ஜிஎஸ்டி-ல் புதிய மாற்றம்.. வரும் நாட்களில் எந்தப் பொருள் விலை எல்லாம் குறையும் மற்றும் பல..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சரக்கு மற்றும் சேவை வரியில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்காக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சென்ற வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சானிட்டரி நாப்கின் உள்ளிட்ட சில முக்கியப் பொருட்களின் வரி விகிதங்கள் எல்லாம் குறைக்கப்பட்டுள்ள நிலையில் வரும் நாட்களில் எந்தப் பொருட்கள் விலை எல்லாம் குறையும் மற்றும் வரித் தாக்கலில் செய்துள்ள முக்கியத் திருத்தங்கள் பற்றி எல்லாம் இங்குச் சுருக்கமாகப் பார்க்கலாம்.

 வரி விலக்குப் பெற்றுள்ள பொருட்கள்

வரி விலக்குப் பெற்றுள்ள பொருட்கள்

28வது ஜிஎஸ்டி கூட்டத்தில் பின் வரும் பொருட்களுக்கு எல்லாம் ஜிஎஸ்டி-ல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

1) சானிட்டரி நாப்கின்
2) கல், பளிங்கு அல்லது மரத்தால் செய்யப்பட்ட சிலைகள்
3) விலைமதிப்பற்ற கற்கள் அல்லது உலோகங்கள் பயன்படுத்தப்படாத ராக்கி
4) துடைப்பத்திற்குப் பயன்படுத்தும் மூலப்பொருள்
5) ரிசர்வ் வங்கி அல்லது அரசு சார்பில் வெளியிடப்படும் நினைவு நாணயங்கள்
6) சால் இலைகள்
7) செறிவூட்டப்பட்ட பால்

 

12-ல் இருந்து 5 சதவீதமாக வரி குறைக்கப்பட்ட பொருட்கள்

12-ல் இருந்து 5 சதவீதமாக வரி குறைக்கப்பட்ட பொருட்கள்

1) கைத்தறி
2) உரத்திற்குப் பயன்படுத்தப்படும் பாஸ்பரிக் அமிலம்

28-ல் இருந்து 18% ஆகக் குறைக்கப்பட்ட பொருட்கள் பட்டியல்
 

28-ல் இருந்து 18% ஆகக் குறைக்கப்பட்ட பொருட்கள் பட்டியல்

1) லித்தியம்-அயன் பேட்டரிகள்
2) வேக்கம் கிளீனர்கள்
3) உணவு அரைப்பான்களுடன், மிக்சர்கள்
4) ஷாவர்ஸ், முடி கிளிப்பர்ஸ்
5) சேமிப்புத் தண்ணீர் ஹீட்டர்கள்
6) எலக்ட்ரிக் ஸ்மூத்திங் இரும்புகள்
7) நீர் குளிர்விப்பான்
8) ஐஸ் கிரீம் உறைவிப்பான்
9) குளிர்சாதனப் பெட்டிகள்
10) கை உலர்த்துதல்
11) ஒப்பனை
12) வாசனை திரவியங்கள்
13) நறுமணமும்
14) பெயிண்ட்
15) வார்னிஷ்

பிற முக்கிய மாற்றங்கள்

பிற முக்கிய மாற்றங்கள்

1) பெட்ரோல் மற்றும் டீசலுக்குப் பயன்படுத்தப்படும் எத்தானால் மீதான ஜிஎஸ்டி 18-ல் இருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டது.
2) இறக்குமதி செய்யப்படும் யூரியா மீதான ஜிஎஸ்டி 5% ஆகக் குறைப்பு
3) இ-புக் மீதான ஜிஎஸ்டி 19-ல் இருந்து 5 சதவீதமாகக் குறைப்பு
4) 28 சிமி தொலைக்காட்சிகள் மீதான ஜிஎஸ்டி 28-ல் இருந்து 18% ஆகக் குறைப்பு

 காலக்கெடு நீட்டிப்பு

காலக்கெடு நீட்டிப்பு

ஜிஎஸ்டி கீழ் பதிவு செய்யாமல் தற்போது வரை வர்த்தகம் செய்து வருபவர்கள் அதனைப் பதிவு செய்ய 2018 ஆகஸ்ட் 31 வரை காலக்கெடு நீட்டிப்பு.

அடுத்தக் கூட்டம்

அடுத்தக் கூட்டம்

ஜிஎஸ்டி கவுன்சிலின் 29 வது கூட்டம் ஆகஸ்ட் 4-ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

50 Products Tax Reduction In GST. Coming Days What Will Decrease And Many More

50 Products Tax Reduction In GST. Coming Days What Will Decrease And Many More
Story first published: Monday, July 23, 2018, 13:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X