டார்கெட் மோடி.. 2019 தேர்தல் முன்னிட்டு மம்தா பேனர்ஜி-ன் அதிரடி திட்டங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2019-ம் ஆண்டுப் பொதுத் தேர்தல் வர இருக்கும் நிலையில் மேற்கு வங்க முதல்வரான மம்தா பேனர்ஜி 'நிஜோஸ்ரீ' என்ற 2 படுக்கை அறைகள் கொண்ட பிளாட்கள் 10 லட்சம் முதல் என்ற திட்டத்தினை அறிமுகம் செய்ய உள்ளார்.

இந்தத் திட்டம் குறித்து நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சரான பிர்ஹத் ஹாக்கிம் புதன்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்த போது மம்தா பேனர்ஜி அமைச்சரவை கூட்டத்தில் இந்தத் திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

யாருக்குப் பயண் அளிக்கும்?

யாருக்குப் பயண் அளிக்கும்?

மம்தா பேனர்ஜி தலைமையிலான அரசு இந்தத் திட்டம் நகரங்களின் அருகில் பிளாட் வாங்க விரும்புபவர்களுக்கு மிகப் பெரிய பயணம் அளிக்கும் என்றும், விலையும் மிகக் குறைவு என்று தெரிவித்துள்ளனர்.

எப்போது பிளாட் வழங்கப்படும்

எப்போது பிளாட் வழங்கப்படும்

நிஜோஸ்ரீ திட்டத்தின் கீழ் ஒரு படுக்கை அறை மற்றும் இரண்டு படுக்கை அறை கொண்ட பிளாட்கள் வழங்கப்பட உள்ளதாகவும், முதற்கட்டமாக 50,000 பிளாட்கள் கட்டப்பட்டு 2 முதல் 3 ஆண்டுகளுக்குள் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

எப்படி விண்ணப்பிப்பது?
 

எப்படி விண்ணப்பிப்பது?

மேற்கு வங்க அரசின் இந்தத் திட்டம் கீழ் பிளாட் வாங்க விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் லாட்டரி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பிளாட் வழங்கப்படும் என்றும் ஒருவருக்கு ஒரு பிளாட் மட்டுமே அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாடு

கட்டுப்பாடு

ஆனால் 378 சதுர அடி பரப்பில் இருக்கும் ஒரு படுக்கை அறை கொண்ட பிளாட் வாங்குபவர்களின் மாத சம்பளம் 15,000 ரூபாய் வரையில் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், 559 சதுர அடி பிளாட் வாங்குபவர்களின் மாத சம்பளம் 30,000 ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடுகள் வைத்துள்ளனர்.

விலை

விலை

பிளாட்கள் பல்வேறு இடங்களில் கட்டப்படும் என்றும் 1 படுக்கை அறை கொண்ட பிளாட் 7.28 லட்சத்திற்கும் 2 படுக்கை அறை கொண்ட பிளாட் 9.26 லட்சத்திற்கும் அளிக்கப்பட உள்ளது.

அகவிலைப்படி உயர்வு

அகவிலைப்படி உயர்வு

2019-ம் ஆண்டின் பொதுத் தேர்தலின் போது மாநில அரசு ஊழியர்களின் வாக்குகளைக் கவர வேண்டும் என்பதற்காக அகவிலைப்படியினை 18 சதவீதம் உயர்த்தியும் மம்தா பேனர்ஜி செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார். மேலும் பல அறிவிப்புகள் அடுத்தடுத்து வர இருப்பதாகவும் தமிழ் குட்ரிடர்ந்தளத்திற்குக் கிடைத்துள்ள செய்திகள் கூறுகின்ற நிலையில் தமிழகத்திலும் இது போன்ற திட்டங்களுக்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Target Modi: Action Plans for Mamata Banerjee For 2019 Lok Sabha Elections

Target Modi: Action Plans for Mamata Banerjee For 2019 Lok Sabha Elections
Story first published: Thursday, June 21, 2018, 16:46 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X