என்னது தமிழன், இந்தியாவின் இரண்டாவது பெரிய கடங்காரனா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமீபத்தில் 2018 - 19 நிதி ஆண்டுக்கான ட்ரான்ஸ் யூனின் சிபில் நிறுவனத்தின் அறிக்கை வெளியானது. அந்த அறிக்கையின் படி இந்தியாவின் மராத்தியர்களுக்குப் பிறகு, தமிழர்கள் தான் அதிகம் கடன் வாங்கி இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறது.

 

ட்ரான்ஸ் யுனின் சிபில்

ட்ரான்ஸ் யுனின் சிபில்

வழக்கமாக வங்கிக்கு கடன் வாங்க செல்லும் போது சிபில் ஸ்கோர் இருக்கா என்று கேட்பார்களே, நமக்கு ஸ்கோர் போடும் அந்த நிறுவனம் தான் இந்த ட்ரான்ஸ் யூனியன் சிபில். இந்திய வங்கிகளில் யார் கடன் வாங்கினாலும் அவரை பற்றிய தகவல்கள், கடன் பற்ரிய விவரங்கள் எல்லாமே அவருக்கு வழங்கப்படும். அந்த விவரங்களை வைத்து தான் இந்த அறிக்கையை ஒவ்வொரு காலாண்டுக்கும் தயார் செய்கிறது சிபில்.

இனி அறிக்கையில் இருந்து

இனி அறிக்கையில் இருந்து

ஏப்ரல் 01, 2018 தொடங்கி ஜூன் 30, 2018 வரையிலான மூன்று மாதத்தில் மட்டும், சுமார் 26.1 லட்சம் கோடி ரூபாயை வங்கிகள் கடனாக கொடுத்திருக்கின்றன. இது கடந்த ஜூன் 2017 காலாண்டை விட 31.3 சதவிகிதம் அதிகம்.

எதெல்லாம் கணக்கில் உண்டு
 

எதெல்லாம் கணக்கில் உண்டு

இந்த அறிக்கை அட்டொமொபைல் லோன், பழைய கார்களை வாங்குவதற்கான கடன்கள், இருசக்கர வாகனக் கடன்கள், வீட்டுக் கடன், சொத்துக்களைப் பணையம் வைத்து வாங்கபப்ட்ட கடன்கள், தனி நபர் கடன்கள், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் கடன்கள், கல்விக் கடன்கள் மற்ரும் க்ரெடிடி கார்ட் கடன்களை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறது.

எவ்வளவு கடன் தொகை

எவ்வளவு கடன் தொகை

மகாராஷ்டிரம் - 5.5 லட்சம் கோடி ரூபாய், தமிழகம் - 2.77 லட்சம் கோடி ரூபாய் மற்றும் கர்நாடகம் - 2.74 லட்சம் கோடி ரூபாய் என்று மூன்று மாநிலங்கள் மட்டும் இந்தியாவில் வாங்கப்பட்டுள்ள மொத்தக் கடன் தொகையில் 40 சதவிகித கடன் தொகையை வாங்கி இருக்கிறார்கள். அதாவது இந்திய வங்கிகள் கொடுத்திருக்கும் மொத்தக் கடன் தொகையான 26 லட்சம் கோடி ரூபாயில் சுமார் 11 லட்சம் கோடி ரூபாயை இந்த மூன்று மாநிலத்தவர்கள் மட்டுமே வாங்கி இருக்கிறார்கள்.

 கடன் எண்ணிக்கை அடிப்படையில்

கடன் எண்ணிக்கை அடிப்படையில்

இந்தியாவில் மொத்தம் கடன் வாங்கி இருப்பவர்களில் 32 சதவிகிதத்தினர் மேற்கூறிய மூன்று மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான். அதாவது மொத்தம் இந்திய வங்கிகள் நூறு பேருக்குக் கடன் கொடுத்திருக்கிறார்கள் என்றால் அதில் 32 பேர் மராத்தியர்கள், தமிழர்கள் மற்றும் கன்னடர்கள்.

நல்லவேளை இதுவரை இந்தியாவின் ஐகானிக் கடங்காரர்களான விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்று தமிழகத்தில் இதுவரை யாரும் உருவாகவில்லை என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். குறிப்பு இந்தக் கடன்களில் எந்த ஒரு நீரவ் மோடியோ, விஜய் மல்லையாவோ உருவாக முடியாது. நாம் வாங்கும் சொத்து அவன் பெயரில் தான் இருக்கும் எனப்தால், கடனைக் கட்டி முடிக்காத வரை நம் பெயருக்கு மாற்றித் தரமாட்டான் கடன் கொடுத்த கடங்காரன்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tamilans are the second largest borrower in banks

Tamilans are the second largest borrower in banks
Story first published: Monday, September 24, 2018, 15:11 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X