ஜியோவை சமாளிக்கப் புதிய யுக்தியை கடைபுடிக்கப் போகும் ஏர்டெல் ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் ஜியோவை சமாளிக்கக் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. ஆனால் அதுமட்டும் போதாது என ஏர்டெல்லுக்கு மெல்லப் புரியவந்துள்ளது என்னமோ தெரியவில்லை, தற்போது ஏர்டெல் புது யுத்தியைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. அது என்னவென்பதை இங்குப் பார்ப்போம்.

 

புதிய யுக்தி

புதிய யுக்தி

ஏர்டெல் இகமெர்ஸ் நிறுவனங்களான பிளிப்கார்ட், மேக் மை ட்ரிப் மற்றும் நெட்பிளீஸ் உடன் இணையுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த ஆஃபர்களை வழங்க முடியும் என ஏர்டெல் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் பரிணாமத்தின் மூலம் புதிய பயனர்கள் அதிகம் வருவார்கள் அதன் வாயிலாக அதிக லாபம் கிடைக்கும் என ஏர்டெல் நம்புகிறது.

எதன் அடிப்படையில் ஆஃபர்கள்?

எதன் அடிப்படையில் ஆஃபர்கள்?

இந்த ஆஃபர்கள் அனைவர்க்கும் கிடைக்கும் எனச் சொல்ல முடியாது, அதற்கு முக்கியக் கரணம் ஒரு வாடிக்கையாளர் குறைந்தபட்சம் மாதத்திற்கு 100 ரூபாய்க்காவது ஏர்டெல்லில் ரீசார்ஜ் செய்யவேண்டும். 100 ரூபாய்க்கு மேல் எவ்வளவு அதிகமாக ரீசார்ஜ் செய்கிறார்களோ அதற்கு ஏற்றவாறு ஆஃபர்கள் அளிக்கப்படும்.

ஆய்வு
 

ஆய்வு

இந்த முடிவின் முக்கிய நோக்கம் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதுதான். அதுபோக நாங்கள் உலகின் மற்ற டெலிகாம் நிறுவனங்களைப் பற்றி ஆராய்ந்த போது அவர்களும் இதைத்தான் பின்பற்றுகின்றனர் என்று ஏர்டெல் முத்த மார்க்கெட்டிங் அதிகாரி வாணி வெங்கட்டேஷ் தெரிவித்துள்ளார்.

போட்டி

போட்டி

என்னதான் வாய்ஸ் கால் மற்றும் டேட்டா விலையைக் குறைத்தாலும், இப்போது இருக்கும் அணைத்து நிறுவனங்களிலும் ஒரே மாதிரியான ரீசார்ஜ் திட்டங்கள் தான் உள்ளது. அதனால் டெலிகாம் நிறுவனங்கள் வேறு சில வழிமுறைகளைக் கையாள நினைக்கிறன, அதன் ஒரு பகுதியாகத் தான் ஏர்டெல்லின் இந்த முடிவு பார்க்கமுடிகிறது.

ஜியோ

ஜியோ

உதாரணத்திற்கு ஜியோ அதன் பயனாளர்களுக்கு ஏஜியோ.காம் மற்றும் ரிலையன்ஸ் ட்ரென்ட்ஸ் ஆகிய தளங்களில் சிறந்த ஆஃபர்களை வழங்கிவருகிறது. அதே போல் ஏர்டெல்லும் அதன் வியாபாரத்தைப் பெருக்கிக்கொள்ள இதை அறிமுகப்படுத்த இருக்கிறது.

வல்லுநர் கருத்து

வல்லுநர் கருத்து

KPMG-ல் பார்ட்னர் ஆணா ஜெய்தீப் கோஷ், இன்றிருக்கும் போட்டியில் வெறும் டேட்டா மற்றும் கால் கட்டணங்களைக் குறைத்து மட்டும் ஒரு நிறுவனம் நிலைக்க முடியாது. டெலிகாம் சந்தையில் உள்ள நிறுவனங்கள் மற்ற துறையில் உள்ள நிறுவனங்களுடன் இணைந்து பிற சேவைகளையும் அளித்தால்தான் வளர்ச்சி இருக்கும் எனக் கூறியுள்ளார்.

ஏர்டெல்

ஏர்டெல்

ஏர்டெல்லிடம் தனியா இகமெர்ஸ் தளம் இல்லாததால் அதன் 350 மில்லியன் வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க இந்த இணைவு முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஏர்டெல்லின் மற்ற ஒரு முத்த அதிகாரி கூறுகையில் ஒரு பிராண்டின் மேல் எவ்வளவு அதிக முதலீடு செய்கிறோமோ அதற்கு ஏற்றவாறு அந்தப் பிராண்டின் மூலம் அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.

 தற்போதைய நிலவரம்

தற்போதைய நிலவரம்

தற்போது உள்ள நிலையில் ஜியோ,ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா இடையில் உள்ள கடும் போட்டியால் விலை மாற்றமே இல்லாமல் பல மாதங்களாக ஒரே விலை தான் உள்ளது. ஆனால் டெலிகாம் நிறுவனங்கள் இன்னும் இரண்டு அல்லது மூன்று காலாண்டிற்குள் விலையைச் சற்று ஏற்றும் என டெலிகாம் வல்லுநர்கள் கூறுகின்றனர். அதன்பின் வாடிக்கையாளர்களின் அதிக டேட்டா பயன்பட்டால் அதிக லாபங்களை டெலிகாம் நிறுவனங்கள் ஈர்க்கும் என நம்புகிறார்கள்.

தாமதமான முடிவா?

தாமதமான முடிவா?

ஏர்டெல் எடுத்துள்ளது தாமதமான முடிவா எனக் கேள்வி எழுப்பியதற்கு, அதன் முத்த அதிகாரிகள் மறுத்து விட்டனர். அதற்கு அவர் கூறியது, "நங்கள் முன்பே இது போல் இணைவுகள் வைத்து இருந்தோம் ஆனால் அதை மிகைப்படுத்தவில்லை, இப்போது ஏர்டெல் பயனாளர்களுக்குத் தேர்ந்தெடுத்த ஆஃபர்களை அளிக்கப்போகிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

airtel new weapon to deal jio

airtel new weapon to deal jio
Story first published: Friday, October 12, 2018, 14:21 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X