ஆமாங்க எங்களுக்கு ரூ. 4,80,093 கோடி கடன் ஸ்வாஹா, ஒப்புக் கொண்ட இந்திய வங்கிகள்

கடந்த 2017 - 18 நிதி ஆண்டில் இந்திய வங்கிகள் (அரசு மற்றும் தனியார்) 1,44,093 கோடி ரூபாயை திரும்ப வரவே வராத வாராக் கடனாக (Written off asset) அறிவித்திருக்கிறார்கள்.

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
ஆமாங்க எங்களுக்கு ரூ. 4,80,093 கோடி கடன் ஸ்வாஹா, ஒப்புக் கொண்ட இந்திய வங்கிகள்

மத்திய ரிசர்வ் வங்கி எனப்படுகிற ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா சமீபத்தில் வங்கிக் கடன்கள் (Loan) பற்றி, ஒரு திடுக்கிடும் தகவலை வெளியிட்டது. அதைக் கேட்டால் இந்திய வங்கிகள் மீதான நம்பிக்கை மேலும் மேலும் தவிடு பொடியாகி விடும். இந்திய வங்கிகளின் நிதி நிலைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு இதைச் சொல்லி இருக்கிறது என்பது கூடுதல் தகவல்.

2017 - 18 நிலை

2017 - 18 நிலை

கடந்த 2017 - 18 நிதி ஆண்டில் இந்திய வங்கிகள் (அரசு மற்றும் தனியார்) 1,44,093 கோடி ரூபாயை திரும்ப வரவே வராத வாராக் கடனாக (Written off asset) அறிவித்திருக்கிறார்கள்.

யார் லீடிங்...?

யார் லீடிங்...?

இந்த 1,44,093 கோடி ரூபாய் என்பது கடந்த மார்ச் 2017-ல் அறிவித்த 89,048 கோடியை விட 61 சதவிகிதம் கூடுதலான தொகை. இந்த 1.4 லட்சம் கோடியில் 1,20,165 கோடி ரூபாயை அரசு வங்கிகள் திரும்ப வரவே வராத சொத்துக்களாக (Written off asset) அறிவித்திருக்கிறது. அப்படியே
ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு தொகை இப்படி அரசு மற்றும் தனியார் வங்கிகள் திரும்ப வராத கடன்களாக அறிவித்திருக்கிறார்கள் என்பதை மேலே படத்தில் காணலாம். அரசு வங்கிகளைப் பார்த்து நெஞ்சுவலி வந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல

கடந்த 10 ஆண்டுகள்

கடந்த 10 ஆண்டுகள்

கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் இயங்கும் அரசு மற்றும் தனியார் வங்கிகள் திரும்ப வரவே வராத சொத்துக்களாக (Written off asset) எழுதிய தொகை எவ்வளவு தெரியுமா 4,80,093 கோடி.

நின்னு விளையாடு

நின்னு விளையாடு

இந்த 4.8 லட்சம் கோடி ரூபாயில் அரசு வங்கிகள் மட்டும் திரும்ப வரவே வராத சொத்துக்களாக (Written off asset) எழுதிய தொகை 4,00,584 கோடி ரூபாய். நல்லா இருக்குல. மொத்த 4.8 லட்சம் கோடியில் இந்த தொகை 83 சதவிகிதம்.

எந்த வங்கி அதிகம்

எந்த வங்கி அதிகம்

இந்தியாவின் மிகப் பெரிய வங்கி, அதிக ஏடிஎம் இயந்திரங்களைக் கொண்ட வங்கி, உலகின் உயரமான இடத்தில் ஏடிஎம் வைத்திருக்கும் வங்கி என்று பல பட்டங்களைக் கொண்ட ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தான் திரும்ப வரவே வராத சொத்துக்களாக (Written off asset)அதிகம் அறிவித்து அதிலும் ரெக்கார்ட் வைத்திருக்கிறது. அரசு வங்கிகளின் 4,00,584 கோடி ரூபாயில் 1,23,137 கோடி ரூபாய் நம் எஸ்பிஐ-ன் கடன்கள் மட்டுமே. அதற்குப் பிறகு பேங்க் ஆஃப் பரோடா, கனரா, நீரவ் மோடி புகழ் பஞ்சாப் நேஷனல் பேங்க் எல்லாம் வரிசையாக வருகின்றன.

வங்கியாளர்கள் பதில்

வங்கியாளர்கள் பதில்

"எப்போதுமே வங்கிகள் இப்படி, தங்களால் வசூலிக்க முடியாத கடன்களை திரும்ப வரவே வராத வாராக் கடனாக (Written off asset) அறிவித்துவிட்டு, அதை மேலும் பின் தொடர்ந்து கொண்டுதான் இருப்பார்கள். அப்படி திரும்பி வரவே வராத வாராக் கடனாக அறிவிக்கவில்லை என்றால் வங்கிகளின் நிதி நிலை அறிக்கைகளைப் பார்ப்பவர்களுக்கு வங்கி ரொம்ப நஷ்டத்தில் ஓடுவது போன்று தோன்றும். எனவே இவைகளை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இது ஒரு சாதாரணமான நடவடிக்கை" என்று சொல்கிறது வங்கிகள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: loan sbi rbi
English summary

yes we lost Rs.4,80,093 crores as writtenoff loan asset

Yes. we lost Rs.4,80,093 crores as written off loan asset.A confession from indian public and private banks
Story first published: Monday, October 1, 2018, 14:33 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X