முட்ட முழி, சப்பி கண்ணம், கொழு கொழு தொடை, குறுகிய இடை... அமெரிக்க அதிபர் ஜொல்லு விட்ட க(வி)தை!

அமெரிக்க அதிபர் தான் MeToo வின் முதல் குற்றவாளி, அதை வெளிக் கொண்டு வந்த முதல் பெண் யார் தெரியுமா...?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

# MeToo.இன்று பெண்களின் பலமான வார்த்தை. எத்தனையோ இந்தியப் பெண்கள் பல துறைகளில் இருந்தும் தங்களுக்கு நேர்ந்த அவலங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர். அதில் உண்மைகளும் இருக்கின்றன, சில சுவாரஸ்யப் பொய்களும் இருக்கின்றன. எதை நம்புவது, எதை மறுப்பது என்றே தெரியாமல் முழிக்கிறோம். அந்த அளவுக்கு இந்த # MeToo வைப் பகுத் தாராய்ந்து பார்க்க வேண்டி இருக்கிறது. ஆனால் இந்த #MeToo-க்கும் அமெரிக்க அதிபர் ஒருவர் தான் முதல் பலி என்றால் நண்புவீர்களா அட ஆமாங்க நீங்க நம்பித் தான் ஆகணும் சாமி. அந்த உத்தமரோட பெயர் பில் க்ளிண்டன்.

உலகப் போர்

உலகப் போர்

அமெரிக்காவுக்கு இரண்டாம் உலகப் போர் அத்தனைப் பிடிக்கும். இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா மாதிரி அன்றே பில்லியன் டாலரில் பொருட்களை கடனுக்கு கொடுத்து வட்டியோடு கட்டினால் போதும் என்று பிசினஸ் பார்த்த நாடு எவனும் கிடையாது. அந்த 1944 கால கட்டத்தில் தான் அமெரிக்கா ஒரு வல்லரசு நாடாக தன்னை உணர்ந்தது. அதோடு இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற அந்த காலத்து வல்லரசு நாடுகளே, புகழ்கிறேன் என்று அமெரிக்காவை வல்லரசாக ஏற்றுக் கொண்ட தருணம் அது.

பில் க்ளிண்டன்

பில் க்ளிண்டன்

அத்தனை பிரசித்த பெற்ற உலகப் போர் 2-க்குப் பின் பிறந்து அதிபரான முதல் நபர், இவர் தான். பொதுவாக ராணுவ ஆர்வம் இருக்கும் அமெரிக்க அதிபர்களுக்கு மத்தியில் ராணுவ சேவைக்கு டிமிக்கு கொடுத்துவிட்டு லண்டனுக்கு படிக்கப் போனவர். லண்டனுக்குப் பின் யேல் பல்கலைக்கழகத்தில் சட்டம் படிக்கும் போது கட்டம் கட்டி காதலித்து ஹிலாரியை கல்யாணம் செய்தார். அதன் பின் டெமாக்ரெடிக் கட்சியில் சேர்க்கை, அரகன்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி, அரகன்ஸாஸ் மாகாண கவர்னராக தொடர்ந்து 3 முறை (மொத்தம் 5 முறை) வெற்றி எல்லாம ஒரு பக்கம். அப்படியே அடித்துப் பிடித்து தொங்கு பாராளுமன்றம் போல பார்டர் பாஸ் ஆகி அதிபரும் ஆகிவிட்டார்.

