இந்திய கோடீஸ்வரர்களின் கல்வி தகுதி இதுதான்.. கேட்டா ஆடிப்போய்டுவீங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் இருந்து சென்று வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படித்தவர்களை விட இந்திய பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள் தான் இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களாக வளர்ந்துள்ளனர்.

 

அமெரிக்க மற்றும் இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் படித்தவர்களை விட மும்பை மற்றும் டெல்லி பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள் தான் இந்தியாவின் பெரும்பாலான கோடிஸ்வரர்களாக உள்ளனர்.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வர் ஆன ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி மும்பை பலகலைக்கழகத்தில் தான் இரசாயன பொறியியல் படிப்பினை படித்துள்ளார். ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிக்கச் சென்றாலும் அதனை முழுமையாக அவர் தொடர வில்லை என்பது தந்தை உடல் நல குறைவால் அவரது வணிகத்தினைப் பார்க்க துவங்கிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 ஒற்றுமை

ஒற்றுமை

இந்தியாவில் உள்ள அனைத்து கோடீஸ்வரர்களுக்கும் இருக்கும் ஒரு ஒற்றுமை என்னவென்றால் எம்பிஏ பட்டமாகும். பெரும்பாலான இந்திய கோடிஸ்ரர்கள் எம்பிஏ பட்டம் பெற்றவர்களாகவும். இளங்கலை அறிவியல் படிப்பு படித்தவர்களாகவும், பொறியியல் படித்தவர்களாகவும் உள்ளனர்.

மும்பை மற்றும் டெல்லி பல்கலைக்கழகம்
 

மும்பை மற்றும் டெல்லி பல்கலைக்கழகம்

இந்திய கோடீஸ்வர்களில் 18 சதவீதத்தினர் மும்பை பல்கலைக்கழகத்தில் படித்தவர்களாக உள்ளனர். மும்பைக்கு அடுத்தபடியாக டெல்லி பலகலைக்கழகத்தில் படித்தவர்களில் இருந்து தான் இந்தியாவின் 13% கோடிஸ்வரர்களாக உள்ளனர்.

 பிற மாநில பல்கலைக்கழகங்கள்

பிற மாநில பல்கலைக்கழகங்கள்

இந்திய கோடீஸ்வர்களில் 4 சதவீதத்தினர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் படித்தவர்களாகவும், 3 சதவீதத்தினர் சென்னை பலகலைக்கழகத்தில் படித்தவர்களாகவும், 3 சதவீதத்தினர் பெங்களூரு பலகலைக்கழகத்தில் படித்தவர்களாகவும், 3 சதவீதத்தினர் ஹைதராபாத் ஓஸ்மானியா பலகலைக்கழகத்தில் படித்தவர்களாகவும், பிற பலகலைக்கழகத்தில் இருந்து 18 சதவீதத்தினரும் உள்ளனர்.

 ஐஐடி & ஐஐஎம்

ஐஐடி & ஐஐஎம்

இந்திய பல்கலைக்கழகங்கள் ஆன ஐஐடி மற்றும் ஐஐஎம் கல்லூரிகளில் படித்தவர்களிலும் பலர் கோடீஸ்வர்களாக உள்ளனர். இந்திய கோடீஸ்வரர்களில் ஐஐடி மும்பையில் படித்தவர்கள் 6 சதவீதத்தினரும், 5 சதவீதத்தினர் ஐஐஎம் அகமதாபாத்தில் படித்தவர்களாகவும், 4 சதவீததினர் ஐஐஎம் கொல்கத்தாவில் படித்தவர்களாகவும், 4 சதவீதத்தினர் ஐஐஎம் பெங்களூருவில் படித்தவர்களாகவும், 3 சதவீதத்தினர் ஐஐடி டெல்லியில் படித்தவர்களாகவும், 2 சதவீதத்தினர் ஐஐடி மெட்ராசில் படித்தவர்களாகவும் உள்ளனர்.

வெளிநாட்டுப் பலகலைக்கழகங்கள்

வெளிநாட்டுப் பலகலைக்கழகங்கள்

வெளிநாட்டுப் பலகலைக்கழகங்களில் படித்த இந்திய கோடீஸ்வரர்களில் 7 சதவீதத்தினர் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலும், 7 சதவீதத்தினர் இங்கிலாந்து பல்கலைக்கழகங்களிலும் பட்டம் பெற்றுள்ளனர்.

படிப்பு

படிப்பு

இந்திய கோடீஸ்வரர்களில் 23 சதவீதத்தினர் எம்பிஏ, 15 சதவீதத்தினர் இளங்கலை அறிவியல், 14 சதவீதத்தினர் பொறியியல், 13 சதவீதம் பி.காம், 9 சதவீதம் பி.டெக், 4 சதவீதம் சட்டமும், 2 சதவீதம் பொருளாதாரமும், 2 சதவீதம் சிஏ, பிற படிப்புகளில் 18% பட்டமும் பெற்றுள்ளவர்களாக உள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

This is where India’s millionaires went to college

This is where India’s millionaires went to college
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X