வரியை குறைக்க மத்திய அரசு மறுப்பு.. பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறைய வாய்ப்பில்லை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வரிவிதிப்புகளைக் குறைப்பதற்கு அரசு முன் வராததால் பெட்ரோல் மற்றும் டீசலின் வரலாறு காணாத விலை உயர்வு தற்போது முடிவுக்கு வர சாத்தியமில்லாத சூழல் நிலவுகிறது.

 

டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால், இறக்குமதி பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் மீதான இறக்குமதியைக் குறைக்கும் திட்டம் அரசிடம் இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

புதிய உச்சம்

புதிய உச்சம்

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 71.54 ஆக சரிந்ததால், பெட்ரோல், டீசல் விலை நேற்று புதிய உச்சத்தைத் தொட்டது. டெல்லியில் பெட்ரோல் விலை 79.31 காசுகளாகவும், டீசல் விலை 71.34 காசுகளாகவும் அதிகரித்தது. எரிபொருள் சில்லறை விற்பனை மீது மத்திய மாற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரிகளும் சுமையை அதிகரித்துள்ளன.

அதிகரிப்பு

அதிகரிப்பு

எண்ணெய் நிறுவனங்கள் நேற்று பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 16 பைசாவும், டீசலில் 19 பைசாவும் உயத்தின. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதாலும், கச்சா எண்ணெய் விலை உயர்வதாலும் ஆகஸ்டு மத்தியில் நடைபெற்ற விலை உயர்வை இது நினைவுபடுத்தியது.

வரியை குறைக்க யோசனை
 

வரியை குறைக்க யோசனை

ஆகஸ்ட் 16 ம் தேதி பெட்ரோல் விலை 2.17 ஆகவும், டீசல் விலை 2.62 ஆகவும் அதிகரிக்கப்பட்டது. பெட்ரோல், உயர்ந்துவரும் பெட்ரோல், டீசல் விலையை தற்போதைக்கு தவிர்க்க முடியாது என்று கூறிய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், வரிகளை குறைத்தால் கணிசமாகக் குறைக்கலாம் என யோசனை தெரிவித்துள்ளார்.

கவனம் தேவை

கவனம் தேவை

நடப்புக் கணக்கில் ஏற்கனவே அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளதால், நிதி பற்றாக்குறையை பாதிக்காதவாறு கவனமாக செயல்பட வேண்டும் என்று கூறுகிறார்கள். வருவாயைவிடச் செலவு அதிகமாக இருக்கும் போது நிதிப் பற்றாக்குறை ஏற்படும். ​​இதேபோல் அந்நியச் செலாவணியின் வருவாய்க்கும், செலவுக்கும் இடையே இடைவெளி விழுந்தால் நடப்பு கணக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு விடும்.

திட்டம் இல்லை

திட்டம் இல்லை

தேர்தலை எதிர்நோக்கியுள்ள நிலையில் செலவினக்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டால், வளர்ச்சித் திட்டங்களை பாதிக்கும் என்பதால் இந்த நடவடிக்கையை அரசு விரும்பவில்லை. ஆகையால் வருவாய் தரும் கலால் வரியை குறைக்க திட்டமில்லை என்கின்றனர் அதிகாரிகள்.

பாதிப்பு- ஆனால் இல்லை

பாதிப்பு- ஆனால் இல்லை

நடப்பு நிதியாண்டில் 3.3 சதவீத நிதி பற்றாக்குறை இலக்குகளைக் கடக்கும் பட்சத்தில் இந்தியா நிதி அழுத்தங்களைச் சந்திக்க நேரும் என கிரீடிட் ஏஜென்ஸி மூடி கூறியுள்ளது. இது விரிவாகும் சூழல் உருவாகும் என்று கூறியுள்ள கேட், இந்தியாவின் வெளிப்புற நிலைப்பாட்டைச் சீர்குலைக்காது என்று தெரிவித்துள்ளது

வரி விதிப்பு

வரி விதிப்பு

ஒரு லிட்டர் பெட்ரோல் மீது 19.48 ரூபாயும், டீசல் மீது 15.33 ரூபாபும் மத்திய அரசு கலால் வரி விதித்து வருகிறது. இது தவிர மாநிலங்கள் மதிப்புக் கூட்டுவரியை விதிக்கிறது. அந்தமான் நிகோபார் தீவுகளில் பெட்ரோல், டீசல் மீது மிகக்குறைவாக 6 சதவீத விற்பனை வரிதான் விதிக்கப்படுகிறது.

அதிகபட்ச வரி

அதிகபட்ச வரி

மகாராஷ்டிர அரசு பெட்ரோல் மீது அதிக அளவாக 39.12 சதவீதம் மதிப்புக்கூட்டு வரி விதிக்கிறது. தெலுங்கானாவில் டீசல் மீது அதிக பட்சமாக 26 சதவீதம் மதிப்புக் கூட்டு வரி விதிக்கப்டுகிறது.

2014 இல் அச்சாரம்

2014 இல் அச்சாரம்

கடந்த 2014 ஆம் ஆண்டு பெட்ரோல் மீதான கலால் வரியை 11.77 ஆகவும், டீசல் மீதான வரியை 13.47 ரூபாயாகவும் மத்திய அரசு அதிகரித்தது. 2016 ஆம் ஆண்டு சஜனவரி மாதம் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை குறைந்த நிலையில், வரியில் 1 ரூபாய் மட்டுமே தள்ளுபடி செய்தது. கடந்த ஆண்டு அக்டோபரில் 2 ரூபாயைக் குறைத்தது.

வரி வருவாய் உயர்வு

வரி வருவாய் உயர்வு

கடந்த 4 ஆண்டுகளில் எரிபொருள் மீதான வரி வருவாய் கணிசமாக உயர்ந்தது. 2014- 15 இல் 99,184 கோடியாக இருந்த வரி வருவாய் 2017-18 இல் 2,29,019 கோடி ரூபாயாக அதிகரித்தது. மாநிலங்கள் விதிக்கும் மதிப்புக் கூட்டுவரி 1,37,157 கோடி ரூபாயிலிருந்து 1,84,091 கோடி ரூபாயாக உயர்ந்தது.

நீங்காத ஆபத்து

நீங்காத ஆபத்து

இந்தியாவில் உள்ள மற்ற மாநகரங்கள் மற்றும் மாநில தலைநகரங்களை விட டெல்லியில் குறைந்த அளவு விற்பனை வரி மற்றும் மதிப்புக் கூட்டு விதிக்கப்பட்டு வருகிறது. ஈரான் எரிபொருள் மீது அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

No relief in petrol, diesel prices soon! Government rules out excise duty cut as fuel rates hit new high

No relief in petrol, diesel prices soon! Government rules out excise duty cut as fuel rates hit new high
Story first published: Wednesday, September 5, 2018, 11:36 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X