நிர்வாக சொதப்பல்

நிர்வாக சொதப்பல்

இந்த மனிதன் எடுத்த பல முக்கியமான முடிவுகள், அடுத்த சில மாதங்களிலோ, வருஷங்களிலோ எல்லாம் திரும்ப வாங்கிக் கொள்வார். ராணுவத்தில் கே (Gay) பணியாற்றுவது சரி என்று சொல்லி விட்ட, ராணுவ வீரர்கள் புரட்சிக்கு பின் நோ சொன்ன மகாத்மா இவர். அதே போல் அரசின் மிக முக்கியப் பொறுப்புகளில் எடுக்கும் ஆட்கள் மீது ஏதாவது புகார் சொன்னாலே அவர்களை விலகிக் கொள்ளச் சொல்வது என்று பல சொதப்பல்கள் நடந்தன. அதே போல் இவர் ஆட்சிக் காலத்தில் தான் அமெரிக்க காங்கிரஸே தன் அதிபரின் காலை வாரும் மங்கள செயல் நடந்தது. சரி மேட்டருக்கு வருவோம்.

வெள்ளை மாளிகை

வெள்ளை மாளிகை

நமக்கு எல்லாம் தெரிந்த இடம் தான். ஆனால் பில் க்ளிண்டனின் காம களி ஆட்டங்களுக்கு இதன் சீரியஸ்னஸ் தெரியவில்லை. அதிபர் ஆவதற்கு முன்பு வரை அசால்டாக அரசியலையும், அமுதுக் காமத்தையும் ஒரே கட்டிலில் மெயின்டெயின் செய்ய நம் காதல் மன்னனுக்கு அத்தனை கஸ்டமாக இல்லை. ஆனால் அதிபர் மாளிகை என்றால் அத்தனை ஈஸியாக அவர் டேட்டிங் செய்ய முடியுமா..? எத்தனை செக்யூரிட்டிகள், கெடுபிடிகள் இருக்காதா..? அதை எல்லாம் நம் காமக் கண்ணன் கண்டு கொள்ளவில்லை. அதிபர் மாளிகையில் வேலை பார்க்கும் பல முக்கிய பெருந்தலைகளுக்கு விஷயம் ஈஸியாகத் தெரிய வந்தது.
சார் பாத்து வேல பாருங்க... என்று நண்பர்கள் தொடங்கி, அதிகாரிகள் வரை எத்தனை சொல்லிப் பார்த்தும் நம் ஆளுக்கு உறைக்கவில்லை. காமம் ஒடுங்கவில்லை. ஜூலை 1995, நம் பில் க்ளிண்டனுக்கு சனி உச்சம் தொட்டது. அன்று தான் மோனிகா லெவின்ஸ்கி சம்பளம் இல்லாத இண்டெர்னாக வெள்ளை மாளிகையில் சேர்கிறார்.

மோனிகா லெவின்ஸி

மோனிகா லெவின்ஸி

"முட்ட முழி, சப்பி கண்ணம், கொழு கொழு தொட, குருக்கு இடை, வாழத் தண்டு கால், வார்கோல் முடி..." இப்படி மோனிகா லெவின்ஸ்கி வெள்ளை மாளிகைக்கு இன்டர்னாக வந்த உடனேயே அவள் அழகில் உருகிப் போனார் நம் பில். அதிபர் ஆச பட்டா சும்மா தலகாணி வெச்சிக்கிட்டு இருப்பாரா...? அவருடைய முதல் ரவுண்டு நவம்பர் 1995-ல் மோனிகா ஓட திருப்தியாக விளையாடினார். அதற்குப் பலனாக, ஆஃபீசில் சுமாராகவும், களியாட்டங்களில் சிறப்பாகவும் வேலை பார்த்த மோனிகாவுக்கு டிசம்பர் 1995-ல் க்ளிண்டன் ரெகமெண்டேஷனில் நிரந்தரப் பணியாளர் ஆகிப் போனார்.

உனக்கென இருப்பேன்...

உனக்கென இருப்பேன்...

