வருடத்துக்கு 2.5 கோடி ரூபாய் சம்பாதிக்கும் எம்பிஏ பட்டதாரி..? என்ன வியாபாரம் தெரியுமா..?

By Sornamani Ramamoorthy
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அறிமுகமான அவளும், அவரும், அவனும் ஆச்சரியங்களை தோற்றுவித்து கொண்டே இருக்கிறார்கள். 6 மாதத்துக்கு ஒருமுறை உள்ளாடைகளை புதிதாக மாற்றுகிறார்களோ இல்லையோ, மொபைல் போன்களை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் ஏற்கனவே வைத்திருந்த செல்போனுக்கு என்ன ஆனது என்று கற்பனை செய்து கொண்டே அவரிடம் கேட்டுப் பாருங்கள். உங்கள் அனுமானம் நிரம்பச் சரியாக இருக்கும். ஒன்று செயலற்றுப் போயிருக்கும். இல்லையென்றால் குழந்தைகளின் கைகளில் குப்பைகளைப் போல சிக்கியிருக்கும்....

 

வகையற்றுப் போன அந்த பொருட்களில் இருந்து புறப்பட்ட ஒரு பொறி தான், அந்த இளைஞனை கோடீஸ்வரனாக மாற்றியிருக்கிறது. பெயர் அக்ஷய் ஜெயின், வயது 29. பரீதாபாத்தில் வசித்து வந்த லட்சக்கணக்கான மக்களில், அவன் மட்டும்தான் மின்னணு கழிவுகளால் ஆன குப்பைகளை மூலதனக் கண்களோடு பார்த்தான். சுற்றுச்சூழலுக்கு மாசு உண்டாக்கும் அதனை சுத்திகரிக்க முடிவு செய்தான். எல்லோருக்கும் மூளை மூலையிலேயே இருந்தபோது, அவன் மட்டும்தான் மூளையை முதலீடாக மாற்றினார். இன்று மாதத்துக்கு பலகோடி ரூபாய் சம்பாதிக்கும் தொழிலதிபராக வளர்ந்து கொண்டிருக்கிறான்.

உதயமானது ஆலை

உதயமானது ஆலை

2015 ஆம் ஆண்டில் நமோ ஈவேஸ்ட் மேனேஜ்மெண்ட் என்ற ஆலையைத் தொடங்கி, மின்கழிவுகளை சுத்திகரிக்கத் தொடங்குகிறான். அடுத்த 3 மாதத்தில் 5.5 கோடி ரூபாய் சம்பாதிக்கிறான். அடுத்த 3 ஆண்டுகளில் 25 கோடி ரூபாய் என இலக்கு நிர்ணயிக்கிறான். அதற்கு ஏதுவாக 2017-18 ஆம் நிதி ஆண்டுகளில் 8 கோடி ரூபாயை சம்பாதித்து விட்டான்.

சுத்திகரிக்க திட்டம்

சுத்திகரிக்க திட்டம்

பழைய மின்னணு பொருட்கள் எக்சேஞ்சாகவோ, வேர்க்கடலைகாரனிடமோ மாற்றுவது வழக்கம். இல்லையென்றால் தூக்கி எறிவது பழக்கமாக இருக்கிறது. இப்படி சுற்றுச்சூழலுக்கு ஆபத்தான முறையில் தூக்கி எறியப்படும் கழிவுகளை சுத்திகரிப்பதை கடமையாக ஏற்றுக்கொண்டதாக கூறுகிறார் அக்ஷய் .

 மின்னணு கழிவுகள்
 

மின்னணு கழிவுகள்

மின்பொருட்களில் செயல்படாதவை அகற்றப்படுகிறது. லேப்டாப், கம்ப்யூட்டர் போன்ற பொருட்களை பழுதுபார்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஒயர்கள் மற்றும் மெட்டல் போன்றவை சுத்திகரிக்கப்படுகிறது. இதில் தேவையயில்லாத கழிவுகள் அரசு அங்கீகரித்த குப்பைக் கிடங்குகளில் கொட்டப்படுகிறது. ஒரு நாளைக்கு 15 டன் மின்கழிவுகள் வீதம் ஆண்டுக்கு 5500 டன் கழிவுகள் சுத்திகரிக்கலாம் என்று அக்ஷய் தெளிவுபடுத்தினார்.

கல்வித் தகுதி

கல்வித் தகுதி

டெல்லியில் பாரதீய வித்யா பவனில் பள்ளிப்படிப்பையும், கோஸ்டல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மேனேஜ்மெண்டில் பி டெக் பட்டயப் படிப்பை நிறைவு செய்தார் அக்சய். லண்டன் கிரீன்விச் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டத்தை முடித்து 2012 ஆம் ஆண்டு தாயகம் திரும்பினார்.

