முனிசிபல் பாண்டு என்றால் என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டிலேயே மத்திய பிரதேசம் தான் முதன் முதலில் முனிசிபல் பத்திரங்களை தேசிய பங்குச்சந்தையில் வெளியிட்ட மாநிலம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. கடந்த ஜூன் 29 அன்று ரூ100 கோடி மதிப்பிலான பத்திரங்களை வெளியிட்ட இந்தூர் மாநகராட்சி, அதில் ரூ70 கோடி மதிப்புள்ள பத்திரங்களைக் 'கீரின் சூ' வசதியுடன் வழங்கியுள்ளது.

இந்தப் பத்திரங்கள் அபரிமிதமான வரவேற்பைப் பெற்று 1.26 மடங்கு அதிகச் சந்தாதார்களைப் பெற்றுள்ளது. ஏற்கனவே கடந்த ஒரு ஆண்டில் ஹைதராபாத் மற்றும் பூனே ஊரக அமைப்புகள் பத்திரங்களைப் பங்குச்சந்தையில் வெளியிட்ட நிலையில், இது மூன்றாவது வெளியீடாகும். இந்த முனிசிபல் பத்திரங்கள் தொடர்பான விரிவான தகவல்களை இங்கே காணலாம்.

முனிசிபல் பத்திரங்கள் என்றால் என்ன?

முனிசிபல் பத்திரங்கள் என்றால் என்ன?

முனிஸ்(munis) என்று பரவலாக அறியப்படும் இந்த முனிசிபல் பத்திரங்கள், மாநகராட்சி, அரசு அல்லது அரசு உதவிபெறும் நிறுவனங்கள் முதலீட்டை திரட்ட வெளியிடும் நிலையான வருவாய் திட்டம் அல்லது கடன் பத்திரங்கள் ஆகும்.பொதுவாக இந்தப் பத்திரங்கள் நிலையான வட்டி விகிதத்துடன் வருவதால் சமமாகத் திரும்பப்பெறமுடியும். இவ்வகைப் பத்திரங்களின் இருவகைகள் பின்வருமாறு:

பொதுக் கடமை பத்திரங்கள்

பொதுக் கடமை பத்திரங்கள்

இவ்வகைப் பத்திரங்கள் தண்ணீர், சுகாதாரம் போன்ற குடிமக்களுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்த வெளியிடப்படுபவை.

வருவாய் பத்திரங்கள்

வருவாய் பத்திரங்கள்

சுங்க சாலை அல்லது சுங்க பாலம் போன்ற வசதிகளைக் கட்டமைப்பது உள்ளிட்ட குறிப்பிட்ட நோக்கங்களுக்காக வெளியிடப்படும் பத்திரங்கள் இவை.

யாரெல்லாம் வாங்க முடியும்?

யாரெல்லாம் வாங்க முடியும்?

முனிசிபல் பத்திரங்கள் 1997ஆம் ஆண்டு முதல் சந்தையில் உள்ளன. 1997ஆண்டு நாட்டிலேயே முதல் உள்ளாட்சி அமைப்பாகப் பெங்களூர் மாநகராட்சி முனிசிபல் பத்திரங்களை வெளியிட்டது. தற்போது முனிசிபல் பத்திரங்களுக்கான முதன்மை சந்தையில் சில்லறை முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முடியாது. ஆனாலும் இப்பத்திரங்கள் அனுமதிக்கப்பட்ட அளவில் இரண்டாம்பட்ச சந்தையில் நுழையும் போது அவர்கள் முதலீடு செய்யமுடியும். நிதி நிறுவனங்கள் , பரஸ்பர நிதிகள், எச்.என்.ஐ, வங்கிகள் மற்றும் ஓய்வூதிய நிதிகள் இந்த முதலீடுகளில் பங்கேற்கலாம். இந்தப் பத்திரங்களில் முதலீடு செய்பவர்களின் வட்டியைப் பாதுகாக்க செபி ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 2001 முதல் இந்த முனிசிபல் பத்திரங்களுக்குக் குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.

திரட்டப்பட்ட நிதி

திரட்டப்பட்ட நிதி

தற்போது இந்தூர் மாநகராட்சியால் வெளியிடப்பட்டுள்ள பத்திரங்கள் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் புதிய தலைமுறை நகரக் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு ஆகும். ஏஏ(எஸ்.ஓ) தரத்தில் அல்லது உயர்தரத்தில் இரு புள்ளிகள் குறைவாக இருக்கும் இந்தூர் மாநகராட்சி, பத்திரங்களை வெளியிட்டதன் மூலம் ரூ140 கோடி திரட்டியுள்ளது. இப்பத்திரங்கள் 10 ஆண்டுக்கால முதிர்ச்சி காலத்துடன் 9.25% வட்டி விகிதமும் அளிக்கின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What it is Municipal bond?

What it is Municipal bond?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X