வீட்டில் இருந்தே வேலை செய்தாலும், இந்த வேலைக்கு அதிக சம்பளமாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நவீன தொழில் நுட்பம் மற்றும் எளிமையான தொலைத் தொடர்பு வசதிகள் இன்று அனைவருக்கும் மிகவும் எளிதாகக் கிடைக்கின்றது. இவை இரண்டும் வாழ்வை எளிதாக மாற்றியுள்ளன. அதிலும் ஒருவருடைய வேலை மற்றும் அவருடைய வருவாயில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சிறிது காலத்திற்கு முன்னர் வேலை மற்றும் வியாபாரம் என்பது ஒரு அலுவலகம் அல்லது ஒரு கடைக்குச் சென்று செய்யக்கூடிய செயலாக இருந்தது.

 

இன்றைய தொழில்நுட்ப வசதி காரணமாக, வேலை மற்றும் வியாபாரத்தை வலைத்தளங்களில் மேற்கொள்ளும் வசதி ஏற்பட்டிருக்கின்றது. எனினும் எல்லா விதமான வேலைகளையும் முழுநேரமும் வலைத்தளத்தில் செய்ய இயலாது. இங்குப் பட்டியலிடப்பட்டுள்ள வேலைகளைப் பணியாளர்கள் எந்த இடத்திலும் இருந்து தொடர முடியும். பணியாளர்கள் வாடிக்கையாளர்களின் இடங்களுக்குச் சென்று அவர்களுடன் தொடர்ந்து தொலைபேசி மூலம் தொடர்பு வைத்திருந்து இந்த வேலைகளைச் செய்யலாம். எனவே, இந்த வேலைகள் பணியாளகளுக்கு நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கிறது. இந்தக் கட்டுரை FlexJobs.com நிறுவனத்தினால் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்தே வேலை செய்யும் பொழுது அதிகம் சம்பளம் தரும் முதல் ஐந்து வேலைகளை நாங்கள் இங்கே உங்களுக்காகப் பட்டியலிட்டுள்ளோம்.

5. மூத்த வர்த்தக ஆய்வாளர் - $ 90,000 வரை

5. மூத்த வர்த்தக ஆய்வாளர் - $ 90,000 வரை

ஒரு நிறுவனம் எதிர்க்கொள்ளும் வர்த்தகச் சிக்கல்களுக்குத் தொழில்நுட்ப தீர்வுகளை முன்வைத்து, அந்த நிறுவனத்தின் வியாபாரத்தைமேம்படுத்துவதற்குப் பொறுப்பேற்கும் முத்த வர்த்தக ஆய்வாளர் வேலை இந்தப் பட்டியலின் கடைசி இடத்தில் இருக்கின்றது. ஒரு நிறுவனத்தின் விற்பனையை மேம்படுத்துவதற்காக அந்த நிறுவனத்தின் தேவைகளை வரையறுத்து, அதை ஆவணப்படுத்துவதன் மூலம், ஒரு நிறுவனத்தின் மிக முக்கியமான மற்றும் மூத்த பதவிக்கு வணிக ஆய்வாளர்கள் தகுதி பெறுகின்றாற்கள். இந்தக் குழுவினரின் வேலை தொலைத்தொடர்புகளைச் சார்ந்து இயங்குகின்றது. எனவே இவர்கள் உலகின் எங்கு இருந்து வேண்டுமானாலும் ஒரு நிறுவனத்திற்காகப் பணிபுரியலாம்.

4. பேக் எண்ட் வெப் டெவலப்பர் - $ 100,000

4. பேக் எண்ட் வெப் டெவலப்பர் - $ 100,000

பேக் எண்ட் வெப் டெவெலப்பர்கள் பொதுவாக இணையச் சேவைகள் மற்றும் ஏபிஐ (அப்ளிகேஷன் புரோகிராம் இண்டர்பேஸ்) உருவாக்குகின்றார்கள். இவர்கள் உருவாக்கிய பேக் எண்ட் ஆனது இண்டர்நெட் மற்றும் மொபைல் ஆப்களில், பெரண்ட் எண்ட் டெவலப்பர்களால் பயன்படுத்தப்படுகின்றது. பெரண்ட் எண்ட் டெவலப்பர்க்ள் உருவாக்கியவற்றை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதே இவர்களின் முக்கிய வேலை.

3. திட்ட மேலாளர் $ 105,000 வரை
 

3. திட்ட மேலாளர் $ 105,000 வரை

திட்ட மேலாளர்கள் நியமிக்கப்பட்ட திட்டம் அல்லது செயல்களின் செயல்திறன் மற்றும் முன்னேற்றத்திற்கான பொறுப்பாளிகள். ஒரு திட்டத்திற்காகப் பட்ஜெட்டை திட்டமிடுவதில் தொடங்கி அதனுடைய முன்னேற்றத்தை கண்காணிப்பதில் இருந்து, திட்டம் இறுதி கட்டத்தை எட்டுவதை உறுதி செய்வது வரை ஒரு திட்ட மேலாளர்களின் பணி. அதோடு திட்டத்தில் ஈடுபட்டுள்ள குழுவிற்கும், மேல் நிலை நிர்வாகக் குழுவிற்கும் ஒரு இணைப்புப் பாலமாகவும் திட்ட மேலாளர்கள் செயல்படுகின்றனர்.

2.ஆட்டோமேஷன் பொறியாளர் - $ 115,000 வரை

2.ஆட்டோமேஷன் பொறியாளர் - $ 115,000 வரை

ஆட்டோமேஷன் பொறியாளர்கள் ஆட்டோமேஷன் திட்டத்தின் வடிவமைப்பு, நிரல், தூண்டுதல் மற்றும் தானியங்கு இயந்திரங்களின் சோதனை ஆகிய அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும். ஆட்டோமேஷன் திட்டமிட்ட பணிகளை முழுமையாக எளிமையான முறையில் செயல்முறைப்படுத்த உதவுகிறது. இந்தப் பொறியாளர்கள் FCMG இன் கார் அசெம்பிளிங் யூனிட் போன்ற உற்பத்தி ஆலைகளில் சிறப்புப் பணிக்கான ரோபோடிக் இயந்திரங்களைப் பயன்படுத்தும் இடத்தில் பணியமர்த்தப்படுகின்றனர். இந்தத் துறை வல்லுநர்கள் அலுவலகங்களில் வேலை செய்வதற்குப் பதிலாகக் கிளையண்ட் தளங்களைப் பார்வையிட வேண்டும். எனினும் இவர்கள் வீட்டில் இருந்த படியே வடிவமைப்பு போன்ற பணிகளைச் செய்யலாம். அதோடு அந்தப் பணிக்கான நிரல்களையும்/ எழுதலாம்.

1. தரமான பயனர் அனுபவம் ஆய்வாளர்- $ 120,000 வரை

1. தரமான பயனர் அனுபவம் ஆய்வாளர்- $ 120,000 வரை

ஒரு யூஎக்ஸ் ஆய்வாளர், தயாரிப்பு வடிவமைப்பு, மார்க்கெட்டிங், பிராண்ட் மூலோபாயம், போன்ற அனைத்து துறைகளிலும் நெருக்கமாகப் பணியாற்றுவார். மேலும் அவர் தயாரிப்புகளைப் பயனர் அனுபவத்தின் அடிப்படையில் மேம்படுத்த உதவுவார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 High Paying Work From Home Jobs

5 High Paying Work From Home Jobs - Tamil Goodreturns | அதிக ஊதியம் தரும், வீட்டில் இருந்து செய்யக் கூடிய 5 வேலைகள் - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X