சிபில் கிரெடிட் ஸ்கோரினை இனி வாட்ஸ்ஆப்-ல் இலவசமாக பெறலாம்.. எப்படி?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வங்கிகளில் கடன் பெறும் போது வாடிக்கையாளர்களுக்குச் சிபில் எனப்படும் கிரெடிட் ஸ்கோரினை சரிபார்ப்பது வழக்கம். இந்தியாவில் கிரெடிட் ஸ்கோரினை சிபில், ஈக்விஃபேக்ஸ் மற்றும் எக்ஸ்பெரியன் நிறுவனங்கள் வழங்குகின்றன. ஆனால் வங்கிகள் சிபில் ஸ்கோரை தான் பெரும்பாலும் பயன்படுத்துகின்றது.

 

 கிரெடிட் ஸ்கோர்

கிரெடிட் ஸ்கோர்

கடன் பெற விண்ணப்பிக்கும் முன்பு கிரெடிட் ஸ்கோரை சரிபார்த்தாலே போதும், நமக்குக் கடன் கிடைக்குமா, இல்லையா என்பது தெரிந்துவிடும். சிறந்த கிரெடிட் ஸ்கோர் இருந்தால் கடன் பெறுவது எளிமை.

 கிரெடிட் ஸ்கோர் அதிகம் இருப்பதால் கிடைக்கும் நன்மை

கிரெடிட் ஸ்கோர் அதிகம் இருப்பதால் கிடைக்கும் நன்மை

அதிகக் கிரெடிட் ஸ்கோர் இருக்கும் போது சில வங்கிகள் குறைந்த வட்டி விகிதத்திலும் கடன் அளிக்கின்றன. பெரும்பாலும் மக்கள் கடனுக்கு விண்ணப்பித்த பிறகே இந்தக் கிரெடிட் ஸ்கோர் பற்றித் தெரிந்துகொள்வார்கள். சில நேரங்களில் கிரெடிட் ஸ்கோரை பெற கட்டணமும் செலுத்த வேண்டும்.

வாட்ஸ்ஆப்
 

வாட்ஸ்ஆப்

ஆனால் இந்தக் கிரெடிட் ஸ்கோரினை இலவசமாகப் பெற கூடிய வசதியினை வாட்ஸ் ஆப் வழங்கியுள்ளது. ஃபிண்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனத்துடன் இணைந்து வாட்ஸ் ஆப் கிரெடிட் ஸ்கோரினை வழங்க உள்ளது. இது போன்ற சேவைச் செயலிகள் வரலாற்றில் இதுவே முதன் முறை.

 கடன்

கடன்

வாட்ஸ் ஆப் நிறுவனத்து 6 மாதங்களுக்கு முன்பு இணைந்த விஷ்ஃபின் நிறுவனம் கடன் மற்றும் கிரெடிட் கார்டு விண்ணப்ப சேவையினையும் வழங்கி வருகிறது.

மிஸ்டு கால்

மிஸ்டு கால்

வாட்ஸ்ஆப் மூலம் முதலில் சிபில் கிரெடிட் ஸ்கோர் பெற 8287151151 என்ற மொபைல் எண்ணிற்கு மிஸ்டு கால் அளிக்க வேண்டும்.

வாட்ஸ்ஆப் சாட்

வாட்ஸ்ஆப் சாட்

மிஸ்டு கால் செய்த உடன் உங்கள் மொபைல் எண் சிபில் ஸ்கோர் வாட்ஸ்ஆப் சாட்-ல் சேர்க்கப்படும்.

தேவையான விவரங்கள்

தேவையான விவரங்கள்

பின்னர் உங்கள் பெயர், பிறந்த தேதி, பான் எண், வீட்டு முகவரி, எந்த நகரத்தில் உள்ளீர்கள், மின்னஞ்சல் முகவரி போன்றவற்றைச் சாட்டிங் மூலம் அனுப்ப வேண்டும்.

சிபில் ஸ்கோர்

சிபில் ஸ்கோர்

இந்த விவரங்களை எல்லாம் அளித்த பிறகு உங்கள் வாட்ஸ்ஆப் சாட்டுக்குச் சிபில் கிரெடிட் ஸ்கோர் அனுப்பப்படும்.

 ஒருமுறை கடவுச்சொல்

ஒருமுறை கடவுச்சொல்

விஷ்ஃபின் நிறுவனம் உங்கள் விவரங்களைச் சரிபார்க்க ஒரு முறை கடவுச்சொல்லை உங்கள் போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும். இதனை எல்லாம் உறுதி செய்த பின்னர்த் தான் உங்களுக்குக் கிரெடிட் ஸ்கோர் அளிக்கப்படும்.

 வாய்ஸ் சேவை

வாய்ஸ் சேவை

விரைவில் வாய்ஸ் சேவை மூலம் இது போன்ற சேவையினை வழங்கும் வசதிகளைத் தயார் செய்து வருவதாகவும் விஷ் ஃபின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Now WhatsApp Gives Free CIBIL Credit Score Chenking Online Service

Now WhatsApp Gives Free CIBIL Credit Score Chenking Online Service
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X