட்டம் பெற்று, ஐஐஎம் அகமதாபாத்தில் எம்பிஏ பட்டம் பெற்றது மட்டும் இல்லாமல் இங்கிலாந்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் டார்க்ட்டர் பட்டமும் பெற்றுள்ளார்.

டிவிட்

தனது ராஜினாமா கடிதத்தினை ஏற்றுக்கொண்ட அருண் ஜேட்லிக்கு நன்றி தெரிவித்த அரவிந்த் சுப்பிரபணியத்தின் டிவிட்.

யார் அடுத்தத் தலைமை பொருளாதார ஆலோசகர்?

யார் அடுத்தத் தலைமை பொருளாதார ஆலோசகர்?

அரவிந்த் சுப்ரமணியன் பொருளாதார ஆலோசகர் பதவியினை ராஜினாமா செய்ததை அடுத்து யார் இந்தப் பொறுப்பினை ஏற்பார் என்று விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Arvind Subramanian quits as Chief Economic Advisor: Arun Jaitley

Arvind Subramanian quits as Chief Economic Advisor: Arun Jaitley
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X