வளைத்து வளைத்து டிசிஎஸ் மீது வழக்கு தொடுத்த இவர் யார்? நஷ்டம் 29,000 கோடி

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு குறையும் போது எல்லாம், அமெரிக்காவில் கடை விரித்திருக்கும் ஐடி நிறுவனங்களின் பங்குகள் அதிகரிக்க வேண்டும். ஆனால் இன்று சந்தையில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறி இருக்கிறது. காரணம் ஒரு வழக்கு.

 எவ்வளவு நஷ்டம்

எவ்வளவு நஷ்டம்

காலையில் 2,255 ரூபாய்க்கு வர்த்தகமாகத் தொடங்கிய டிசிஎஸ் பங்கு தற்போது 2177க்கு வர்த்தகமாகி வருகிறது. இந்த 78 ரூபாய் விலை இறக்கத்தால் மட்டும் 29,000 கோடி ரூபாயை டிசிஎஸ்-ல் முதலீடு செய்திருப்பவர்களின் மதிப்பை இழந்திருக்கிறார்கள்.

ஏன்

ஏன்

ஒரு தனி மனிதன் அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கு வேலை தராமல், இந்தியர்களுக்கே வேலை வாய்ப்புகளைத் தருவதை எதிர்த்து டேனியல் காட்சன் (Daniel Kotchen) நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார். டிசிஎஸ் மட்டும் இல்லாமல் விப்ரோ, ஹெச்.சி.எல், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, காக்னிசன்ட் என்று வளைத்து வளைத்து வழக்கு தொடுத்திருக்கிறார். அமெரிக்காவின் ஐடி துறையில் மட்டும் பத்து லட்சம் பேருக்கு மேல் வலை பார்க்கிறார்கள். அதில் பெரும்பாலானவர்கள் நம் இந்தியர்கள் தான்.

விசாரணைக்கு ஓகே சொன்ன நீதிமன்றம்

விசாரணைக்கு ஓகே சொன்ன நீதிமன்றம்

அமெரிக்க நீதிமன்றத்தில் இந்த வழக்குகளை தள்ளுபடி செய்யுமாறு முறையிட்ட இந்திய ஐடி நிறுவன வாதங்களை ஒரு ஓரமாக ஒதுக்கிவிட்டு, வழக்குகளை நிச்சயம் விசாரணைக்கு எடுத்துக் கொள்வோம் என்று தெளிவாக சொல்லி இருக்கிறது அமெரிக்க நீதி மன்றம்.

ஜெயித்த வழக்குகள்

ஜெயித்த வழக்குகள்

டேனியல் காட்சன் தன்னுடைய Kotchen & Low என்கிற நிறுவனத்தின் மூலம், பணியாளர்கள் நலன் தொடர்பாக இதுவரை பல நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து 220 மில்லியன் டாலர் வரை நஷ்டஈடு பெற்றுத் தந்திருக்கிறார். இவர் ஏதோ ஊப்ப சப்பை வக்கீல் கிடையாது. இதற்கு முன்பு ஃபெடரல் டிரேட் கமிஷன் (Federal Trade Commission) அமைப்பின் ட்ரயல் வக்கீலாக இருந்திருக்கிறார். அங்கு ஃபார்மா நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளை பெண்டு கழட்டிவிட்டு தற்போது ஐடி நிறுவனங்கள் மீது தன் கவனத்தைத் திருப்பி இருக்கிறார்.

வக்கீல் ஃபீஸ்

வக்கீல் ஃபீஸ்

இந்த வக்கீல் எப்போதும் ஃபீஸ் வாங்குவதில்லை. இவருடைய ஃபீஸ், வாங்கித் தரும் கமிஷனில் 33 - 45 சதவிகிதம் என்று டீல் பேசிக் கொள்கிறார். எனவே இவரிடம் தொடுக்க இன்னும் நிறைய வழக்குகள் இருக்கிறதாம். நேரம் தான் இல்லையாம். அதோடு வாதாடும் காலத்தில் வழக்குச் செலவுகளைக் கூட செய்யத் தேவை இல்லை என்பதால், பலரும் இந்த வக்கீலிடம் வந்து தங்கள் வழக்கை வாதாடச் சொல்கிறார்களாம்.

டிசிஎஸ் பதில்

டிசிஎஸ் பதில்

நாங்கள் எந்த சந்தர்பத்திலும் வேலைவாய்ப்பில் பாகுபாட்டைப் பார்த்ததில்லை, பார்க்கப் போவதும் இல்லை என்று அறிவித்திருக்கிறார்கள். அதே நேரத்தில் காட்சனின் வழக்கை சட்ட ரீதியாக எதிர் கொள்ளவும் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள். டிசிஎஸ் தான் அமெரிக்காவின் இரண்டாவது பெரிய H-1B வீசா பயன்பாட்டாளர். 14,697 வீசாக்களை கடந்த 2017-ம் ஆண்டில் பெற்றிருக்கிறது டிசிஎஸ். ஆனால் 3000 அமெரிக்கர்களை மட்டுமே வேலைக்கு எடுத்திருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Daniel kotchen filed case against TCS, shares tanks.

Daniel kotchen filed case against TCS, shares tanks.
Story first published: Wednesday, October 3, 2018, 15:33 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X