சர்ச்சைக்குரிய விளம்பரத்தினை நீக்க முடிவு செய்த கல்யாண் ஜூவல்லர்ஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கல்யாண் ஜூவல்லார்ஸ் நிறுவனம் சென்ற வாரம் வங்கிகளைக் குற்றம் சொல்வது போன்று ஒரு விளம்பரத்தினை வெளியிட்டு இருந்த, அதற்கு அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் "இந்த விளம்பரம் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல" என்று வாசகமும் சேர்க்கப்பட்டது.

 

தற்போது அந்த விளம்பரம் இனி ஒளிபரப்பப் படாது என்றும் கல்யாண் ஜூவல்லரஸ் நிறுவனத்தினை நிர்வாக இயக்குநரான ரமேஷ் கல்யாணராமன் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

விளம்பரம்

ஓய்வு பெற்ற அமிதாப் அவரது மகளுடன் வங்கிக்கு வருகிறர். முதலில் ஒரு கவுண்ட்டருக்குச் செல்லும் போது பென்ஷான் சார்ந்தவர்கள் அடுத்தக் கவுண்ட்டருக்குச் செல்லுங்கள் என்று மரியாதை இல்லாமல் கூற அடுத்தக் கவுண்ட்டரில் வங்கி மேலாளரைப் பார்க்குமாறு கூறுகிறார்கள். பின்னர் வங்கி மேலாளர்களைப் பார்க்கும் போது அவர் என்ன வேண்டும் எனக் கேட்க பென்ஷன் புத்தகத்தினைப் பெற்று பென்ஷன் தான் வந்து விட்டதே, அப்பறம் என்ன கேட்க, பென்ஷன் வந்து விட்டது ஆனால் ஒரு மாதத்தில் இரண்டு முறை வந்துள்ளது எனக் கூறுகிறார்.

உடனே அதனைப் பார்த்த வங்கி மேலாளர் அப்படினா பார்ட்டி பண்ணுங்கள், இது பெரிய தலைவலி பிடித்த வேலை என முடியாது இது எனது கொள்கை மற்றும் நம்பகத்தன்மைக்கு எதிரானதது என்று கோவமாக அமிதாப் கூறிய உடன் அந்த வங்கி அதிகாரி தனது பொறுப்புகளை உணர்ந்து அது சார்ந்த நடவடிக்கை எடுப்பது போல் விளம்பரம் சித்தரிக்கப்பட்டு இருந்தது.

எதிர்ப்பு

எதிர்ப்பு

தனது சொந்த லாபத்திற்காகக் கல்யாண் ஜூவல்லர்ஸ் மற்றும் அமிதாப் உள்ளிட்டவர்கள் வங்கி அதிகாரிகளைக் கேவலப்படுத்தி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வங்கி சங்கங்கள் கொந்தளித்தன.

திரும்பப் பெற்றது
 

திரும்பப் பெற்றது

தற்போது இந்த விளம்பரம் பிறர் மனதை புண்படுத்திய காரணத்தினால் திரும்பப் பெறுவதாகக் கல்யாண் ஜூவல்லர்ஸின் நிர்வாக இயக்குநரான ரமேஷ் கல்யாண் ராமம் தெரிவித்துள்ளார்.

வங்கிகளின் முக்கியத்துவம்

வங்கிகளின் முக்கியத்துவம்

கோடிக்கணக்கான இந்திய மக்களுடன் சேர்ந்து இந்திய வங்கி சேவைகளின் முக்கியத்துவத்தினை நாங்களும் அறிவோம். இனி இது போன்று நடக்காது என்றும் கல்யாண் ஜூவல்லர்ஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வீடியோ

விளம்பரம்: இந்த விளம்பரத்தின் தமிழ் பதிப்பில் பிரபு நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Kalyan Jewellers withdraws controversial ad starring Amitabh Bachchan

Kalyan Jewellers withdraws controversial ad starring Amitabh Bachchan
Story first published: Monday, July 23, 2018, 14:46 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X