Subscribe to GoodReturns Tamil
For Daily Alerts
இந்தியாவின் 4-ம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான ஹெச்சிஎல் நிறுவன தலைவரான ஷிவ் நாடார் திருப்பதி தேவஸ்தானத்திற்கு 1 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளார்.
திருப்பதி கோயிலுக்குத் திங்கட்கிழமை வருகை புரிந்திருந்த ஷிவ் நாட்டார் சுவாமி தரிசனம் பெற்ற பிறகு 1,00,00,001 ரூபாய் மதிப்பிலான டிபாண்டு டிராப்ட்டினை அளித்ததாகத் திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் பொது உறவு அதிகாரி டி. ரவி தெரிவித்துள்ளார்.
தான் அளித்த இந்த 1 கோடி ரூபாய் நிதியைத் தேவஸ்தானத்தின் மருத்துவச் சேவைகளுக்காகப் பயன்படுத்துமாறு ஷிவ் நாடார் கேட்டுக்கொண்டதாகவும் ரவி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary