வராக்கடனில் தத்தளித்த நிறுவனங்களை வளைத்துப் போட்ட பெரும் முதலாளிகள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருப்பிச் செலுத்த இயலாத வங்கிக் கடன்களுக்கு எதிராக ரிசர்வ் வங்கி திவாலா சட்டத்தைப் பிரயோகப்படுத்தத் திட்டமிட்டிருந்த நிலையில், பிரபலமான இரும்பு ஆலை நிறுவனங்கள் வராக்கடனில் தத்தளித்துக் கொண்டிருந்த நிறுவனங்களைக் கையகப்படுத்திப் பலன் பெற்றன.

உள்நாட்டில் இரும்புக்கு இருந்த தேவையை டாடா, வேதாந்தா மற்றும் ஆர்சலர் மிட்டல் போன்ற நிறுவனங்கள் பயன்படுத்திக் கொண்டன.

வாய்ப்பு

வாய்ப்பு

2017 ஆம் ஆண்டுப் பெரிய இரும்பு ஆலை நிறுவனங்கள் மோசமான கடன்களால் திண்டாடிக் கொண்டிருந்தன. திவாலா சட்டத்தின் கீழ் ரிசவர்வ் வங்கி வாய்ப்பு ஒன்றை வழங்கியது. வராக்கடனில் திவாலாகிக் கொண்டிருந்த நிறுவனங்கள் கையகப்படுத்தப்பட்டன.

கையகப்படுத்தல்

கையகப்படுத்தல்

2010 ஆம் ஆண்டு 50,000 கோடி பங்கு மதிப்பைக் கொண்ட பூஷன் ஸ்டீல் நிறுவனத்தை டாடா கையகப்படுத்தியது. இது திவாலாச் சட்டத்தின் கீழ் நிலுவையில் இருக்கும் வெற்றிகரமான வழக்கு. இதேபோல எலக்ட்ரோ ஸ்டீல் நிறுவனத்தை 5300 கோடி ரூபாய்க்கு வாங்கி வேதாந்தா குழுமம் இருப்பு ஆலைத் தொழிலுக்குள் நுழைந்தது.

லாபகரமான தொழில்

லாபகரமான தொழில்

திவாலா சட்டத்தின் மூலம் வராக்கடனில் திண்டாடிய இரும்பாலைகள் பலன் பெற்றதாகக் கூறிய நிதி ஆயோக் அதிகாரி அமிதாப் காந்த், இந்தியாவில் இரும்பின் தேவை அதிகமாக இருந்ததே பெரிய நிறுவனங்களின் பேராசைக்குக் காரணமாக இருந்தாகக் கூறினார். சீனாவிலிருந்து இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால், உள்நாட்டில் ஏற்பட்ட தேவையைப் பயன்படுத்தி லாபகரமான தொழிலாக மாற்றிக் கொண்டன.

கடுமையான போட்டி

கடுமையான போட்டி

லக்ஷ்மி மிட்டலின் ஆர்சலர் மிட்டல் மற்றும் ரஷ்யாவின் வி.டி.பி குழுமத்தின் ஆதரவு பெற்ற நியூமட்டல் மொரீசியல் நிறுவனத்துக்கும், எஸ்ஸார் ஸ்டீலுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. அப்போது கடனில் திண்டாடிய எஸ்ஸார் நிறுவனத்தை 42,000 கோடி ரூபாய்க்கு ஆர்சலர் மிட்டல் கையகப்படுத்திக் கொண்டது.

நல்ல அறிகுறி

நல்ல அறிகுறி

கடன் சுமைகள், மோசமான நிர்வாகம் மற்றும் சாதகமற்ற சந்தை நிலவரங்களால் திவலான நிறுவனங்ள், புதிய தலைமையில் கீழ் இயங்கத் தொடங்கின. செயல்படாமல் இருந்த சொத்துக்களை ஒரு வருவாய் ஈட்டும் வகையில் மாற்றப்பட்டது நல்ல அறிகுறி என வல்லுநர் புனி தத் தியாகி தெரிவித்தார்.

மறுசீரமைப்பு

மறுசீரமைப்பு

சாத்தியமான முயற்சிகள் மூலம் மறுசீரமைப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ள சிம்ரஞ்சித் சிங் என்ற வல்லுநர், நிலுவையில் உள்ள கடனை மீட்பது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

When steel turned into gold for Tata, Vedanta, ArcelorMittal: How IBC converted NPA volcanoes into gold mines

When steel turned into gold for Tata, Vedanta, ArcelorMittal: How IBC converted NPA volcanoes into gold mines
Story first published: Friday, September 14, 2018, 17:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X