மத்திய உள்துறை அமைச்சக அதிகாரியின் டெபிட் கார்டு மூலம் அமெரிக்காவில் 67,000 ரூபாய் மோசடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு டிபிட் கார்டினை டூப்ளிகேட் கார்டாக மாற்றும் தொழில்நுட்பங்களைப் பற்றி நாம் கேள்வி பட்டு இருப்போம். அப்படி ஒரு தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவரின் கார்டில் இருந்து அமெரிக்காவில் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாகப் பாராளுமன்ற சாலையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பரிவர்த்தனை

அமெரிக்காவில் பரிவர்த்தனை

ஜூன் 7-ம் தேதி விடியற்காலை காலை 1:35 மற்றும் 2:09 மணிக்கு அமெரிக்காவில் உள்ள கடைகளில் இவரது டெபிட் கார்டு மூலம் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாக இவருக்கு எஸ்எம்எஸ் வந்துள்ளது. மேலும் இந்தப் பரிவர்த்தனை மோசடியினைச் செய்யும் போது இந்த உள்துறை அமைச்சக அதிகாரிக்கு ஒரு முறை கடவுச்சொல்லும் வந்துள்ளது.

வங்கி கணக்கு சேவை முடக்கம்

வங்கி கணக்கு சேவை முடக்கம்

சில பரிவர்த்தனைகளுக்குப் பிறகு இவரது வங்கி கணக்கில் இருந்து ஏதோ மொசடி நடைபெறுவதாகச் சந்தேகங்கள் எழுந்ததன் பேரில் வங்கி நிர்வாகம் கணக்கினை முடக்கியுள்ளது.

கணக்கை முடக்கிய பிறகு பரிவர்த்தனை செய்ய முயற்சி
 

கணக்கை முடக்கிய பிறகு பரிவர்த்தனை செய்ய முயற்சி

வங்கி அந்தக் கார்டினை முடக்கிய பிறகும் அந்த மோசடி நபர் பரிவர்த்தனையினைத் தொடர்ந்து செய்ய முயன்றுள்ளார். அப்போது அதற்கான எஸ்எம்எஸ் அனுமதிகள் செய்திகளும் இவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மோசடி

மோசடி

தனது போன் மற்றும் டெபிட் கார்டு எப்போதும் தன் வசம் மட்டுமே இருந்து வந்த நிலையில் காலையில் இந்த எஸ்எம்எஸ்-களைப் படிக்குப் போது தான் மோசடி நடைபெற்றுள்ளது அந்தப் பெண் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிக்குத் தெரிந்துள்ளது.

கடைசிப் பரிவர்த்தனை விவரங்கள்

கடைசிப் பரிவர்த்தனை விவரங்கள்

மேலும் இவர் கடைசியாக டெபிட் கார்டு பரிவர்த்தனை செய்ததற்காக ரசீதுகள் போன்றவற்றையும் புகாருடன் சேர்த்து அளித்துள்ளார்.

விசாரணை

விசாரணை

காவல் துறையில் மால்வேர் போன்றவற்றைப் பயன்படுத்தி இவரது கார்டு விவரங்களைத் திருடி விரிச்சுவல் கார்டு உருவாக்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Home Ministry Official Loses Rs 67,000 As Her Debit Card Used Fraudulently In US

Home Ministry Official Loses Rs 67,000 As Her Debit Card Used Fraudulently In US
Story first published: Saturday, June 23, 2018, 14:36 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X