மதிப்பெண் உதவாது

மதிப்பெண் உதவாது

நான் சாதாரணமான மாணவன் தான். படிப்பாளியும் இல்லை முட்டாளும் இல்லை. பேட்மிண்டன், டேபிள் டென்னிஸில் ஆர்வம் இருந்தது. சும்மா இருக்கும்போது புத்தகம் படிப்பேன். மற்ற நேரங்களில் மனிதர்களின் அனுபவங்களில் இருந்து வாழ்க்கையை கற்றுக் கொண்டேன். மதிப்பெண்ணை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. ஏனென்றால் வெற்றிகரமான மனிதர்களுக்கு பின்னால் ஆர்வம்தான் இருந்திருக்கிறது என்றார் அக் ஷய்

மரபணுவில் வணிக உத்தி

மரபணுவில் வணிக உத்தி

அக்ஷயின் வணிக உத்தி அவரது மரபணுவில் இருந்து வந்தது. அவருடைய தாத்தா 1975 இல் தொடங்கிய கம்பெனி தற்போது 600 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. இதில்தான் அவரது அப்பா நரேஷ் ஜெயினும் பணியாற்றுகிறார்.

கடனில் தொடங்கிய ஆலை

கடனில் தொடங்கிய ஆலை

லண்டனில் படிப்பை முடித்து பரீதாபாத் திரும்பியதும் மாருதியில் 38000 ரூபாய் சம்பளத்தில் பணியில் இணைகிறார். லண்டனில் மின்கழிவு மறு சுழற்சி முறையில் பின்பற்றிய நேர்த்தியை பார்த்த அக்ஷய், அப்பாவிடம் 1 கோடி ரூபாய் கடனை வாங்குகிறார். பரீதாபாத்தில் மறுசுழற்சி தொழிற்சாலையைத் தொடங்குகிறார்.

வணிக மந்திரம்

வணிக மந்திரம்

முதலீட்டை விட 15 சதவீதத்துக்கு அதிகமாக வருவாய் ஈட்ட வேண்டும் என்ற அப்பாவின் வணிக மந்திரம் கைகொடுப்பதாக கூறும் அக் ஷய், 30 விழுக்காடு கடனை வட்டியுடன் அப்பாவுக்கு செலுத்தி விட்டதாக தெரிவிக்கிறார்.

மின்னணு கழிவு சேகரிப்பு

மின்னணு கழிவு சேகரிப்பு

மின்கழிவுகளை வீடுகளில் மட்டும் சேகரிக்காமல் பல்வேறு இடங்களில் அதற்கான தொட்டிகளை வைத்து சேகரித்து வருகிறார்கள். இப்போது 23 மாநிலங்கள் மற்றும் 7 முகமைகள் மூலமாக மின்கழிவுகளை பெறப்பட்டு தொழிற்சாலைக்கு அனுப்பப்படுகிறது. சாம்சங், கோத்ரெஜ், ஏசர் வோல்டாஸ் மற்றும் புளூ ஸ்டார் ஆகிய நிறுவனங்களிலும் சேதமடைந்த மின்பொருட்களை மொத்தமாக வாங்கி வருவதாக அக்சய் கூறுகிறார்.

 இலக்கு நிர்ணயம்

இலக்கு நிர்ணயம்

தொடங்கிய ஆறு மாதத்தில் 30 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டிய நமோ ஈவேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் 2017-18 நிதி ஆண்டுகளில் 8 கோடி ரூபாய் வருமானம் பார்த்துள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் 25 கோடி ரூபாய் என்பது அக்சயின் இலக்கு.

 வெற்றி நிச்சயம்

வெற்றி நிச்சயம்

50 தொழிலாளர்களுடன் மின்கழிவு சுத்திகரிப்பு நடந்து கொண்டிருக்கிறது. வெற்றி இலக்கை அடைய அக்சய் ஓடிக்கொண்டே இருக்கிறார். அயராத உழைப்பு, ஒழுக்கம், அர்ப்பணிப்பு உணர்வை விட வெற்றிக்கு அத்தாட்சியாக வேறு என்ன இருக்க முடியும். வாழ்த்துக்கள் அக் சய்....!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

MBA Graduate’s EWaste Startup Notches up a Turnover of Rs 8 Crore in Only Its Third Year

MBA Graduate’s EWaste Startup Notches up a Turnover of Rs 8 Crore in Only Its Third Year
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X