மாமியார் செலவ உபி அரசாங்கமே ஏற்கணும், கரார் கல்பனா திவாரி. ஓகே சொன்ன உபி யோகி

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
மாமியார் செலவ உபி அரசாங்கமே ஏற்கணும், கரார் கல்பனா திவாரி. ஓகே சொன்ன உபி யோகி

29/09/2018 அன்று உத்திரப் பிரதேச மாநிலத்தில் விவேக் திவாரி என்பவர், காவலர்கள் சொல்லியும் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதற்காக மற்றொரு காவலரால் சுடப்பட்டு இறந்தார். அந்த இறப்புக்குப் பின் விவேக் திவாரி குடும்பத்தினர் உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்த்தித்தனர்.

 

கல்பனா திவாரி

கல்பனா திவாரி

இவர் இறந்த விவேக் திவாரியின் மனைவி. இவர் நேற்று முதல்வரை சந்தித்துவிட்டு ஒரு பெரிய லிஸ்டையே அடுக்கிவிட்டு வந்திருக்கிறார். முதல்வரை சந்தித்த பிறகு "எனக்கு இந்த மாநிலத்தின் மீதும், மாநில அரசு நிர்வாகத்தின் மீதும் நம்பிக்கை இருக்கிறது. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த பின் எனக்கு இந்த நம்பிக்கை இன்னும் அதிகரித்திருக்கிறது. நான் என் சொந்த காலில் நிற்கும் திறனை, என் கணவர் இறந்ததினால் இழந்துவிட்டேன். என் கணவரும் நானும் சேர்ந்து செய்ய வேண்டிய கடமைகளை நான் தனியாக இனி செய்ய வேண்டி இருக்கிறது. முதல்வர் கொடுத்த நம்பிக்கையால் என் கடமைகளை நான் சிறப்பாகச் செய்து முடிப்பேன் என்று நம்புகிறேன்" எனP பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.

அவர் லிஸ்ட்

அவர் லிஸ்ட்

"என் கணவரைச் சுட்டுக் கொன்ற காவலர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு ஒரு நல்ல வேலை கொடுக்க வேண்டும், ஒரு நல்ல வீடு வேண்டும், என் குழந்தைகளின் கல்விக்குத் தேவையான செலவுகளை அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும். என் மாமியாருக்கு தேவையான செலவுகளையும் அரசாங்கமே ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது அதற்கு ஏதாவதொரு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்". என்று முதல்வரிடமே அடுக்கி இருக்கிறார்

ஓகே சொன்ன முதல்வர்
 

ஓகே சொன்ன முதல்வர்

கல்பனா திவாரி முதல்வரை சந்தித்து இந்த தேவைகளை கேட்ட போதே "எங்களால் என்ன எல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாவற்றையும் இந்த குடும்பத்துக்கு உபி அரசு செய்து கொடுக்கும்" என்று யோகி ஆதித்ய நாத் உறுதி அளித்திருக்கிறார்.

கைது

கைது

பிரசாந்த் சவுத்திரி மற்றும் சந்தீப் குமார் ஆகிய இரண்டு காவலர்கள் கல்பனா திவாரியின் வேண்டுதல் மற்றும் விவேக் திவாரி உடன் காரில் பயணம் செய்த சனா கானின் புகாரின் அடைப்படையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இப்படி படிப்டியாக கல்பானா திவாரி மற்றும் அவரின் குழந்தைகளுக்கு வேண்டியதை இந்த அரசு நிச்சயம் செய்து கொடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் உபி முதல்வர்.

தினேஷ் சர்மா

தினேஷ் சர்மா

உபி அரசு எடுத்து வரும் இந்த அதிரடி நடவடிக்கைகளால் கல்பனா திவாரி மற்றும் அவரது குடும்பத்தினர் திருப்தி அடைந்திருக்கின்றனர். என்று உபி துணை முதல்வர் தினேஷ் சர்மா பத்திரிகையாளர்களிடம் சொல்லி இருக்கிறார். தினேஷ் சர்மா

தனியாக கல்பனா திவாரி மற்றும் அவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து பேசியும் வருகிறாராம். உபி அரசின் இந்த ஒப்புதல்களுக்குப் பிறகு தான் நேற்று விவேக் திவாரியின் இறுதி காரியங்களை கவனிக்கத் தொடங்கினார்கள் கல்பானா குடும்பத்தினர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: up yogi adityanath adityanath
English summary

My Mother in law’s Expenses has to be Beared by Uttarpradesh Government

My Mother in law’s Expenses has to be Beared by Uttarpradesh Government
Story first published: Monday, October 1, 2018, 16:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X