நிற்க நேரமில்லாமல் பறந்த மோடியின் விமானம்..1484 கோடி ரூபாய் செலவு.. அதிர வைத்த பிரதமர்!

By Sornamani Ramamoorthy
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2014-ம் ஆண்டு ஜூன் முதல் பிரதமர் நரேந்திர மோடி பாரதப் பிரதமாகப் பதவியேற்ற பிறகு 84 நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. ஹாட் லைன் வசதிகளுடன் கூடிய இந்தப் பயணத்துக்கு 1484 கோடி ரூபாய்ச் செலவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

பிரதமரின் பயணங்களும், பகடிகளும்

பிரதமரின் பயணங்களும், பகடிகளும்

பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து ஆண்டுக்கணக்கில் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது அவரது சுற்றுப்பயணம் தொடர்பாகச் சமூக வலைத்தளங்களில் நக்கலும் நையாண்டியுமான கேலிச் சித்திரங்கள் உலவி கொண்டிருக்கின்றன.

பொதுக்கூட்ட மேடைகளில் மோடியின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பான தலைவர்களின் பகடிகள் கைதட்டல்களை அள்ளுகின்றன. ஆகாய மார்க்கத்தில் குறுக்கு நெடுக்குமாக அவர் பயணப்படாத வழிகளே கிடையாது என்று குத்திக் காட்டுகிறார்கள். இந்நிலையில் மாநிலங்களவையில் மோடியின் வெளிநாட்டுப் பயணம் குறித்த கேள்விக்கு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே. சிங் எழுத்துப் பூர்வமாகப் பதில் அளித்துள்ளார்.

 

 ஹாட் லைன் வசதி

ஹாட் லைன் வசதி

2014 ஜூன் 15 ஆம் தேதியிலிருந்து நடப்பு ஆண்டு ஜூன் 10 ஆம் தேதி வரை பிரதமர் பயணம் செய்த விமானத்தின் பராமரிப்புக்காக 1088 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. விமானம் பயன்படுத்தப்பட்டதற்காக 387 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. விமானத்தில் ஹாட்லைன் பயன்பாட்டு க்காக 9 கோடி ரூபாயை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு மே மாதத்தில் பிரதமராகப் பதவியேற்ற மோடி, 42 வெளிநாட்டுப் பயணங்களில் 84 நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார். இதில் ஹாட் லைன் பயன்பாட்டுக்கு ஆன செலவும், விமானப் பயணப் பயன்பாட்டுக்கான செலவும் சேர்க்கப்படவில்லை.

 

பயணங்களின் எண்ணிக்கை
 

பயணங்களின் எண்ணிக்கை

2015- 2016 ஆம் ஆண்டுகளில் 24 நாடுகளுக்கும், 2016- 2017 ஆம் ஆண்டில் 18 நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் 19 நாடுகளுக்குப் பிரதமர் சென்று திரும்பியுள்ளார். 2014 ஆம் ஆண்டு முதன்முதலில் பூடான் சென்றது முதல் 13 நாடுகளுக்கு மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். நடப்பு ஆண்டில் 10 நாடுகளுக்குச் சென்ற பிரதமர், கடைசியாகச் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டார்.

விமானங்களுக்குச் செலவு

விமானங்களுக்குச் செலவு

2014 மற்றும் 15 ஆம் ஆண்டுகளில் மோடியின் வெளிநாட்டுப்பயணத்துக்கு 93 கோடி ரூபாய்ச் செலவிடப்பட்டது. 2015 - 2016 ஆம் ஆண்டுகளில் 117 கோடி ரூபாயும், 2016- 17 ஆம் ஆண்டுகளில் 76 கோடியும் விமானப் பயணத்துக்குச் செலவாகியுள்ளது. 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டில் மோடியின் வெளி நாட்டுச் சுற்றுப்பயணத்துக்காக 99 கோடி ரூபாயை மத்திய அரசு செலவழித்துள்ளது.

 இதுவும் ஒரு ராஜதந்திரம்

இதுவும் ஒரு ராஜதந்திரம்

பிரதமர் மோடியின் பயணம் ராஜதந்திர ரீதியானது என்று தெரிவித்துள்ள அமைச்சர் வி.கே. சிங், இதில் ஏராளமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாகக் கூறியுள்ளார். அணுக்கமான உறவுகளை மேற்கொள்ள நட்பு நாடுகளுக்குப் பிரதமர் பயணம் மேற்கொள்வது சாதாரணமானதுதான் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

PM Narendra Modi visited 84 countries spent Rs 1,484 crore since 2014 On Foreign Travel

PM Narendra Modi visited 84 countries spent Rs 1,484 crore since 2014 On Foreign Travel
Story first published: Friday, July 20, 2018, 12:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X