முகேஷ் அம்பானி, கௌதம் அதானியை பணக்காரர்களாக்கிய ராசி எது தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வியாபார உத்தி, போட்டியைச் சமாளிக்கும் திறன், பழைய சரக்குகளைக் கூட விற்று முதலாக்கும் வல்லமைதான் ஒரு வர்த்தகரை, உச்சாணிக் கொம்புகளில் ஏற்றி வைக்கிறது. அன்றாடம் தலைப்புச் செய்திகளில் இடம்பெறும் இந்திய முதலாளிகளை அறிந்திருப்போம். அவர்களின் செல்வத்துக்கும், செல்வாக்குக்கும் காரணமாக உள்ள ராசிகளைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

 

2018 ஆம் ஆண்டின் இந்திய பணக்காரர்கள் பட்டியலை பார்க்லேஷ் ஹாருண் வெளியிட்டுள்ளது. 831 பேரில் 50 விழுக்காடு பணக்காரர்கள் கடகம், கன்னி, மேஷம், விருச்சிகம் மற்றும் மகர ராசிகளைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

கடகம் முன்னிலை

கடகம் முன்னிலை

வர்த்தக வளர்ச்சியை அதிகம் வழங்கிய ராசியாகக் கடகம் முன்னிலை வகிக்கிறது. பார்க்லேஸ் ஹாருன் வெளியிட்ட பட்டியலில் 10.50 சதவீத செல்வந்தர்கள் கடகராசியைக் கொண்டவர்கள். 71,200 கோடி ரூபாயுடன் முன்னிலை வகிக்கும் கௌதம் அதானியின் ராசி கடகம்.

 அம்பானிக்கு மேஷராசி

அம்பானிக்கு மேஷராசி

கன்னி ராசியைச் சேர்ந்த பணக்காரர்கள் 9.70 விழுக்காட்டினரும், மேஷ ராசிக்காரர்கள் 9.3 விழுக்காட்டினரும் பணக்காரர்களாக உயர்ந்துள்ளனர். 9.2 சதவீதத்தினர் விருச்சிக ராசிக்காரர்களாகவும்,9 சதவீதத்தினர் மகர ராசிக்காரர்களாகவும் உள்ளனர். ரிலையன்சின் முகேஷ் அம்பானி, லூலு குழுத்தின் யூசுப் அலி, கோத்ரெஜ் குழுமத்தின் கிறிஸ்டினா முறையே மேஷம், விருச்சிகம் மற்றும் மகர ராசிக்காரர்கள் ஆவார்கள்.

 சிம்ம ராசிக்காரர் அசீம் பிரேம்ஜி
 

சிம்ம ராசிக்காரர் அசீம் பிரேம்ஜி

சிம்மம், துலாம், மீனம், மிதுனம், ரிஷபம், கும்பம் மற்றும் தனுசு ராசிகளைச் சேர்ந்தவர்கள், 8.5 விழுக்காட்டிலிருந்து 6.4 விழுக்காடு வரை பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். விப்ரோவின் அசீம் பிரேம்ஜி சிம்ம ராசிக்காரர். சன் பார்மா நிறுவனத்தின் திலீப் சங்வி துலாம் ராசியைக் கொண்டவர். கோட்டக் வங்கியின் உதய் கோட்டக், ஆர்சலர் மிட்டலின் முதன்மை செயல் அதிகாரி எல்.என்.மிட்டல் முறையே மீனம் மற்றும் மிதுன ராசிக்காரர்கள் .

ரிஷபம், கும்பம்? தனுசு

ரிஷபம், கும்பம்? தனுசு

செரம் இன்ஸ்டிடியூட் சைரஸ் எஸ் பூனேவாலா, பிரிட்டானியா அதிபர் நஸ்லி வாடியா ற்றும் ஹிந்துஜா குழுமத்தின் எஸ்.பி ஹிந்துஜா ஆகியோர் முறையே ரிஷபம், கும்பம் மற்றும் தனுசு ராசிக்காரர்கள் ஆவார்கள்.

 எண்ணிக்கை உயர்வு

எண்ணிக்கை உயர்வு

831 பேர் கொண்ட பார்க்லேஷ் பட்டியலில் மும்பையைச் சேர்ந்த 233 பேர் இந்தியாவின் பணக்காரர்களாக உள்ளனர். அதனைத் தொடர்ந்து டெல்லி மற்றும் பெங்களுரைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர். மும்பை மற்றும் டெல்லியைச் சேர்ந்த பணக்காரர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

ரித்தேஷ் அகர்வால்

ரித்தேஷ் அகர்வால்

24 வயதான ஓயோ குழுமத்தின் ரித்தேஷ் அகர்வால் இளம் வயது பணக்காரராக இடம்பெற்றுள்ளார். எம்.டி.எச் மசாலா நிறுவனத்தின் தரம் பவுல் குலாட்டி 95 வயதில் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். பார்மா நிறுவனங்கள் மற்றும் செயல் அதிகாரிகள் பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதனைத் தொடர்ந்து மென்பொருள், சேவை மற்றும் நுகர்பொருள் உற்பத்தித்துறையைச் சேர்ந்தவர்கள் பணக்காரர்களாக வலம் வருகின்றனர்.

வளர்ச்சி

வளர்ச்சி

9 புதிய தொழில்முனைவோர்கள் கடந்த ஒருவருடத்தில் 100 விழுக்காடு வளர்ச்சியைப் பெற்றுள்ளனர். கிராபைட் இந்தியாவின் கிருஷ்ணகுமார் பன்கூர் 430 விழுக்காடு வளர்ச்சியைப் பெற்றுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Do You Know The India's Richest Persons Zodiac Signs?

Do You Know The India's Richest Persons Zodiac Signs?
Story first published: Thursday, September 27, 2018, 15:15 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X