காலம் கடந்து ஓட மோனிகாவை, க்ளிண்டன் பார்க்கும் போது எல்லாம் மனிஷி அவர் கண்ணுக்கு மட்டும் அத்தனை அழகாகத் தெரியத் தொடங்கினாள். போகும் போது வரும் போது எல்லாம் செல்லமாக கில்லுவது, களுக் எனச் சிணுங்குவது, மொசக் மொசக் என முத்தம் கொடுத்து விளையாடுவது, மோனிகா இடைக்கு கொடை பிடிப்பது என்று ராத்திரி சமாச்சாரங்கள் எல்லாம் சகஜமாக பகலில், அதுவும் வெள்ளை மாளிகையில் நடக்கத் தொடங்கியது. இதை தடுத்து நிறுத்த வெள்ளை மாளிகையில் இருந்து நம் காமக் கண்ணனின் கொழுக் மொழுக் மோனிகாவை பெண்டகனுக்கு பணி மாற்றம் செய்தார்கள். அமெரிக்க விசுவாசிகள்.

அடக்குனா அடங்குற ஆளா நீ

அடக்குனா அடங்குற ஆளா நீ

க்ளிண்டனுக்கு மனசே சரி இல்லை. பகிரங்கமாக மோனிகாவை இங்கு மீண்டும் அழைத்து வர முடியாது, ஆனால் அவ்வப் போது எப்படியோ, நம் க்ளிண்டன் மகாபிரபு மோனிகாவை வர வழைத்து ஜமாயித்தார். இப்படி நவம்பர் 1995 தொடங்கி மார்ச் 1997 வரை ஒன்பது முறை க்ளிண்டனின் காம விளையாட்டுக்கள் அரங்கேறின. ஆனால் ஒரு முறை கூட உடல் உறவு வரை போனதில்லை. எல்லாம் ஓரல் செக்ஸ் தான் என்று இருவருமே ஒப்புக் கொண்டார்கள். க்ளிண்டன் கொஞ்சம் பொய் சொல்லி சமாளித்து அதன் பின் ஒப்புக் கொண்டார்.

வெளியான கதை

வெளியான கதை

இந்த கசமுசாக்கள் வெளியாக, பத்திரிகை பிட்டு நியூஸ்களில் இடம்பெற்று, பக்கச் செய்திகளில் பப்ளிஷ் ஆகி, பின் கலர் படத்தோடு தலைப்புச் செய்திகளாக பிரசூரமாகி, டைம் பத்திரிகையில் அட்டை படமாகி வந்ததை எல்லாம் நாம் நிறையப் பார்த்துவிட்டோம். இதில் வேடிக்கை என்ன என்றால் தன் மீது சுமத்தப்பட்ட பல குற்றங்களை மறுத்த க்ளிண்டனால் இந்த மோனிகாவின் பாலியல் குற்றத்தை மறுக்க முடியவில்லை.

ப்ளூ ஸ்கர்ட்:

ப்ளூ ஸ்கர்ட்:

மோனிகா லெவின்ஸ்கி பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயெ க்ளிண்டன் தன்னோடு தனிமையில் உல்லாசமாக இருந்த போது அவரின் விந்து தன் ப்ளூ ஆடையில் பட்டுக் காய்ந்ததை ஆதாரமாகக் காட்டினார். "ஆமாங்க அய்யா... நான் அந்த பொண்ணு கூட ஜாலியா இருந்தேன்... ஆனா உடல் உறவு வெச்சிக்கல. எல்லாமே ஓரல் செக்ஸ் தான்" என்று ஒப்புக் கொண்டார்.

