விளம்பரத்திற்காக பணத்தை தண்ணியாய் செலவு செய்யும் ஹிந்துஸ்தான் லீவர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய நுகர்வோர் சந்தையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் ஹிந்துஸ்தான் லீவர் பல பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் அதிகளவிலான விற்பனைக்கு முக்கியக் காரணம், திரும்பும் இடம் எல்லாம் லீவர் தனது தயாரிப்புகளை விளம்பரம் செய்வது தான்.

இந்நிறுவனம் விளம்பரம் செய்ய முக்கியத் தளமாக இருப்பது டிவி தான், அமெரிக்க, ஐரோப்பா நாடுகளைப் போல் இல்லாமல் இன்னும் இந்திய மக்கள் பெரும்பாலானோர் டிவியைத் தான் முக்கியப் பொழுதுபோக்குச் சாதனமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதனை அடிப்படையாக வைத்தே டிவியில் அதிகளவிலான விளம்பரம் செய்து லீவர் வர்த்தகத்தைப் பிடிக்கிறது.

இப்படி ஜூன் 23 முதல் 29 வரையிலான காலத்தில் ஹிந்துஸ்தான் லீவர் நாட்டில் எந்தொரு நிறுவனமும் செய்யாத அளவிற்கு அதிக விளம்பர உள்ளீடுகளை (Insertions) செய்துள்ளது.

ஹிந்துஸ்தான் லீவர்

ஹிந்துஸ்தான் லீவர்

இக்காலகட்டத்தில் அதிக விளம்பர உள்ளீடுகளைச் செய்த டாப் 10 நிறுவனங்கள் பட்டியலில் ஹிந்துஸ்தான் லீவர் முதல் இடத்தை இடத்தைப் பிடித்துள்ளது.

ஹிந்துஸ்தான் லீவர் 1,76,086 உள்ளீடுகள்
ரிக்கிட் பென்கிஸர் லிமிடெட் 70,207 உள்ளீடுகள்
ஐடிசி லிமிடெட் 38,948 உள்ளீடுகள்

என முதல் 3 இடத்தைப் பிடித்துள்ளது.

 

பிற நிறுவனங்கள்

பிற நிறுவனங்கள்

டாப் 10 பட்டியலில் மீதமுள்ள 7 நிறுவனங்கள் பற்றிய விபரம்

பிரோக்டர் அண்ட் காம்பல் 28,329 உள்ளீடுகள்
அமேசான் ஆன்லைன் இந்தியா பிரைவேட் லிமிடெட் 27,045 உள்ளீடுகள்
விப்ரோ லிமிடெட் 24,184 உள்ளீடுகள்
ப்ரூப் பாண்ட் லிப்டான் இந்தியா லிமிடெட் 23,085 உள்ளீடுகள்
கோல்கேட் பாம்ஆலீவ் இந்தியா லிமிடெட் 23,019 உள்ளீடுகள்
கேட்பெரி இந்தியா லிமிடெட் 22,555 உள்ளீடுகள்
மாரிகோ லிமிடெட் 20,528 உள்ளீடுகள்

 

டாப் 10 பிராண்டுகள்

டாப் 10 பிராண்டுகள்

அதேபோல் 2018ஆம் ஆண்டின் 26வது வாரம் அதாவது ஜூன் 23 முதல் 29 வரையிலான காலத்தில் அதிகம் விளம்பரம் செய்யப்பட்ட பிராண்டுகள்.

சந்தூர் சான்டல் அன்ட் டர்மரிக்
சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்
லக்ஸ் சோப்
லைப்பாய் சோப்
லைசால்
பாக்
டெட்டால் சோப்
ட்ரிவாகோ
ஹார்பிக் 10X
ரூப் மந்திரா ஆயுர் பேஸ் கிரீம்

 

சேனல்

சேனல்

இதேக்காலக்கட்டத்தில் இந்தியாவில் இருக்கும் பல ஆயிரம் தொலைக்காட்சிகளில் மக்கள் அதிகம் பார்க்கப்பட்ட டிவி சேனலாகச் சன் டிவி முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

சன் டிவியைத் தொடர்ந்து, ஜி அன்மோல், ஜி டிவி, சோன் மேக்ஸ், கலர்ஸ், ஸ்டார் பாரத், சோன் பால், ஸ்டார் பிளஸ், ஸ்டார் மா, ஜி தெலுங்கு ஆகியவை இடம்பெற்றுள்ளது.

இவை அனைத்தும் BARC அமைப்பு அளிக்கப்பட்ட தகவலின் படி தொகுக்கப்பட்டுள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Hindustan Lever ltd investing more on tv commercials

Hindustan Lever ltd investing more on tv commercials
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X