முடக்கப்பட்ட முதலீடுகள், தடுக்கப்பட்ட திட்டங்கள் - கனவாகிப் போன மேக் இன் இந்தியா..!

By Sornamani Ramamoorthy
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மந்தமான முதலீடுகளாலும், முடக்கப்பட்ட திட்டங்களாலும் மோடியின் கனவுத் திட்டமான மேக் இன் இந்தியா பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என, உலக வங்கியின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. தரவுகளை வெளியிட்யடள்ள ரிசர்வ் வங்கியின் அறிக்கையில்தான் இது தெரிவிக்கப்பட்டுள்ளது

நொய்டாவில் அமைக்கப்பட்டிருந்த சாம்சங் எலக்ட்ரானிக் நிறுவனத்தின் செல்போன் தயாரிப்புத் தொழிற்சாலையின், திறப்பு விழா கடந்த வாரம் நடைபெற்றது. இதில் தென்கொரிய அதிபர் மூன் ஜோ இன்னும், பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டனர். உலகத்தின் மிகப்பெரிய தொழிற்சாலையின் திறப்பு விழாவில் பேசிய பிரதமர், மேக் இன் இந்தியா திட்டத்தில் வசதிகளை உருவாக்கிக் கொடுப்பதன் மூலம் உற்பத்தியை ஊக்குவிக்க முடியும் என்றார். இந்திய பொருளாதாரத்தில் 25 விழுக்காட்டை மேன் இந்தியா திட்டத்தில் பெற முடியும் என்ற அவர், 2020 ஆம் ஆண்டுக்குள் மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்க இயலும் என்று தெரிவித்தார். இந்த வெற்றிக்குச் சாம்சங் ஒரு உதாரணம் என்றும் பிரதமர் கூறினார்.

 முதலீடு ஊக்குவிப்பு இல்லை

முதலீடு ஊக்குவிப்பு இல்லை

ஆனால் உலக வங்கி வழங்கியுள்ள தரவுகளும் மோடியின் கூற்றும் முன்னுக்குப் பின் முரணாக உள்ளது.2014 ஆம் ஆண்டு மோடி பதவியேற்ற நாளில் இருந்து உற்பத்தித் துறையில் குறிப்பிடத்தக்க ஊக்குவிப்புகள் நடைபெறவில்லை என்றும், முதலீடுகள் அதிகமாகப் பெறப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

கைவிடப்பட்ட திட்டங்கள்

கைவிடப்பட்ட திட்டங்கள்

உள்நாட்டு உற்பத்தித்துறையில் 1995 ஆம் ஆண்டும் 18 புள்ளி 6 சதவீதம் வளர்ச்சியடைந்த நிலையில், தற்போது 15 சதவீதமாகக் குறைந்திருப்பதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்தியாவில் புதிய முதலீடுகள் கைவிடப்பட்டதாகவும், பல திட்டங்கள் முடங்கியதாகவும் அந்தத் தரவுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எட்டாத குறிக்கோள்

எட்டாத குறிக்கோள்

மேக் இன் இந்தியா திட்டத்தின் முக்கியமான குறிக்கோளை மோடி அரசு இதுவரை எட்டவில்லை என்று தெரிவித்துள்ள கார்லெட்டான் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் விவேக் தகேஜா, கடுமையான சவாலை எதிர்கொள்ள முதலீட்டுக்கான சூழலை எளிமைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். உற்பத்தித்துறையிலும், சேவை தொடர்பான பொருளாதாரத்திலும் குறிப்பிட்டத் தக்க மாற்றங்களைச் செய்யவில்லை என்று கூறுகிறார்கள்

 தடுக்கப்பட்ட முதலீடுகள்

தடுக்கப்பட்ட முதலீடுகள்

2014 இல் தொடங்கப்பட்ட மேக் இன் இந்தியா திட்டம் காலப்போக்கில் தளர்ச்சியடைந்து விட்டது. பாதுகாப்பு உள்படப் பல்வேறு துறைகளில் முதலீடுகள் தடுக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2015 ஆம் ஆண்டில் மார்ச்சில் தொடங்கி நடப்பு நிதி ஆண்டு வரை புதிய முதலீட்டுக்கான 18 லட்சம் கோடி ரூபாய் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக இந்திய பொருளாதாரத்துக்கான கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

முடக்கப்பட்ட திட்டங்கள்

முடக்கப்பட்ட திட்டங்கள்

இந்தக் காலகட்டத்தில் தான் முடக்கப்பட்ட திட்டங்களின் மதிப்பு 5 லட்சம் கோடியிலிருந்து சற்றேறக்குறைய 8 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக உலக வங்கியின் தரவுகளை வெளியிட்டுள்ள ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மோடி ஆட்சிக்காலத்தில் பெருநிறுவனங்களின் மூலதனச் செலவுகளும் சரிவைச் சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவராத மேக் இன் இந்தியா

கவராத மேக் இன் இந்தியா

2012 வரை இந்திய நிறுவனங்களின் அதிக அளவில் முதலீடுகளைக் கொட்டியதாகக் கூறிய பொருளாதார அறிஞர்கள், மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் இந்த முதலீடுகளைக் கவரத் தவறி விட்டதாகத் தெரிவித்துள்ளனர். மேன் இன் இந்தியா திட்டத்தில் பெற முடியாத முதலீடுகளை அந்நிய நேரடி முதலீட்டுக்கொள்கையால் பெற முடிந்தாக அவர் சுட்டிக்காட்டுவது, அமேசானின் முதலீட்டை விரல் நீட்டுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Slowing investments, stalled projects: A lacklustre picture of 'Make in India' project

Slowing investments, stalled projects: A lacklustre picture of 'Make in India' project
Story first published: Friday, July 20, 2018, 10:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X