இவே பில்லில் தொடரும் தொழில்நுட்ப கோளாறு.. லாரி உரிமையாளருக்கு 1.3 கோடி அபராதம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இவே பில் எனும் மின்னணு ரசீது செலுத்த தவறிய விவகாரத்தில், சரக்கு போக்குவரத்து நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட 1 கோடியே 32 லட்சம் ரூபாய் அபராதத் தொகையை மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

 

தொழில்நுட்பக் கோளாறுகளால் ஏற்பட்ட தவறுகளுக்கு அபராதம் விதித்திருப்பதால் 20 ஆம் தேதி நடைபெறும் லாரிகள் வேலை நிறுத்தத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

இவே பில் நடைமுறை

இவே பில் நடைமுறை

மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் சரிக்குப்போக்குவரத்துக்கு ஈ.வே.பில் என்ற மின்னணு ரசீது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்திலேயே நடைமுறைக்கு வர வேண்டிய இந்தத் திட்டம், தொழில் நுட்பக் கோளாறுகளால் ஏப்ரல் 1 ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது. 50 ஆயிரம் அதற்கு மேல் எடுத்துச் செல்லும் சரக்குகளுக்கும், 50 கிலோ மீட்டருக்கு அப்பால் ஏற்றிச் செல்லும் சரக்குகளுக்கும் மின்னணு ரசீது பெறுவது இந்தச் சட்டத்தின் மூலம் அவசியமானது.

அபராதம் விதிப்பு

அபராதம் விதிப்பு

கட்டி கிண்டேட்டு எக்ஸ்பிரஸ் பிரைவேட் லிமிடெட் என்ற ஒரு சரக்குப் போக்குவரத்து நிறுவனம், இவே பில் செலுத்த தவறி விட்டதாக, மாநில சரக்கு சேவைவாரித் திட்டத்தின் கீழ் 1 கோடியே 32 லட்சம் லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்துத் தொடர்ந்த வழக்கில் மத்திய பிரதேச மாநிலம் உயர்நீதிமன்றம் தண்டத்தை உறுதி செய்துள்ளது. ஜிஎஸ்டி தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் குறைபாடுகளை முன்னரே கவனத்துக்குக் கொண்டு செல்லாதது, உரிமையாளரின் திறமையின்மையைக் காட்டுவதாகத் தீர்ப்பில் தெரிவித்துள்ள நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

வேலைநிறுத்தத்தில் தாக்கம்
 

வேலைநிறுத்தத்தில் தாக்கம்

பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்து லாரி உரிமையாளர்கள் 20 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை ஈடுபடவுள்ளனர். இந்த நிலையில் சரக்கு போக்குவரத்து நிறுவனத்துக்கு 1 கோடியே 32 லட்சம் ரூபாய் தண்டம் விதித்தது வேலை நிறுத்தத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதுதவிர 21 ஆம் தேதி ஜிஎஸ்டி கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் இந்தப் பிரச்சினை எதிரொலிக்கும் என்று தெரிகிறது.

அசாதாரணச் சூழல்

அசாதாரணச் சூழல்

சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் நிறையத் தொழில்நுட்பத் தடுமாற்றங்களைச் சந்தித்துள்ளது. இதனையொட்டி நடைபெறுகின்ற தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தங்களால் போக்குவரத்து நெருக்கடிகள் ஏற்படுகின்றன. தற்போது ஒரு அசாதாரணச் சூழல் நிலவுவதாக வர்த்தக ஆலோசகர் ஜிகார் தோஷி கவலை தெரிவிக்கிறார்.தொழில்துறையைப் பொறுத்தவரை பல மாநிலங்களில் மின்னணு ரசீது வுழக்கமானது தான் என்றும், இதில் தவறு நேரும்போது தண்டனைகள் கடுமையாக்கப்படுவது இணக்கத்தைக் குலைப்பதாகவும் கூறுகிறார்.

குழப்பங்கள்- சிக்கல்கள்

குழப்பங்கள்- சிக்கல்கள்

இவே பில்லில் சிக்கல்களும் குழப்பங்களும் இருப்பதாகக் கூறியுள்ள வரி செலுத்துவோர், அதில் உள்ள நடைமுறை சிக்கல்களைச் சரிசெய்து செம்மைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். உயர்நீதிமன்றம் தண்டத்தை உறுதி செய்திருப்பது அரசின் முடிவை ஆதரிப்பது போன்று தோன்றுவதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.

 தீர்வு இல்லை பிரச்சினை

தீர்வு இல்லை பிரச்சினை

வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட இவே பில் முறை, தொழில்நுட்பக் காரணங்களால் மிகப் பெரிய பிரச்சினையைத் தோற்றுவிக்கும் என்று அரசேகூட நினைத்திருக்க வாய்ப்பில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rs 1.3 crore fine for eWay bill error triggers transport strike

Rs 1.3 crore fine for eWay bill error triggers transport strike
Story first published: Thursday, July 19, 2018, 11:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X