ரயில் தாமதமாக வருகிறதா? சாப்பாடு தண்ணீர் பாட்டில் இலவசம், இந்தியன் ரயில்வேஸ் அதிரடி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஞாயிற்றுக்கிழமைகளில் ரயில் பாதைகள் சீர் அமைக்கும் பணிகள் நடைபெறும் போது ரயில்கள் தாமதமாகச் சென்றால் உணவும் தண்ணீர் பாட்டிலும் இலவசமாக வழங்கப்படும் என்று இந்தியன் ரயில்வேஸ் தெரிவித்துள்ளது.

ரயில் தாமதாகச் செல்லும் போது வழங்கப்படும் இலவச உணவானது டிக்கெட் புக் செய்யப்பட்டுப் பயணம் செய்பவர்களுக்கு மட்டுமே என்றும் ரயில்வே அமைச்சரான பியூஷ் கோயல் திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.

மெகா பிளாக்ஸ்

மெகா பிளாக்ஸ்

ஞாயிற்றுக் கிழமைகளில் வழங்கப்படும் இந்த இலவச உணவு சேவையானது மெகா பிளாக்ஸ் எனப்படும் ரயில் பாதை சீரமைக்கும் பணிகள் நடைபெறும் காரணங்களுக்காகத் தான் என்றும், இதற்கான முடிவுகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

நேரம் தவறாமை

நேரம் தவறாமை

இந்திய ரயிகளின் நேரம் தவறாமை மதிப்பெண்கள் 65 சதவீதத்தில் இருந்து 80 சதவீதமாகச் சரிந்துள்ளதாக அன்மை ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. ரயில்களைச் சரியான நேரத்தில் இயக்குவது குறித்தும், ரயில் நேரங்களை மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதால் பயணிகள் சிரமம் அடைந்துள்ளதாகவும் இந்தச் சிக்கல்கள் விரைவில் தீரும் என்றும் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

 முக்கியக் கவனம்

முக்கியக் கவனம்

ரயில் பயணங்களில் பாதுகாப்பினை அதிகரிப்பது மற்றும் சரியான நேரத்தினைக் கடைப்பிடிப்பதில் முக்கியக் கவனம் செலுத்தி வருவதாகவும் அதே நேரம் தூய்மை மற்றும் உணவு தரமும் அதிகரிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 கூடுதல் நடைமேடைகள்

கூடுதல் நடைமேடைகள்

மேலும் அனைத்து ரயில்வே மண்டலங்களையும் கூடுதலான நடைமேடைகளை அமைக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளதாகவும் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

கூடுதல் டிராக்குகள்

கூடுதல் டிராக்குகள்

அதிக ரயில்கள் பயணிக்கும் பாதைகளில் கூடுதலான டிராக்குகளை அமைக்கும் திட்டம் உள்ளதாகவும், அதன் முதற்கட்டமாக அலகாபாத் - முகல்சாராய் வழித்தடத்தில் கூடுதல் தடம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் இதே போன்ற பணிகள் அனைத்து மண்டலங்களிலும் நடைபெறும் என்றும் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

If Train Delay On Sunday's Soon Passengers Can Get Free Meals

If Train Delay On Sunday's Soon Passengers Can Get Free Meals
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X