அன்றே பரவிய #MeToo

அன்றே பரவிய #MeToo

இப்படி மோனிகா லெவின்ஸ்கியின் கதை வெளியான பின்... பல பெண்கள் முன் வந்து தங்களை காமக் கொடூரன் பில் க்ளிண்டன் என்ன செய்தான் என்பதை உலகுக்குச் சொன்னார்கள். ஜுனைதா ப்ராட்ரிக் (Juanita Broaddrick)- நம் பில் க்ளிண்டனால் 1970-களிலேயே உடல் உறவு கொள்ளப்பட்டதாகச் சொன்னவர். பாலா ஜோன்ஸ் (Paula Jones) 1991-ல் பில் க்ளிண்டனால் பாலிய ரீதியாக வன்புணர்ச்சிக்கு உள் ஆனவர். நீதி மன்றப் படி ஏறி நியாயம் கேட்டவர். பில் க்ளிண்டனின் ஆண் உறுப்பில் இருந்த குறைபாடுகளை எல்லாம் சொல்லி வாதிட்டவர், ஆனால் சட்டத்துக்கு போதுமான ஆதாரம் இல்லாததால் வழக்கு தள்ளுபடி ஆனது. இருப்பினும் பில் க்ளிண்டன் 8,50,000 டாலர் கொடுத்து வாயை மூடினார்.

ஒரு படி மேல

ஒரு படி மேல

கேத்லின் வில்லி 1993-ல் வெள்ளை மாளிகையிலேயே தன் மீது கண்ட இடத்தில் கை வைத்து அசிங்கமாகப் பழகினார் என்று 1998-ல் சொன்னவர். தைரியமாக பில் க்ளிண்டனுக்கும் மோனிகாவுக்கும் நடந்த குஜால் தொலை பேசி உரையாடல்களை தில்லாக ரெக்கார்ட் செய்து வெளியிட்டவர். இப்படி இன்னும் பல பேர் மோனிகா லெவின்ஸ்கி முன் வந்து சொன்னதால் தாங்களும் முன் வந்து எதிர் கொண்ட பிரச்னைகளைச் சொன்னார்கள்.

சொல்ல மறந்துட்டேன்

சொல்ல மறந்துட்டேன்

அப்புறம் சொல்ல மறந்துட்டேன் உலகத்துலேயே முதன் முறையா அமெரிக்க காங்கிரஸ் கூப்பிட்டு மிரட்டி புத்தி மதி சொல்லி "தம்பி உன் ராஜ லீலைய எல்லாம் வெள்ளை மாளிகைக்கு வெளிய வெச்சிக்கணும். இது என்ன இடம், உன் வேல என்னன்னு தெரிஞ்சு வேலபாக்கணும்" என்று மிரட்டி அனுப்பப்பட்ட அதிபரும் சரித்திரப் புகழ் பில் க்ளிண்டன் தான். அதுவரை அதிபர் தான் எல்லாம். அவரை மீறி எதுவும் இல்லை என்று இருந்த அமெரிக்காவே கொந்தளித்துக் கண்டித்த தருணம் அது.

சரி தானங்க

சரி தானங்க

இப்ப சொல்லுங்க சார், மோனிகா லெவின்ஸ்கி தான முதல் #MeToo தைரியப் பொண்ணு. பில் க்ளிண்டன் தான #MeToo-ல் சிக்கிய முதல் பெரிய தலக் கட்டு. அமெரிக்க அதிபரே தப்ப ஒத்துக்கிட்டாரு.

வேதனை

வேதனை

மோனிகா லெவின்ஸ்கியின் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை "அதிகார துஷ் பிரயோகம் கிடையாது" என்று நம் காமக் கண்ணன் பில் க்ளிண்டனின் மனைவி ஹிலாரி க்ளிண்டன், அசால்ட்டாக பேட்டி கொடுத்திருக்கிறார். அதிகாரம் இருந்ததால தான உங்களால மோனிகா வெளிப்படையா உலகத்துக்கு சொன்ன பிறகும் அதிபர் பதவில இருக்க முடிஞ்சுது. இது அதிகாரம் இல்லாம வேற என்ன? ஹிலாரி மேடம் உங்கள மாதிரி நாலு பொம்பளங்க இருந்தா போதும் 4000 தனு ஸ்ரீ தத்தா வந்தாலும் நானா பட்டேகர் மாதிரி ஆட்கள நீங்க காப்பாத்திடுவீங்க இல்ல?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

American president is the first metoo accused victims in the world

American president is the first #MeToo accused in modern times
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X